பக்கம் எண் :

948
கருணாமிர்த சாகரம்.முதல் புஸ்தகம்.- நான்காவது பாகம் - கர்நாடக சங்கீதத்தின் சுருதிகள்

Revival of Hindu Music.

“Patriotic Hindus have of late endeavoured to bring about a musical revival upon the old Snaskrit basis. No Englishman has yet brought an adequate acquaintance with the technique of Indian instrumentation to the study of Hindu music. The art still awaits investigation by some eminent western professor; and the contempt with which Europeans in India regard it, merely proves their ignorance of the system on which Hindu music is built up.”

“தேசாபிமான முள்ள இந்தியரில் சிலர் விழுந்து கிடக்கும் இந்திய சங்கீதத்தைப் பழைய சமஸ்கிருத சுருதிகளைக் கொண்டு உயிர்ப்பிக்க வேண்டுமென்று சிறிது காலங்களுக்கு முன் பிரயத்தனம் செய்தார்கள். இந்திய சங்கீதத்திற்கு என்று வழங்கும் வாத்தியங்களைப் பற்றிய நுட்பமான அறிவு ஐரோப்பியர் ஒருவருக்கும் இராததால் அவர்களும் இந்திய சங்கீதத்தை வாத்தியங்களைக் கொண்டு ஆராய்ச்சி செய்து முடிவுக்குக் கொண்டுவர ஏதுவில்லை. ஐரோப்பிய வித்துவான் ஒருவர் கிளம்பி அதைப்பற்றிய ஆராய்ச்சி செய்ய வேண்டுமென்று இந்திய சங்கீதமானது ஆவலோடே காத்திருக்கிறது. ஆனால் ஐரோப்பியர் இந்திய சங்கீதத்தைப்பற்றி இழிவாய் நினைக்கிறார்களே யென்றால் அது இந்திய சங்கீதத்தைப்பற்றி அவர்களுக்கிருக்கும் அறியாமையைக் காண்பிக்கிறதே யொழிய வேறல்ல”

மேற்கண்ட சில வசனங்களினால் இந்திய சங்கீதத்தைப் பழைய சமஸ்கிருத சுருதிகளைக் கொண்டு சீர்ப்படுத்த வேண்டு மென்று சபை கூடிப் பிரயத்தனப் பட்டதாகவும் அதில் யாதொரு பயனுமுண்டாகாமற் போனதாகவும் அப்படிச் சீர்ப்படுத்த முடியாமல் அநாதரவாய்விடப்பட்ட இந்திய சங்கீதம் தன்னை எடுத்து நிறுத்த ஒரு ஐரோப்பிய வித்துவான் வரும்படி ஆவலோடு காத்துக் கொண்டிருக்கிற தென்றும் சொல்லுகிறார்.

இதைக் கவனிக்கும் பொழுது சில காலத்திற்கு முன் பூனாவில் வட தேசத்திலுள்ள பல வித்துவான்கள் சங்கம் கூடித் துவாவிம்சதி சுருதியைப்பற்றி ஆராய்ச்சி செய்தபோது பல அபிப்பிராய பேதங்கள் உண்டாகி ஒன்றோடொன்று ஒவ்வாமல் முடிவாகப் ‘பழைய சொக்கே சொக்கு‘ என்ற கதைபோல் பழைய முறைப்படியே கானஞ் செய்துகொண்டு வந்தார்கள் என்று 421-ம் பக்கத்தில் பார்த்திருக்கிறோம். அதிலிருந்து பல அபிப்பிராய பேதங்கள் கணக்குகள் விருத்தியாகி 1916-ம் வருடம் மார்ச்சுமாதம் 20-ம் தேதியில் மாட்சிமை தங்கிய பரோடா மகாராஜா அவர்களால் கூட்டப்பட்ட All India music conferenceல் பல வித்துவான்களால் பல வியாசங்களும் படிக்கப்பட்டதோடு பல திருஷ்டாந்தங்களும் பாடிக்காட்டப்பட்டுத் தர்க்கம் செய்யப்பட்டது.

அதில் வடதேசத்தில் வழங்கும் இந்துஸ்தானி கீதத்திற்கு Staff notationஐக் குறித்துச் சங்கீதத்தைக் கற்க விரும்பும் மாணாக்கர்களுக்கு ஆரம்ப பாடமாக ஒரு சுலபமான முறை ஏற்படுத்தவேண்டும் மென்று Mr. V. N. Bhatkhande அவர்களால் ஒரு அபிப்பிராயம் கொண்டுவரப்பட்டது. அச்சமயம் பூர்வம் தமிழ் மக்கள் வழங்கி வந்த ஆயப்பாலையின் பன்னிரு சுரங்களே தற்காலம் கர்நாடக சங்கீதத்தில் வழங்கி வருகின்றனவென்றும் இவற்றையே மேற்றிசையார் Equal temperament என்று சொல்லுகிறார் களென்றும் இவைகளே நாம் வழங்கி வரும் வீணையிலும் ஆர்மோனியம் பியானாவிலும் சொல்லப்படும் சுரங்களாயிருக்கின்றன வென்றும் இவைகளின்படியே இந்துஸ்தானி கானத்திற்கு Staff notation குறித்துக் கொள்ளலாம் என்றும் என்னால் சொல்லப்பட்டது.

சங்கீத ரத்னாகரர் சொல்லுகிற 22 சுருதிகளை விட்டு விட்டு 27 சுருதிகளில் தயார் செய்யப்பட்ட ஆர்மோனியத்தின்படி சுருதிகளிருக்க வேண்டு மென்று Mr. E. Clements I. C. S., Dt. Judge அவர்களால் பிரரேபிக்கப்பட்டு Mr. K. B. Deval, Retired Deputy