பக்கம் எண் :

941
பாண்டிய அரசர்கள் முத்தமிழையும் ஆதரித்து வந்தார்கள் என்பதைக் காட்டும் சில சாசனங்கள்.

“இன்னமு தாகிய இயல் இசை நாடகம்
மன்னி வளர மணிமுடி சூடி”

என்று சொல்வதைக் கொண்டு தமிழ் மக்களும் தமிழரசர்களும் முத்தமிழையும் எவ்வளவு அருமையாய் நினைத்திருந்தார்களென்று தெளிவாகக் காண்கிறோம்.

மேலும் இச்சாசனங்களைப் போலொத்த பாண்டிய ராஜர்களின் பல சாசனங்களையும் இங்கு கண்ட சாசனங்களின் வேறு சில சரித்திரக் குறிப்புகளையும் இங்கே சொல்ல அவசியமின்மையால் விடப்பட்டன.

இதில்கண்ட சில சாசனங்களும் வேறு பல பாண்டியநாட்டுச்சாசனங்களும் Mr. Gobinatha Rao, M. A. அவர்கள் எழுதிய First volume of the Travancore Archaeological series என்னும் புஸ்தகத்தில் விரிவாகக் காணலாம் என்று கேள்விப்படுகிறேன். அப்புத்தகம் இன்னும் எனக்குக் கிடைக்கவில்லை யாதலால் இங்கு வேறு சாசனங்கள் குறிக்க ஏதுவில்லை.

இதோடு சோழ ராஜ்யத்தில் 985 முதல் 1013 வரையும் ஆண்டு கொண்டிருந்த ராஜராஜ சோழன் தஞ்சையில் பிரசுதீஸ்வரர் ஆலயத்தைக் கட்டினான் என்று இதன் முன் பார்த்திருக்கிறோம். அவன் கட்டிய ஆலயத்தின் சுற்றுச் சுவரில் வெளிப் பக்கத்தில் வட மேற்கு புறத்தில் எழுதியிருக்கும் இரண்டு சாசனங்களை இதன் முன் 154-ம் பக்க முதல் சொல்லியிருக்கிறோம். அதில் முதல் சாசனத்தில் 48 பிடாரர்களும் நிலையாய் உடுக்கை வாசிப்பான் ஒருவனும் கொட்டி மத்தளம் வாசிப்பான் ஒருவனும் ஆக 50 பேரும் அவரவர்கள் முறைப்படி கோவில் சந்நிதியில் திருப்பதியம் விண்ணப்பம் செய்ய ஏற்படுத்தப்பட்டிருந்ததாகச் சொல்லப்பட்டிருக்கிறது. திருப்பதியம் என்பதை தேவாரத்திருப்பதிகம் என்றும் திருப்பதிகம் என்றும் தற்காலத்தில் நாம் வழங்கி வருகிறோம். இத்திருப்பதிகங்களுள்ள தேவாரத்திரட்டு என்னும் புத்தகத்தில் ஒவ்வொரு பதிகமும் பூர்வ தமிழ்ப் பண்ணின் பெயரோடு வழங்கி வந்ததாகத் தெரிகிறது. இப்பண்கள் ஓதும் முறையிலும் அவைகளுக்குரிய தாளத்தின் முறையிலும் பூர்வ தமிழ் மக்கள் மிகத் தேர்ந்தவர்களாயிருந்தார்களென்று இதன் முன் பார்த்திருக்கிறோம். மேலும், Ph. South Indian Inscription. By E. Hultzsch D Vol ii Part III. 252-ம் பக்கத்தில் சொல்லியிருக்கிறதாவது:-

“This inscription records an order of King Rajarajadeva, by which he assigned a daily allowance of pady to each of forty-eight persons, whom he had appointed before the 29th year of his reign, in order to recite the Tiruppadiyam in the temple and to two persons who had to accompany the other on drums. This statement is considerable importance for the history of Tamil literature as an unmistakable proof of the existence of the Siva hymns which go by the name of padivam or padiyam, and which are collected in the Devaram in the time of Rajaraja the names of the fifty incumbents serve to corroborate this identification of the Tiruppadiyam with the Devaram, as part of them are derived from the names of the authors of the Devaram, viz., Tiruganasambandan (Paragraph 7) or Sambandan (10, 22, 34, 38, 42), Tirunavukariyan (6, 12, 14, 19, 28, 43, 45,) and Nambi-Aruran (41, 44) or Aruran (19, 22).”

“இந்தச் சிலா சாசனத்தில் ராஜராஜ தேவர் என்னும் அரசனால் கொடுக்கப்பட்ட ஒரு கட்டளையானது கண்டிருக்கிறது. அதில் கோவிலில் திருப்பதியம் பாடும் 48 பேருக்கும் அவர்களுடன் சேர்ந்து மத்தளம் வாசிக்கும் இருவருக்குமாக அதாவது 50 பேர்வழிகளுக்குத் தினம் இவ்வளவு நெல் படியாகக் கொடுபடவேண்டும் என்றிருக்கிறது. திருப்பதியம் பாடும் இந்த 48பேரும் மத்தளம்அடிக்கும் இருவரும் அவனுடைய அரசாட்சியின் 29-வது வருஷத்திற்கு முன்னாலேயே அவனால் ஏற்படுத்தப்பட்டவர்கள். இந்த விஷயம் தமிழ்