பக்கம் எண் :

935
பாண்டிய அரசர்கள் முத்தமிழையும் ஆதரித்து வந்தார்கள் என்பதைக் காட்டும் சில சாசனங்கள்.

9-வது சாஸனம்.

  திருமகள் ஜெயமகள் திருப்புயத் திருப்ப
  பெருங்கடலாடும் நிலமகள் புணர
* கடவுண் மேருவிற் கயல்விளை யாட
  வடபுல மன்னர் வந்தடி பணிய
  நேமி வரைக்கு நெடுநில முழுதுந்
  த,,,,,,,,,,,,,,,,,,, வெண்குடை நீழலிற் பூப்பச்
  ,,,,,,,,,,,,,,,,,,,,,செங்கோல் நடப்பக் குரங்கலிதுரந்து
  வேதவிதியில் நீதி நிலவ
  ,,,,,,,,,,,,,,,,,,,,,திறை கொணர்ந்திரஞ்ச
  வீரமும் புகழு மேதக விளங்க
  நதிப்பெருஞ் சடைமுடி நாதன் சூடிய
  மதிககுலந் திகழ மணிமுடி சூடி
  விளங்கிய வீரசிம் மாசனத்து
  வீற்றிருந்தருளிய கோமாறபன்மரான திரிபுவனசக்ரவர்த்திகள்
  ஸ்ரீவிக்ரமபாண்டியதேவர்க்கு   ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

இச்சாசனம் பத்தன் மடைப்பெருமாள் கோயிலிலுள்ளது.

அடுத்தவன் மூன்றாவது குலசேகரபாண்டியன் எனச்சிலர்கூறுவர். கீழ்வருவது இவனைப்பற்றிய மெய்க்கீர்த்திச் செய்யுள்.

10-வது சாஸனம்.

  தேர்போலும்,,,,,,,,,,,,,,,,,,,, வார்பூணு மணிவடமுலை
  திருப்பாவை திருமார்பிலும் வரைப்பாவை வரைத்தோளினும்
  கலைவனிதை மலர்மனத்திலும் துனிபிரியா தினி திருப்பச்
  செங்கோல் நடப்ப வெண்குடை நிழற்றக்
  கருங்கலி முருங்கப் பெரும்புகழ் பரப்பக்
  கானக் கனல்வழி கடும்புலி சேர
+ மீன் பொன்வரைமீமிசை யோங்க
* முத்தமிழ்ப் பனுவலும் நான்மறை முழுது
  மெய்த்தவச் சைவசமயத்துடன் விளங்க
  சிங்கள,,,,,,,,,,,,,,,,, ஏழும்,,,,,,,,,,,,,,, லிங்கந்தே,,,,,,,,,,, ஏழும்
  கனங்குதிர,,,,,,,,,,,,,,,, ஏழும் குச்சரங்கி,,,,,,,,,,,,,, ஏழும்
  நெடுமுடி,,,,,,,,,,,,,,, ஏழு,,,,,,,, யாவணையும்,,,,,,,,,,,,,, ஏழும்
  வியங்செய்,,,,,,,,,,,,,,,,, ஏழும்,,,,,,,,,,,,,,, னின்ன
  திறைமுன் காட்டி யிருபுடை பொருந்தி
  விரிகதிர்க் கவரி வீசற் றென்றலும்
  வாடையு மின்ன வீசக் கனக
  சிம்மாசனத்தைக் கைபெறவிருத்தி
  பகையரசோட்டி,,,,,,,,,,,,,,,,,,,,,,,
  ,,,,,,,,,,,,,,,,,,,,,,,வீற்றிருந்தருளிய

ஸ்ரீகோமாறபன்மரான தரிபுவன சக்ரவர்த்திகள் ஸ்ரீ குலசேகர தேவர்க்கு ஆண்டு நாலாவது திருப்புடைமருதூர் சுவாமிநாறும் பூநாதர் கோவில் சாசனம்.