சங்கீத ரத்னாகரரின் சுருதி முறைகளைப்பற்றிய சில சூத்திரங்களைப் பாடம் செய்து கொண்டு சங்கீதரத்னாகரருடைய அபிப்பிராயத்தின்படி ஒரு ஸ்தாயியில் 22 சுருதிகள் தான் வரவேண்டும் என்று பல வருடங்கள் வாதித்துக்கொண்டிருக்கும் ஒரு கர்நாடக வித்துவானைச் சங்கீத ரத்னாகரரின் முறைப்படி 22 சுருதிகள் வரும் ஒரு கீர்த்தனம் பாடிக்காட்டுங்கள் என்று சொன்னால் பழகிச் சொல்லுகிறேன். இன்னும் இரண்டு மாதம் செல்லும் என்று சொல்லுவாரா? தாம் படித்துச் சீவனம் செய்யும் சங்கீதம் ஒன்று, கடுகாதிசியில் (2/3),(3/4) என்று பெருக்கிக் காட்டும் சங்கீதம் மற்றொன்று, இன்னும் இரண்டு மாதத்தில் படித்துச் சொல்லுகிறேன் என்ற துவாவிம்சதி சுருதி சங்கீதம் வேறொன்றுமா? இப்படி மூன்று விதமாய் ஒன்றைச் சொன்னால் அது கெடாமல் நல்ல தாகுமா? ஒரு பிராமணன் யாகத்திற்குக் கொண்டுபோன ஆட்டைத்திருட நினைத்தவர்களில் ஒருவன் இது நாயென்றும், மற்றொருவன் கழுதையென்றும், வேறொருவன் செத்த கன்றுகுட்டி என்றும் சொல்லி இது பிசாசாயிருக்குமோ என்று அவனைச் சந்தேகிக்கும்படிச்செய்து வஞ்சித்த கதையாகுமே. இசைத்தமிழுக்குப் பூர்வ தமிழ் மக்கள் சொல்லிய உண்மை இன்னதென்று தெரியாமல் பலர் பலவிதமாக நுல் எழுதினதாக இதன் பின் வரும் வசனங்களால் தெரிகிறது. Introduction to the study of Indian music by E. Clements “Modern Text Books may appear learned to the uninitiated; the historian will, however frankly admit that, since the days of the Sangit Ratnakar, Indian musical systems have fallen into such confusion that no one has been able to reconcile the teaching of that authoritative treatise with later works on the subject, or with the practice or theory of modern musicians. The art is also in grave danger of being spoiled as other Indian arts have in the past been spoiled by cheap imitation. Contact with the west has resulted in a blend of Indian music with European intonation, a combination in the highest degree inartistic and likely to prove more harmful than the neglect of centuries.” “தற்காலம் எழுதப்பட்டிருக்கும் சங்கீதநுல்கள் சங்கீத ரகசியம் தெரியாதவர்களுக்கு வெகு கல்வித் திறமையுடன் எழுதப்பட்டவைகளாய்த் தோன்றும். ஆனால் சங்கீத ரத்னாகரம் என்றநுல் எழுதப்பட்டதற்குப் பின் இந்திய சங்கீத முறைகளில் உண்டான குழப்பங்களினால் அந்த நுலுக்கும் அதற்குப்பின் ஜனித்த நுல்களுக்கும் தற்கால வித்வான்களின் பழக்கத்துக்கும் ஒருவித ஒற்றுமையும் இராது என்பதைச் சரித்திரக்காரர் யாவரும் ஒளிக்காமல் ஒப்புக் கொள்வார்கள். மற்ற இந்திய தொழில்களும் வித்தைகளும் முற்காலத்தில் அவைகளை நடித்துக் காட்டுகிறவர்களால் க்ஷீணித்துப்போனது போல இந்திய சங்கீதமும் அப்படிப் பட்டவர்களால் கெட்டுப்போவதற்கு ஏதுவாயிருக்கிறது. மேற்கு தேசத்தாரோடு பழகியதால் இந்திய சங்கீதமும் ஐரோப்பிய இராகத்துவக்க முறைகளும் கொஞ்சமாவது சுகமில்லாமல் கலந்ததானது இந்த சங்கீதத்திற்கு அநேக ஆண்டுகளாய்த் தேடுவாரற்று இருந்ததினால்உண்டான தீமையைவிட இப்படிக் கலந்ததினால் உண்டான தீமை அதிகமாயிற்று,” மேற்கண்ட வாக்கியங்கள் Mr. E. Clements I. C. S., Dt. Judge என்பவர்களால் எழுதப்பட்டதாகத் தெரிகிறது. இவர் எழுதிய புத்தகத்தின் முகவுரையில் காணப்படுகிறது. அதில் சங்கீத ரத்னாகரம் என்ற நுல் எழுதப்பட்ட பிறகு இந்திய சங்கீத முறைகளில் அதிகக் குழப்பம் உண்டாயிற்றென்றும அந்நுலுக்குப்பிறகு அநேக நுல்கள் உண்டாயினவென்றும் ஆனால் வித்துவான்களின் பழக்கத்திற்கும் நுல்களுக்கும் எவ்வித ஒற்றுமையுமில்லை என்றும் சொல்லுகிறார்.
|