பக்கம் எண் :

936
கருணாமிர்த சாகரம்.முதல் புஸ்தகம்.- நான்காவது பாகம் - கர்நாடக சங்கீதத்தின் சுருதிகள்

11-வது சாஸனம்.

கீழ்வரும் வம்சாவளி, தென்காசிக் கோவிலுள்ள சிலாசாஸனங்களையும் செப்பேடுகளையும் ஆதாரமாகக் கொண்டு வரையப்பட்டது.

இதில் தென்காசி ஸ்ரீவிசுவநாதஸ்வாமி கோவில் கட்டின பராக்ரமபாண்டியன் மெய்க்கீர்த்திவருமாறு.

12-வது சாஸனம்.

சுபமஸ்து.

  பூமிசை வனிதை மார்பினிற் பொலிய
  நாமிசை கலைமகள் நலம்பெற விளங்க
  புயத்துணை மீது ஜயமகள் புணர
+ கயலிணை உலகங் கண்ணெனத் திகழச்
  சந்திர குலத்து வந்தவ தரித்து
  முந்தையோர் தவத்தின் முளையென வளர்ந்து
* தென்கலை வடகலை தெற்றெனத் தெளிந்து
  மன்பதை புரக்க மணிமுடி வனைந்து
  சங்கர சரண பங்கயஞ் சூடி
  செங்கோ லோச்சி வெண்குடை நிழற்றி
  மறக்களை பறித்துநல் லறப்பயிர் விளைத்து
  சிங்கையி லனுரையி லிராசையிற்செண்யில்
  விந்தையில் அறந்தையில் முதலையில் வீரையில்
  வைப்பாற்றோ,,,,,,,,,,,,,,,,,,,,,,,
  ,,,,,,,,,,,,,,,,,,னனாரைவெந் கண்டோட மாற்றி,,,,,,,,,,,,,,,,,
  பதினெண் பாஷைப் பார்த்திவ ரனைவரும்
  சிறையுஞ்சின்னமு முறைமுறை கொணர்ந்து
  குறை,,,,,,,,,,,,,,,,,,, விர்ந்து குறைகழ லிறைஞ்ச
  அவரவர் வேண்டிய தரவர்க்கருளி
  அந்தணர் அநேகர் செந்தழ லோம்ப
  விந்தைமுத லகரம் ஐந்திடத் தியற்றிச்