வேள்விக்குடிச் செப்பேட்டில் சமஸ்கிருத பாகத்தில் கூறப்பட்டுள்ள பாண்டியராஜபரம்பரை. சந்திரகுலத்தின் பூர்வவம்சத்தார். | 1, | சந்திரன் | | 2, | புதன். பாண்டியனாக அவதரித்தான் | | 3, | புரூரவன் | | 4, | மாறவர்மன் | | 5. | ரணதீரன் | | 6. | மாறவர்மன் இராஜசிம்மன் | | 7. | ஜடீலா |
மேற்கண்ட சாசனங்களுள் | 4-வது சாசனத்தில் | “இன்னமு தாகிய இயல் இசை நாடகம் மன்னி வளர மணி முடி சூடி” என்றும் | | 5-வது சாசனத்தில் | “மயலறு சிறப்பின் மாமுனி தேர்ந்த இயல் இசை நாடகம் எழில் பெறவளர” என்றும் | | 6-வது சாசனத்தில் | “மூவகைத் தமிழும் முறைமையின் விளங்க எழுவகைப் பாடலும் இசையுடன் பரவ” என்றும் | | | | | 7-வது சாசனத்தில் “இவர்கள் வர்க்கத்தில் திருஞானமோதும் பேர்க்கும் போஜனமுன்ளிட்டு வேண்டுவனவுக்கு,,,,,,,,,,,,,,,,,, என்று” | | 8-வது சாசனத்தில் | “சுருதியுந் தமிழும் தொழு வளங்குலவ” என்றும் | | 10-வது சாசனத்தில் | “முத்தமிழ்ப் பனுவலும் நான்மறை முழுதும்” என்றும் | | 12-வது சாசனத்தில் | “தென்கலை வடகலை தெற்றெனத் தெளிந்து” என்றும் | | 13-வது சாசனத்தில் | “சங்கீத சாகித்திய சார்வ பௌம” |
என்றும் வரும் சில வரிகளை நாம் கவனிப்போமானால் பூர்வம் தமிழ் நாட்டிலிருந்த பாண்டிய ராஜர்கள் முத்தமிழில் மிகுந்த பிரியமுடையவர்களா யிருந்தார்களென்றும் ஆதரித்து வந்தார்களென்றும் மிகத் தெளிவாகத் தெரிகிறது. இவர்கள் மூன்றாவது சங்கம் கலைந்து சுமார் 1000 வருடங்களுக்குப் பின்னுள்ளவர்களாகத்தெரிந்தாலும் ஒருவாறு தங்கள் தங்கள் காலத்திற்கேற்றவிதமாக முத்தமிழையும் ஆதரித்து வந்தார்களென்று தெரிகிறது. இவர்கள் காலத்தில் இசைத் தமிழின் அருமையான பல நுல்கள் ஒருவாறு அழிந்து போயினவென்று உரையாசிரியர்களால் தெரிகிறது. பதின்மூன்றாம் நுற்றாண்டிலிருந்த ஜடாவர்மன் சுந்தர பாண்டியன் சிறந்த சிவ பக்தன் எனவும் பண்ணோடு தேவாரம் ஓதுதலை பாண்டிய நாட்டிலுள்ள பல கோயில்களிலும் ஓதும்படி செய்வித்தான் எனவும் தெரிகிறது. இதனால் ஜடாவர்மன் சுந்தர பாண்டியனுக்கு முன்னாலேயே தேவாரம் ஓதுதல் தமிழ் நாட்டில் வழக்கமாயிருந்ததென்றும் தேவாரத்தில் வழங்கிவரும் பல இராகங்கள் தமிழ் நாட்டிற்குரிய பெயர்களோடு அழைக்கப்பட்டனவென்றும் அவைகள் கடைச் சங்க காலத்துள்ள பிங்கல நிகண்டில் காணப்படுகின்றனவென்றும் இதன் முன் பார்த்திருக்கிறோம். அவ்விராகங்களில் பல மறைந்து தேவார காலத்தில் 24 இராகங்கள் வழங்கிவந்திருக்கின்றனவென்று 617, 618-ம் பக்கங்களில் பார்த்திருக்கிறோம். அதிலுள்ள பல இராகங்களை சங்கீத ரத்னாகரர் தம்முடைய நுலில் எடுத்துச் சொல்லியிருக்கிறார் என்பதை 621-ம் பக்கத்தில் தெளிவாகச் சொல்லியிருக்கிறோம்.
|