போல, ஒவ்வொருதேசத்தின் கானமும், அந்தந்தத் தேசத்தார் மனதைப் பரவசப்படுத்தி, தேடரும் திரவியக்குன்றாகிய தெய்வத்தையும் தன்னிற்காட்ட சக்தியுடையதாயிருக்கிறது. "ஆதியிலே வார்த்தை (நாதம்) இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை (நாதம்) தேவனாயிருந்தது. அவர் ஆதியிலே தேவனோடு இருந்தார். சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவரையல்லாமல் உண்டாகவில்லை. அவருக்குள் ஜீவனிருந்தது, அந்த ஜீவன் மனிதருக்கு ஒளியாயிருந்தது. உலகத்திலே வந்து எந்த மனிதனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி. அவர் உலகத்தில் இருந்தார், உலகம் அவர்மூலமாய் உண்டாயிற்று, உலகமோ அவரை அறியவில்லை, இந்த வார்த்தை (நாதம்) மாமிசமாகிக் கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய் நமக்குள் வாசம் பண்ணினார்." (யோவான் 1 - 1 முதல்) எல்லாவற்றிற்கும் ஆதிகாரணமாயிருந்த நாதத்தினால் உலகம் படிப்படியாய் சூட்சும தூல தோற்றத்தையடைந்தது. தூல சூட்சம காரணமென்னும் முந்நிலைகளையும் அடைந்த ஜீவர்களுடைய உள்ளத்திலிருந்து, அவர்கள் கருத்தைத் தெரிவிக்கச் சூட்சமமான பலபல இனிய தொனிகளும், தூலமான பலபல அபிநயங்களும் உண்டாயின. கருத்தைத் தெரிவிக்கும் தொனிகளும் அபிநயங்களும், காலக்கிரமத்தில் பாஷையாகி வரிவடிவமாய் எழுதப்பட்டு, நூல்களும் சாஸ்திரங்களும் கலைகளுமாயின. தாங்கள் மிகவும் அருமையாக நினைத்தவைகளும், வாழையடிவாழையாய் வந்த பரம்பரையாருக்குப் பாடம் சொல்லிவைத்து வந்தவைகளுமான தெய்வ தோத்திரங்களையே, முதல் முதல் எழுதிவைத்தார்கள். அதினாலேயே அதற்கு முதல் நூல் என்று பெயர் உண்டாயிற்று. காதினாலேயே கேட்டுப் பாடமாக்கிக் கொண்டிருந்த காலத்தில், அதைச் சுருதி என்றார்கள். முதல் நூல் உண்டானபின், அதன் உட்பொருளை அறிவதற்கு ஏதுவான உபாங்கங்களையும் உபநிடதங்களையும் ஆறு சாஸ்திரங்களையும் அறுபத்துநாலு கலைகளையும், அவைகளை நுட்பமாய் விளக்குவதற்கு ஏதுவாக இதிகாசங்களையும் புராணங்களையும் செய்தார்கள். தெய்வ பக்தர்களின் இருதயமாகிய களஞ்சியத்திலிருந்து வரும் செய்யுள்களில் மறைந்திருக்கும் கருத்துகள், உள்ளபடி அர்த்தமாவது கூடியதல்லவே. நாத பிரமத்தையே கீதமாய்த் தோத்திரிக்கும் வேதம் எப்படி முக்கியமானதோ, அப்படியே நாத பிரமத்தையே விஸ்தரிக்கும் சங்கீத சாஸ்திரமாகிய காந்தர்வ வேதமும் முக்கியமானது. வேதத்தின் உபாங்கமாகிய காந்தர்வவேத்தை அல்லது சங்கீதத்தை, கைலாசத்தில் நிருதி மூலையில் நிருத்தம் என்னும் பெயருடன் பரம சிவன் உபதேசித்ததாக இன்னும் சொல்லப்பட்டு வருகிறது. இம்முதல் நூலுக்குப்பின், அநேகவழி நூல்கள் செய்யப்பட்டிருக்கின்றன. இதை வாசிக்கும் கனவான்களே! இற்றைக்கு அனேக ஆயிர வருஷங்களுக்கு முன்னுள்ளதாக எண்ணப்படும் முதல் நூலில், அதாவது, சாமவேதத்தில், இன்று நாம் எல்லா வாத்தியங்களிலும் இன்னிசையுடையதென்று மதிக்கும் வீணையும், அதன் செய்முறையும் கூறப்பட்டிருப்பதுமன்றி அதைக் கொண்டே பகவானைத் துதிக்கவேண்டுமென்றும் சொல்லியிருக்குமானால், இந்திய சங்கீதத்தின் பூர்வீகத்தை என்னென்று சொல்வது சரஸ்வதி நாரதர் தும்புரு அநுமான் முதலிய பெரியோர்கள், தங்கள் தங்கள் வீணையைக்கொண்டு இடைவிடாமல் தெய்வத்தைத் துதித்துக்கொண்டிருக்கிறார்களென்றும், பரமசிவன் தமது இருகாதிலும் கம்பலர் அசுவதரர் என்னும் வைணீக சிரோமணிகளைக் குண்டலமாகத் தரித்துக்கொண்டு அவர்கள் கானத்தைச் சதா கேட்டுக்கொண்டிருக்கிறாரென்றும் சொல்லப்படுமானால், வீணாகானத்தின் மேன்மையையும் சங்கீதத்தின் பூர்வத்தையும் நிதானிக்கத்தக்க வல்லவர் யாவர்? அருள் நாதன் உலகில் அவதரித்த சமயத்தில், தேவ சேனைகள் வானத்தில் தோன்றி, பூமியிலுள்ளோர் கேட்கும்படி "உன்னதங்களிலிருக்கிற தேவனுக்கு மகிமையும் பூமியிலே
|