தஞ்சாவூர் சதாவதானம், மகா- - -ஸ்ரீ சுப்பிரமணிய ஐயரவர்கள் இயற்றிய ஆசிரிய விருத்தம். 1. அந்நாளி லியற்றமிழி லகத்தியனா மொருமுனிவ னனைத்து மாராய்ந் தென்னாகு மொழிக்குமுடி வாமெழுத்துச் சுருதியெண்மூன் றென்னக் கண்டான் இந்நாளி லிசைத்தமிழிற் சுரமுடிவாஞ் சுருதிமூவெட் டென்னக் கண்டான் மன்னாகு மாப்பிரகாம் பண்டிதன்றான் புலமைப்பேர் மாண்பி வற்கே. முடிவாம் எழுத்து எ-து ஆவி ஞணநமன யரலவழளமெய் சாயுமுகர நாலாறு மீறே என்றபடி. சுருதி-ஒலி. சுரம்-சத்த சுரங்கள். புலமைப் பேர் எ-து பண்டிதன் என்னும் பெயர். மாண்பு-சிறப்பு. இவற்கு-இந்த ஆப்பிரகாம் என்பவனுக்கு. ஏகாரம் பிரிநிலை. 2. முத்தமிழு ளியற்றமிழின் முடிவாகு மெழுத்துகள் மூவெட் டென்ற கத்தியன்றேர்ந் தானாட கத்தமிழி னிருத்தவகை களைமூன் றெட்டென றத்தமிழ்நா டன்றேர்ந்தா னிசைத்தமிழிற் சுரச்சுருதி யாறு நான்கென் றத்தமிகு மாப்பிரகாம் பண்டிதன்றேர்ந் தானடுநா யகமீ தாமே. முத்தமிழ்-இயல், இசை, நாடகம். நிருத்த வகைகள்- கூத்தின் விகற்பம். அத்தமிழ்நாடன்-ஒரு பாண்டியன். சுரச்சுருதி- சத்த சுரங்களின் ஒலி. நடுநாயகம்-நடுவிலுள்ள இசைத்தமிழ்ச்சுருதி. மீது ஆம்-மேலாகும். ஈது ஆமென்றுங்கொள்ளலாம். ***************** பெரிய குளந்தாலூகா பூசாரிக்கவண்டன் பட்டி மகா- - -ஸ்ரீ ச. திருமலைவேலுக் கவிராயர் அவர்கள் சொல்லிய கவிகள். விருத்தம் பொங்குதிரைக் கடற்புவியிற் பண்டைநூ லெதுவெனத்தான் பொருந்த நாடிச் சங்கையறத் தெரிபுநற்சங் கீதசங்க மொன்றமைத்து தனது சீர்த்தி யெங்கும்விளக் கியதெனவின் னிசைத்தமிழை விளக்கினனா லெழில்சேர் தஞ்சைத் துங்கமுறு மாபிரகாம் வள்ளல்பெருந் தன்மையையார் சொலவல் லாரே. வெண்பா. நாமே விசைத்தமிழை நன்குவிளக் கிக்கடல்சூழ் பூமே லாழியாப் புகழ்படைத்தாய்-மாமேன்மை தள்ளா விளிமைத் தமிழுணர்ந்த வாபிரகாம் வள்ளா லுனக்கெவர்நேர் வார். விருத்தம். கரவறுசீர்த் தஞ்சையிற்சங் கீதவித்யா மகாசனசங் கத்தி ருந்து சரதகுண வாபிரகாம் பண்டிதமே லோனருமைத் தவத்தால் வந்த மரகத வல்லியுங் கனக வல்லியும்பா டியவதிக மதுரகீத விரதமுணர்ந் தவர்தமக்கு வெலப்பாகுங் கசப்பாகு மிதுமெய் தானே.
|