பக்கம் எண் :

942
கருணாமிர்த சாகரம்.முதல் புஸ்தகம்.- நான்காவது பாகம் - கர்நாடக சங்கீதத்தின் சுருதிகள்

நுல் சரித்திர விஷயத்தில் அதிக முக்கியமானது. இதினால் பதியம் என்று பேருள்ள சிவ பாடல்கள் அக்காலத்திலேயே இருந்தனவென்றும், இவைகளெல்லாம் ராஜராஜ அரசனின் காலத்தில் உள்ள தேவாரம் என்ற பாடல்களில் காணப்படுகிறதென்றும் தெரிகிறது. இந்த ஐம்பது பாடகர்களுடைய பேர்களைப் பார்த்தால் திருப்பதியமும் தேவராமும் ஒன்றெனத் தோன்றுகிறது. ஏனென்றால் அந்தப் பேர்களில் சில தேவாரம் எழுதின திருஞானசம்பந்தன் (Para 7) அல்லது சம்பந்தன் (10, 22, 34, 38, 42) திருநாவுக்கரையன் (6, 12, 14, 19, 28, 43, 45) நம்பியாரூரன் அல்லது ஆரூரன் இவர்கள் பெயராயிருக்கின்றன,”

மேற்படி சாசனத்தின் கருத்தைச் சுருக்கமாகச் சொல்லுகிறார். இவைகள் தமிழ் மக்களுக்குப் பொதுவாகத் தெரிந்த விஷயமானதினால் திருப்பதிகங்களைப்பற்றி அவர் சொல்வதே போதுமென்று எண்ணுகிறேன். ராஜராஜசோழன் காலத்திலேயே தேவாரப்பதிகங்களிலில்லாமல் போனதுபோக மீதியாயிருந்தவைகளை ஒழுங்குபடுத்தி ஆலயங்களில் சொல்லும்படி ராஜராஜசோழன் செய்தான். தேவாரத் திருப்பதிகங்களை சோழநாட்டில் பண்முறை அறிந்து சொல்லத் தெரியாமலிருந்ததினால் திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார் மரபில் உதித்த ஒரு ஸ்திரீயை வரவழைத்துப் பண் முறைகள் யாவும் படிக்கக்கேட்டுக் கொண்டார் களென்று திருமுறை கண்ட புராணத்தில் சொல்லப்படுகிறது. அவைகளை நாம் கவனிக்கும் பொழுது ராஜராஜ சோழன் காலத்திலேயே அதாவது சுமார் 900 வருஷங்களுக்கு முன்னாலேயே திருப்பதிகங்கள் அநேகம் வழக்கத்திலில்லாமல் போயினவென்றும் அவைகளின் சிலபாகம் மாத்திரம் மிஞ்சியிருந்தனவென்றும் தெரிகிறது. அது போலவே தேவாரப் பதிகங்களுக்குச் சொல்லப்பட்ட பல இராகங்களும் அதோடு மறைந்து போயிருக்கவேண்டும். மிஞ்சியிருந்த தேவாரப்பதிகங்களில் காணப்படும் இராகங்களுக்குமாத்திரம் பெயர்கள் சொல்லப் படுகின்றன. அப்பண்களும் இன்னவையென்று தெரியாமல் அந்நியரால் பெயர் மாற்றப்பட்டு நாளதுவரையும் வழங்கி வருகின்றன.

ராஜ ராஜ சோழன் காலம் பத்தாம் நுற்றாண்டென்று சாசனங்களில் மூலமாகத் தெரிகிறது. சங்கீத ரத்னாகரரின் காலமோ 1210 முதல் 1247 வரையுமாம். ஆகையினால் 13-ம் நுற்றாண்டென்று நாம் சொல்லியிருக்கிறோம். இவ்விதத்திலும் தஞ்சை பெரிய கோயிலில் தேவாரப் பண்கள் சொல்ல 50 பேர் ஏற்பட்ட பிறகே சங்கீத ரத்னாகரர் தக்கவிபாஷா தேவார வர்த்தினி என்று எழுதியிருக்கிறதாக நாம் அறியவேண்டும். தமிழ் நாட்டின் பல பண்கள் பாடப்பட்டு வந்த பிறகே சாரங்கதேவர் சங்கீத ரத்னாகரம் எழுதியிருக்கிறார் என்று தெரிகிறது. இப்படியிருக்க சங்கீத ரத்னாகரமே பூர்வ நுல், சமஸ்கிருத பாஷைக்குப் பிறகே சங்கீதம் உண்டாயிற்று, தமிழர்களுக்குச் சங்கீதம் தெரியவே தெரியாது என்று குதர்க்கமிடுவோர் மேற்படி சாசனம் எழுதியிருக்கும் கல்லைப்பார்ப்பார்களாக.

2, தமிழ்நாட்டில் இசைத்தமிழ் அல்லது சங்கீதம் மிகுந்த பழக்கத்திலிருந்தது என்பதற்குச் சில திஷ்டாந்தம்.

உலகத்தவர் யாவரிலும் மிகப் பூர்வமாயுள்ளவரும் மனுஷஜாதி யுண்டானது முதல் பேசப்பட்டு வரும் மிகத் தொன்மையும் இனிமையுமான தமிழ்ப் பாஷை பேசிவருபவருமாகிய தமிழ் மக்கள் சுமார் 22,000 வருடங்களுக்கு முன்பே சகல கலைகளிலும் தேர்ச்சிப் பெற்றிருந்தார்களென்றும் சுமார் 12,000 வருடங்களுக்கு முன்னிருந்து இற்றைக்கு 2,000 வருடம் வரைக்கும் மூன்று சங்கங்கள் வைத்து இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழையும் பலகலைகளையும் வளர்த்து வந்தார்களென்றும் அதன்பின் நாளது வரையும் தமிழை ஆதரித்து வருகிறார்