பக்கம் எண் :

934
கருணாமிர்த சாகரம்.முதல் புஸ்தகம்.- நான்காவது பாகம் - கர்நாடக சங்கீதத்தின் சுருதிகள்

தேவர்கள் தேவனுக்கும், பிக்ஷாமடசந்தானத்து திருநாகீஸ்வரத்து இராவளர் சிஷ்யரில் திருஞானசம்பந்தருக்கும், இச்சந்தானத்து இராவளர் பசுபதீதேவ சிஷ்யரில் கலிகடிந்த கையனுக்கும், மதுரைதெற்கில்மட சந்தானத்து நீலகண்ட சிஷ்யரில் திருநெல்வேலி மாளிகைமடத்து அழகிய தேவர் சிஷ்யரில் திருநெல்வேலியுடையானுக்கும், பிக்ஷாமட சந்தானத்து இராவளர் பசுபதீதேவ சிஷ்யரில் சிவமுத்தி காட்டினானுக்கும், திருநெல்வேலி தெற்கில் மடத்துக் கீழமட சந்தானத்து அணுக்கவன்தொண்டர் சிஷ்யரில் அறமுரைத்த பெருமானுக்கும் இவர்கள் வர்க்கத்தில் திருஞானம் ஓதும்பேர்க்கும் போஜனமுள்ளிட்டு வேண்டுவனவுக்கு,,,,,,,,,,,,,இதுவும் திருநெல்வேலிசாசனம்.,,,,,,,,,

அப்பால் மூன்றாவது மாறன் சுந்தரபாண்டியன் மகுடந்தரித்திருத்தல் வேண்டும். கீழ்வரும் மெய்க்கீர்த்தி அவனது பிரதாபத்தை விளக்காநிற்கும்,

8 வது சாஸனம்.

ஸ்வஸ்திஸ்ரீ

பூமலர்த் திருவும் பொருஜெய மடந்தையுந்
தாமரை,,,,,,,,,,,,, முலைஐயப் புயத்திருப்ப
வேதநாவில் வெள்ளிதழ்த் தாமரை
கமல மாது கவின்பெறத் திளைப்ப
வெண்டிரை யுடுத்த மண்டனிக் கிடக்கை
இருநில மடந்தை தகமையிற் களிப்பச்
சைவமும் நீதியும் தருமமுந் தழைப்ப
இமையவர் விழாக்கோடி யிடந்தொறு மெழுப்பக்
கருங்கலிக் கனல்கெடக் கடவுள் வேதியர்
அறுதொழில் வேள்வி யருங்கனல் வளரச்
சுருதியுந் தமிழும் தொழுவளங் குலவ
பொருதிற லாழி பூதலஞ் சூழ்வர
ஒருகை யிருசெவி மும்மத நாற்கோட்,,,,,,,,,,,,,
டைராவதமுதல்,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,கயல்களிகூர
கோசலந்துஞ்,,,,,,,,,,,,,,,,,,, ககுசாடி
போசலமதத,,,,,,,,,,,,,,, புண்டரங்,,,,,,,,,,,,,,,,
கலிங்கமுங் கடராமுங்,,,,,,,,,,,,,,,,, ந்த
தெலிங்கஞ் சோனகஞ் சீனக முதலா
விதிமுறை நிதிகள் வேவ்வேறு குவித்து
முழுநிலக் கிழமையு முடிபுனை வேந்தர்க்
கொருதனிக் கடக னென்றுல கேத்த
,,,,,,,,,,,,,,,,,,,முடிசூடிச் செங்கோ லோச்சிக்
கொற்றத் தவளக் குளிர்குடை நிழற்ற
,,,,,,,,,,,,,,,,,,,,,க்கவரி காலவர் வீச
,,,,,,,,,,,,,,,,,,,,,நவமணி வீரசிம்மாசனத்து
உலக முழுதுடையாரோடும் வீற்றிருந்தருளிய
மாமுதல் மதிக்குலம் விளக்கிய
கோமுதல்கோ மாற வன்மரான திரிபுவன சக்ரவர்த்திகள் ஸ்ரீசுந்தரபாண்டியதேவர்க்கு.

இவ்வரசன் சுருதியின் மேலும் தமிழின்மேலும் வைத்துள்ள பேரபிமானத்தையே இங்கு கவனிக்கத்தக்கது. திருவாலீஸ்வரத்து சாஸனம்.

அப்பால் இரண்டாவது விக்ரமபாண்டியன். கீழ்வருவது இவனது மெய்க்கீர்த்திச் செய்யுள்.