ஒவ்வொன்றும் 50 அடி உயரமுடைய எண்ணிறந்த ஆர்ச்சு (வளைவு)களால் தாங்கப்பட்ட மேல்மாடியும், அதன்மேல் சுற்றி ஒரு அங்கணமிட்டு ஆர்ச்சுகளால் தாங்கப்பட்ட இன்னொரு மேல்மாடியும் இப்படியே படிப்படியாய் ஒரு அங்கணம் குறைத்து அநேக மாடிகளுள்ளதான ஒரு பிரமாண்டமான சட்டடம் கட்டுவித்தான். அக்கட்டடத்தின் மேல்மாடியில் சுற்றி விட்டிருக்கும் ஒவ்வொரு மட்டத்திலும் போதுமான கைபிடிசுவர்கள் எழுப்பி, அதிலிருந்து தண்ணீர் ஒழுகாதபடி ஈயத்தசட்டினால் மூடி, அது நிறையப் பெரிய மரங்களும் வேர்விடும்படியான ஆழத்திற்கு நல்ல மண்களைக்கொட்டி, அதில் தூரதேசத்திலுள்ள யாவரும் கண்டுகளிக்கும்படியாகப் பலதேச விருக்ஷங்களையும் கனிதரும் மரங்களையும் புஷ்பச்செடிகளையும் கொடிகளையும் நாட்டிவைத்தான். இப்படியே ஒன்றுக்குமேல் ஒன்றாய் உயர்ந்த ஒவ்வொரு தளத்தின் மட்டங்களிலும் மேல்மட்டத்திலும் மிகவும் அலங்காரமாய்ச் செய்யப்பட்டிருந்தது. இவைகளை ஒன்றின்பின் ஒன்றாய் ஏறிப்பார்ப்பதற்கு அனுகூலமான படிகளும் கட்டப்பட்டிருந்தன. இவ்வுன்னதமும் விஸ்தாரமுமான தோட்டம் பார்ப்பதற்கு மரங்கள் அடர்ந்த ஒரு சிறு குன்றைப்போல் மிக அலங்காரமாய்த் தோன்றுமாம். ஆகாயத்தோட்டத்தின் கீழ்ப்பாகம் மிகவும் பலமாய் அமைக்கப்பட்டிருந்தது. ஒவ்வொன்று நாலடிக்குநாலடி கனமுள்ளதும் 16 அடிக்குமேல் நீளமுள்ளதுமான அநேக கல் உத்திரங்களுடன் பிரமாண்டமான கம்பங்களால் தாங்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு மாடியிலும் மிகவும் விஸ்தாரமான அறைகள் ஏராளமாயிருந்தன. அவைகளின் கீழேயுள்ள முதல் மாளிகையில், ஜனங்கள் யாவரும்கண்டு ஆனந்தப்படக்கூடிய நாடகசாலைகளும், கண்காக்ஷிசாலைகளும், புத்தகசாலைகளும், விளையாடும் இடங்களும், இளைப்பாறும் இடங்களும், கடைகளும், இன்னும் பலவிதமான சந்தோக்ஷங்களுக்குரிய இடங்களும் அமைக்கப்பட்டிருந்தன. அதன்மேலுள்ள மாடிகளில், ராஜ்யநிர்வாகத்துக்குரிய கச்சேரிகள் ஒன்றிலும் நீதிஸ்தலங்கள் மற்றொன்றிலும் ராஜாங்கத்துக்கு உபயோகமும் அநேகவித ஆடம்பரமுமான ஸ்தலங்கள் வேறொன்றிலுமாக அமைக்கப்பட்டிருந்தன. அது, காலா காலங்களில் தோட்டக்கச்சேரி செய்யவும் ஆனந்தம் கொண்டாடவும் கூடிய ஸ்தலமாயிருந்தது. இவ்வுன்னதமான தோட்டத்துக்குத் தண்ணீர் தூக்கிக்கொண்டுபோவது கூடிய காரியமாயில்லாததினால் ஆற்றிலிருந்து தண்ணீர் இறைப்பதற்காக ஒரு பிரமாண்டமான யந்திரம்(English) இருந்ததாகச் சொல்லப்படுகிறது. இப்பட்டணம் மிக விஸ்தீரணமும் ஜன அடர்த்தியுமுடையதாயிருந்ததினால், ஒரு பக்கத்தில் நடக்கும் காரியம் மற்றொரு பக்கத்துக்கு இலேசாய்த் தெரியாதாம். இப்பெரிய பட்டணத்தைத் தங்கள் வாசஸ்தலமாக்கிக்கொள்ள