Captain Day. “Parijata differs from that of the Ratnakara, in that it admits of greater intervals than a tone or four Sruties and of less intervals than a semi tone or two sruties being therefore capable of forming numerous enharmonic scales. All the notes except the first and fifth are occasionally shifted above or below and the fourth is never omitted. This work contains the key to the present Karnatic system.” “பாரிஜாதத்துக்கும் ரத்னாகரத்துக்கும் உள்ளபேதம் என்ன வென்றால், பாரிஜாத மானது ஒரு tone அல்லது 4 சுருதிகளைவிட பெரிய இடைவெளிகள் இருக்கலாமென்றும் ஒரு அரை tone அல்லது இரண்டு சுருதிகளைவிடச் சிறிய இடைவெளி வரலாமென்றும் சொல்வதால் அநேக Enharmonic scales ஏற்படுவதற்குரிய ஒரு முறையாயிருக்கிறது. முதலாவது ஐந்தாவது சுரங்கள் நீங்கலாக மற்ற சுரங்களை மேலும் கீழும் வேண்டியபோது தள்ளிக் கொள்ளலாம். நாலாவது சுரம் ஒருபோதும் விட்டுப்போகக்கூடாது. பாரிஜாதமானது தற்கால கர்நாடக சங்கீதத்துக்கு ஒரு திறவுகோல்.” தென்னிந்திய சங்கீதத்திலுள்ள சில விஷயங்களை எழுதியிருக்கும் Capt. Day என்பவர் கர்நாடக சங்கீதத்தில் 24 சுருதிகள் வழங்கி வருகின்றனவென்று ஒருவாறு அறிந்து சங்கீதரத்னாகரத்திற்கும் பாரிஜாதத்திற்கும் வித்தியாசமிருக்கிறதாகச் சொல்லுகிறார். இவ்விஷயத்தில் அவர் சொல்வதை மேற்கண்ட வரிகளில் கவனித்தோம். அதில்நாலு சுருதிகளைப் பார்க்கிலும் பெரிய இடைவெளிகள் வரலாமென்றும் இரண்டு சுருதிகளைப் பார்க்கிலும் சிறிய இடைவெளி வரலாமென்றும் சொல்லுகிறார். இதில் நாலு சுருதிகள் என்பது ஒரு முழுச் சுரம். அதாவது சதுர் சுருதி ரிஷபம் போல், இரண்டு சுருதி என்பது ஒரு அரைச் சுரம். ஒரு முழுச் சுரத்தோடு வீசம் சுரம் சேர்ந்து அல்லது கால் அலகு சேர்ந்து வருவதை 878-ம் பக்கம் சதுரப்பாலை இராகங்களுள் ஏழாவது செஞ்சுருட்டி இராகத்தில் காட்டியிருக்கிறோம். அப்படியே சதுரப்பாலை இராகங்களுள் ஐந்து அலகில் கால் அலகு குறைந்து வருவதையும் நாலு அலகில் கால் அலகு குறைந்து வருவதையும் இதன் முன் பார்த்திருக்கிறோம். ஒரு சுரத்தில் வீசம் சுரம் சேர்ந்து வரும்பொழுது அது இன்னதென்று அறிந்துகொள்ள இயலாமல் முழுச் சுர மென்றே சொல்வது வழக்கமாயிருக்கிறது. இதுபோலேவே குறைந்து வருகிற சுரத்தையும் முழுச் சுரமாகவே சொல்லிக்கொண்டு வருகிறோம்.. திரிகோணப்பாலையைச் சேர்ந்த சங்கராபரண இராகத்தில் ரிஷப தைவதங்கள் 41/2 அலகாக வருகின்றன. அதாவது ஒரு முழுச் சுரத்தோடு அரைக்கால் சுரம் சேர்ந்து வருகிறது. நாலு சுருதியுள்ள ரிஷபம் முழுச் சுரமென்று நாம் அறிவோம். சங்கராபரண இராகத்திற்கு நாலு சுருதியுள்ள ரிஷப தைவதங்கள் தான் வருகின்றனவென்று வாயினால் கணக்குச் சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஆனால் வாயினால் 11/8 சுரம் அல்லது 41/2 அலகாகப் பாடிக்கொண்டிருக்கிறோம். 41/4 அலகாகப் பாடும் செஞ்சுருட்டியில் வரும் ரிஷபமும் 41/2 அலகாகப் பாடும் சங்கராபரணமும் சதுர் சுருதி ரிஷப மென்றே சொல்லப்படுகின்றன. இதனால் ஓசையின் தாரதம்மியத்தை நுட்பமாய்க் கவனிக்காமல் எல்லாம் நாலு அலகு ரிஷப மென்று சொல்லிப் பழக்கத்திற்கு வந்து விட்டது. இக்கூடுதலான ஓசையை முழுச் சுரங்களிலிருந்தாவது அரைச் சுரங்களிலிருந்தாவது கமகமாய்ப் பிடித்து வாசிப்பது பூர்வம் யாழ் வாசிக்கும் தமிழ் மக்களுக்கு மிகச் சாதாரணமாய்ப் பழக்கத்திலுள்ளது. வார்தல், வடித்தல், உந்தல் முதலிய வீணைக்குரிய கைலாகவத்தை
|