பக்கம் எண் :

13
பாபிலோன் அரமனையில் காலை மாலை மத்தியானங்களில் சங்கீத வாத்தியங்கள் வாசிக்கப்பட்டன என்பது.

8. பாபிலோன் அரண்மனையில் காலை மாலை மத்தியானங்களில் சங்கீத
 வாத்தியங்கள் வாசிக்கப்பட்டன என்பது.

தானியேல் 6-ம் அதிகாரம் 18-ம் வாக்கியத்தில்

"பின்பு ராஜா தன் அரண்மனைக்குப்போய், இரா முழுவதும் போஜனம் பண்ணாமலும், கீதவாத்தியம் முதலானவைகளைத் தனக்கு முன்பாக வரவொட்டாமலுமிருந்தான்; அவனுக்கு நித்திரையும் வராமல் போயிற்று."

என்று சொல்லியிருக்கிறதைக் காண்போம். இதனால், ராஜாக்கள் காலைகளில் தாங்கள் தூங்கி எழுந்திருக்கும்பொழுதும், சாயந்தரம் வேலை யொழிந்து உல்லாசமாயிருக்கும் காலத்திலும், இராத்திரி போஜனம் பண்ணின பின்பும், அரண்மனையில் வாத்தியங்கள் முழங்கும்படி செய்வது வழக்கமாயிருந்ததாகத் தெரிகிறது. தற்காலத்திலும் இதைக் காணலாம். இவ்வழக்கம், இன்று நேற்றல்ல, சுமார் 2450 வருஷங்களுக்கு முன்னுள்ளதென்று சத்தியவேதத்தில் சொல்லப்படுகிற கணக்கினால் தெரியவருகிறது. இப்படிச் சங்கீதத்தை ராஜ அரண்மனைகளில் உபயோகித்து வந்த பாபிலோன் என்னும் பெரிய நகரைப்பற்றிச் சில காரியங்களை ஒருவாறு கவனிப்பது, தென்னிந்திய சங்கீதத்தின் பூர்வ நிலையை விசாரிக்கும் நமக்குப் பிரயோஜனமாயிருக்குமென்று நம்புகிறேன்.

9. பாபிலோனும் நினிவேயும் அவைகளைச் சேர்ந்த பட்டணங்களும் நிமிரோத்
 என்பவனால் கட்டப்பட்டது.

பாபிலோன் நினிவே என்னும் நகரங்கள், சின்ன ஆசியாவில் திகரீஸ் நதியின் மேல் கட்டப்பட்டிருந்தன. ஆதியாகமம் 10-ம் அதிகாரம் 8-ம் வாக்கிய முதல் இந்நகரங்களையும் அவைகளைச் சேர்ந்தனவாகச் சொல்லப்படும் மற்றும் சில பட்டணங்களையும்பற்றிய விவரங்களைக் காணலாம். அதாவது, நோவாவின் குமாரர்கள், சேம் காம் யாப்பேத்.

"காமுடைய குமாரர், கூஷ் மிஸ்ராயீம் பூத் கானான் என்பவர்கள். கூஷ் நிம்ரோதைப் பெற்றான்; இவன் பூமியிலே பராக்கிரமசாலியானான். இவன் கர்த்தருக்கு முன்பாக பலத்த வேட்டைக்காரனாயிருந்தான்; ஆகையால் கர்த்தருக்கு முன்பாகப் பலத்த வேட்டைக்காரனான நிம்ரோதைப்போல என்னும் வழக்கச் சொல் உண்டாயிற்று. சிநெயார் தேசத்திலுள்ள பாபேல், ஏரேக், அக்காத், கல்னே என்னும் இடங்கள் அவன் ஆண்ட ராஜ்யத்திற்கு ஆதிஸ்தானங்கள். அந்தத் தேசத்திலிருந்து ஆசூருக்குப் புறப்பட்டுப்போய் நினிவேயையும் ரெகெபோத் பட்டணத்தையும் காலாகையும் நினிவேக்கும் காலாகுக்கும் நடுவாக ரெசேனையும் கட்டினான்; இது பெரிய பட்டணம்."

இவ்வாக்கியங்களைக் கவனிக்கையில், பாபிலோன், நிம்ரோத்துடைய ராஜ்யத்தின் முக்கியமான ஸ்தானம் என்று காண்கிறது. இது தவிர, நினிவேப் பட்டணத்தையும் அதிலும் பெரிதான வேறு சில பட்டணங்களையும் கட்டினதாகக் காண்கிறோம். ஆகவே, பாபிலோன் சத்திய வேதாகமத்தில் சொல்லியபடி 4261 வருஷங்களுக்குமுன் உண்டானது. நேபுகாத்நேச்சார் பாபிலோனில் அரசாட்சி செய்த காலமோ, கிறிஸ்துவுக்கு 580 வருஷங்களுக்கு முன்னும் இற்றைக்கு 2494 வருஷங்களுக்கு முன்னுமானது. கிட்டத்தட்ட கி.மு. 540-ம் வருஷத்தில் சைரஸ் (கோரேஸ்) என்பவனால் இந்தப் பாபிலோன் ராஜ்யம் அழிக்கப்பட்டுப் போயிற்று.

10. பாபிலோன் என்னும் நகரத்தின் சிறப்பும் அதன் அழிவும்.

இந்நகரம் உலகத்திலுள்ள நகரங்கள் யாவற்றிலும் மிகுந்த பூர்வீகமும் அதிக விசாலமுமானதாகவிருந்தது. தற்காலத்தில், உலகத்தில் பெரியபட்டணமாக மதிக்கப்படும் லண்டன்மா