பக்கம் எண் :

937
பாண்டிய அரசர்கள் முத்தமிழையும் ஆதரித்து வந்தார்கள் என்பதைக் காட்டும் சில சாசனங்கள்.

சிவநெறி யோங்கச் சிவார்ச்சனை புரிந்து
மருது ரார்க்கு மண்டப மமைத்து
முன்னொருதுர் மூங்கிலுட் புக்கிருந்த
சிற்பரர் தம்மை திருவர்த்த சாமத்துப்
பொற்கலத் தமுது பெறல்வித் தருளிச்
சண்பக வனத்துச் சங்கரர் தமக்கு
மண்டப மமைத்து மணிமுடி சூடி
விழாவணி நடத்தி விரைபுன லாட்டல்
வழாவகை நடத்திநின் மலனரு ளதனால்
வற்றா வருவியும் வற்றி வற்கடம்
உற்றவிக் காலத் துறுபுனல்நல்கென
வேண்டிய பொழுதே வேறிடத் தின்றிச்
சேண்டரு புனலிற் செழும்புன லாட்டி
மின்கால் வேணி விசுவநா தர்க்குத்
தென்காசிப்பெருங் கோயில் செய்து
நல்லா கமவழி நைமித்தி யகமுடன்
எல்லாப் பூசையு மெக்கோ யிலினும்
பொருள்முத லனைத்தும் புரையற நடத்தித்
திருமலி செம்பொற் சிங்கா சனமிசை
உலக முழுதுடையாருடனே
இலகு கருணை யிரண்டுரு வென்ன
அம்மையு மப்பனு மாயனைத் துயிர்க்கும்
இம்மைப் பயனு மறுமைக் குறுதியு
மேம்படநல்கி வீற்றிருந்தருளிய
ஸ்ரீ,,,,,,,,,,,,,,,, பராக்ரம பாண்டியதேவர்க்கு யாண்டு இருபத்தெட்டாவது

கீழ்வரும் சாஸனம், நைடதம் காசிகாண்டம் கூர்மபுராணம் நறுந்தொகை முதலான நுல்களியற்றினவனான அதிவீரராமபாண்டியனது. இவ்வரசனுக்கு அழகன்பெருமாள், ஸ்ரீவல்லபன் முதலிய சிறப்புப் பேர்களுமுள.

13-வது சாஸனம்.

சுபமஸ்து.

புவநைகவீர, மதுராமஹேந்தர, ஜயந்தமங்களபுர வராதீஸ்வர க்ஷேமேஸ்வர சிம்மளகேரள தமோதிவாகர, சோளசிந்து வடபானல, சங்கீதஸாஹித்திய சார்வபௌம, தேவபிராமணஸ்தாபனாசாரிய கோஜடிலபர் மரான ஸ்ரீபெருமாள் அழகன்பெருமாள் அதிவீரராமனான ஸ்ரீவல்லபதேவர்க்கு,,,,,,,,,,,,,,,,,,,,,,

மற்றுமுள்ள அரசர்க்கும் மெய்க்கீர்த்திகளுள. இங்குவிரிவஞ்சி விடுக்கப்பட்டன.

இங்குக்கடைசியாய்க் காட்டிய அதிவீரராமபாண்டியன் காலத்திற்கு சிலநுற்றாண்டுகளுக்கு முன்னரே தமிழ்நாடுகளில், விஜயநகரத்தார் ஆட்சியும் நாயக்கர் துருக்கருடைய அதிகாரங்களும் வேறுவேறாகவும் ஒன்றிக்கலந்தும் மற்றும் பல பெயருடைய அதிகாரங்களும் நிகழ்ந்தனவாகத் தெரிகின்றன. அவைகளை யெல்லாமிங்கு வருஷமுறையாகத் துணிந்து கூறச் சரியான சாஸனங்கள் இன்னுங்கிட்டில.

ஊழிகாலந் தொட்டுத் தலைகொண்டு பரம்பரையால் நீண்டு வெகு கம்பீரத்துடன் இராச்சியாதிகாரம் படைத்து வந்த பாண்டிராஜபரம்பரை இக்காலத்திலில்லாமற் போகவில்லை. அம்பரம்பரையோர் இன்னுமிந் நாடுகளிலிருக்கவே செய்கிறார்கள். அவர்கள் உலகபரிபாலனஞ் செய்யும் பதவியைக் காலகெதியால் இழந்து விட்டாலும் பெயர் மாத்திரையால் சிற்சில அடையாளங்களுடைமையால் இன்னுமிவ்வுலகத்திலிருக்கவே செய்கிறார்கள். இவ்விஷயத்தை மற்றொருகாலத்தில் விரிவாய்வரையப்படும்.