பக்கம் எண் :

943
தமிழ்நாட்டில் இசைத்தமிழ் அல்லது சங்கீதம் மிகுந்த பழக்கத்திலிருந்தது என்பதற்குச் சில திஷ்டாந்தம்.

களென்றும் நாம் பார்த்தோம். இதில் இசைத்தமிழில் அல்லது சங்கீதத்தில் ஆயப்பாலையாய் வரும் பன்னிரு சுரங்களையும் அவற்றிலுண்டாகும் இராகங்களையும் வட்டப்பாலையாய் வழங்கும் 24 சுருதிமுறைகளையும் அவற்றில் இணை கிளையாய் வரும் சுரங்களில் இரண்டு அலகு குறைத்து 22 சுருதிகளில் கானம் செய்வதினாலுண்டாகும் நாலுபெரும் பண்களையும் அவற்றின் நாலு ஜாதிப் பண்களையும் வட்டப்பாலை முறையின் படி 1/2 அலகில் பாடும் திரிகோணப் பாலையையும் 1/4 அலகில் பாடும் சதுரப்பாலையையும் சொல்லி அம்முறைக் கிணங்க மிக நுட்பமான சுரங்களோடு 12,000 ஆதிஇசைகளில் பண்கள் பாடிப் பகவானை ஆராதித்தார்கள் என்று பார்த்தோம்.

மிகுந்த நாகரீகமும் தேர்ச்சியுமுள்ள இக்காலத்தில் 12,000 வருடங்களுக்கு முன்னுள்ள தமிழையும் அதைச்சேர்ந்த கலைகளையும் அதற்குப் பின்னுள்ள மூன்று சங்கங்களையும் சங்கத்தார் வழங்கி வந்த நுல்களையும் அவர்கள் வழங்கி வந்த இசைத்தமிழாகிய சங்கீதத்தையும் அதில் இப்போது யாவரும் வழங்கி வரும் 1/2 சுரங்களுக்கும் நுட்பமாக (1/4),(1/8),(1/16)சுரங்களையும் நாலு பாலைகளையும் நாலு பெரும் பண்களையும் நாலுஜாதி பண்களையும் பற்றிக்கேட்கும் பொழுது மிகுந்த ஆச்சரியப் படுவோம். சங்கீத விஷயத்தில் இவ்வளவு தேர்ச்சி பெற்றிருந்தார்களா, இது நுதனமா யிருக்கின்றதே என்று பிரமிப்படைவோம். இப்பூர்வ தேர்ச்சிக்கேற்ற படி தற்காலத்தில் தமிழ் நாட்டில் அனுபோகம் உண்டா என்று விசாரிக்க நினைப்போம். இவ்விஷயத்தில் விசாரிக்கும் விவேகிகளுக்கு ஞாபகப்படுத்தும் சிலமுக்கிய குறிப்புகளை மாத்திரம் சொல்ல வேண்டுமென்று நினைக்கிறேன்.

இயற்கை அமைப்பில் ஜீவப்பிராணிகளில் காணப்படும் வெவ்வேறு ஓசைகள் சேர்ந்து அமைந்த முதல் பாஷை தமிழ் என்றும் அப்பாஷையின் வார்த்தைகள் பல விகாரங்களை யடைந்தும் அடையாமலும் பல பாஷைகளில் வழங்கி வருகின்றனவென்றும் இதன் முன் பார்த்திருக்கிறோம்.

லெமூரியாவென்றழைக்கப்படும் ஏழு தீபங்களுள்ள தமிழ் நாட்டை ஏழு ஏழாகப் பிரித்து தென்மதுரையை தலைநகராக்கி ஆண்டு கொண்டு வந்த பாண்டியராஜர்களும் தமிழ் மக்களும் ஜீவப்பிராணிகளை ஏழுவகையாகப் பிரித்து அவைகளின் நாதபேதங்களையும் ஏழுவகையாகப் பிரித்து அவற்றிற்கேற்ற இலக்கணமும் சொல்லியிருக்கிறார்கள். ஜீவப்பிராணிகள் யாவற்றிலுமிருந்துண்டான இனிய ஓசையை இவை யாவற்றிற்கும் ஆதி காரணனான கர்த்தன் கேட்டு ஆனந்திக்கிறான். இவைகளில் ஏழு சுரங்களுக்கும் அவற்றில் வழங்கும் நுட்பமான சுரங்களுக்கும் இலக்கணம் ஏற்படுத்தி அச்சுரங்களைக் கொண்டு தமிழ் மக்கள் பகவானை ஆராதித்துக் கொண்டு வந்தார்கள். தமிழ் மக்களின் சங்கீதத் தேர்ச்சிக்குப் பிறகே மற்றவர்கள் தேர்ச்சிக்கு வந்தார்களென்பதையும் வருகிறார்களென்பதையும் நாம் மறந்து போகக்கூடாது. பல் ஆயிர வருடங்களுக்கு முன் தொட்டு வழங்கிவந்த ஆயப்பாலையின் பன்னிருசுரங்களின் பொருத்தம் இன்னதென்று அறியாமல் பல் ஆயிர வருடங்கள் சங்கடப்பட்டு இற்றைக்கு 120 வருடங்களுக்கு முன்தான் சிலர் சரியான அளவிற்கு வந்தார்கள். ஓசையின்படி அளவு ஒத்துவந்தாலும் கணிதத்தின்படி ஒத்துவராமல் இன்றைக்கும் பல தர்க்கங்கள் உண்டாகிக் கொண்டிருக்கின்றன. ‘பட்சியும் பாடுகிறது, பைத்தியக்காரனும் பாடுகிறான்‘ என்றிருக்குமானால் பாடத்தெரியாத மனிதர்கள் இல்லை என்று நாம் அறிவோம். ஆனால் பன்னிருசுரங்களிலும் 22 சுருதிகளிலும் இன்றைக்கு தகராரிருந்து சபைகூடி விசாரிக்கிறார்களென்றிருக்குமானால் பூர்வ தமிழ்மக்களின் நாலு பாலைகைபை்பற்றியும் அதில் அவர்கள் வழங்கிவந்த நுட்பசுரங்களைப்பற்றியும் எவர் சொல்லத்திறமுள்ளவர்?