அநேக வியாபாரிகளும் பிரபுக்களும் அங்கு வந்துசேர்ந்தார்கள். அது, உலகத்திலுள்ள எல்லாப் பட்டணங்களிலும் மிகவும் பெரியதாகவும் அதிகத் திரவியமுடையதாகவும் பலமுள்ளதாக வுமிருந்தது. அங்குள்ளவர்கள் எல்லா வித்தைகளிலும் கைத்தொழில்களிலும் மிகச்சிறந்தவர்களாயிருந்தார்கள். அங்கே கொலை, களவு, விபசாரம் முதலிய தீமைகளும் அதிகமாயிருந்தன. பாபிலோன் ராஜன், பக்கத்துராஜ்யங்களில் காலாகாலங்களில் படையெடுத்து அத்தேசத்தின் பொருள்களையும் ஜனங்களையும் தன் பட்டணத்தில் கொண்டுவந்து நிரப்புவது வழக்கம். அதுபோலவே, பக்கத்திலுள்ள யாவரும், இப்பாபிலோன் ராஜ்யத்தையும் அதன் மகிமையையும் தாங்கள் அடையவேண்டுமென்று ஆசைப்பட்டுக் கொண்டிருந்தார்கள். சற்றேறக்குறைய 2000 வருஷங்களாக நிலைத்திருந்த பாபிலோன் ராஜ்யத்தை, பாபிலோனியர் தங்களுக்குச் செய்த கொடுமைகளை நினைத்து அதை அழித்து அக்கினியினால் கொளுத்தி அதை நாசமாக்கவேண்டுமென்று, பலர் துடித்துக்கொண்டிருந்தார்கள். பாபிலோனியர் பீலஸ் என்னும் தெய்வத்திற்கு ஒரு பெரிய உற்சவம் நடத்திக்கொண்டிருந்த சமயத்தில் ஒவ்வொன்றும் 50 அடி உயரமுடைய எண்ணிறந்த ஆர்ச்சு (வளைவு)களால் தாங்கப்பட்ட மேல்மாடியும், அதன்மேல் சுற்றி ஒரு அங்கணமிட்டு ஆர்ச்சுகளால் தாங்கப்பட்ட இன்னொரு மேல்மாடியும் இப்படியே படிப்படியாய் ஒரு அங்கணம் குறைத்து அநேக மாடிகளுள்ளதான ஒரு பிரமாண்டமான சட்டடம் கட்டுவித்தான். அக்கட்டடத்தின் மேல்மாடியில் சுற்றி விட்டிருக்கும் ஒவ்வொரு மட்டத்திலும் போதுமான கைபிடிசுவர்கள் எழுப்பி, அதிலிருந்து தண்ணீர் ஒழுகாதபடி ஈயத்தசட்டினால் மூடி, அது நிறையப் பெரிய மரங்களும் வேர்விடும்படியான ஆழத்திற்கு நல்ல மண்களைக்கொட்டி, அதில் தூரதேசத்திலுள்ள யாவரும் கண்டுகளிக்கும்படியாகப் பலதேச விருக்ஷங்களையும் கனிதரும் மரங்களையும் புஷ்பச்செடிகளையும் கொடிகளையும் நாட்டிவைத்தான். இப்படியே ஒன்றுக்குமேல் ஒன்றாய் உயர்ந்த ஒவ்வொரு தளத்தின் மட்டங்களிலும் மேல்மட்டத்திலும் மிகவும் அலங்காரமாய்ச் செய்யப்பட்டிருந்தது. இவைகளை ஒன்றின்பின் ஒன்றாய் ஏறிப்பார்ப்பதற்கு அனுகூலமான படிகளும் கட்டப்பட்டிருந்தன. இவ்வுன்னதமும் விஸ்தாரமுமான தோட்டம் பார்ப்பதற்கு மரங்கள் அடர்ந்த ஒரு சிறு குன்றைப்போல் மிக அலங்காரமாய்த் தோன்றுமாம். ஆகாயத்தோட்டத்தின் கீழ்ப்பாகம் மிகவும் பலமாய் அமைக்கப்பட்டிருந்தது. ஒவ்வொன்று நாலடிக்குநாலடி கனமுள்ளதும் 16 அடிக்குமேல் நீளமுள்ளதுமான அநேக கல் உத்திரங்களுடன் பிரமாண்டமான கம்பங்களால் தாங்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு மாடியிலும் மிகவும் விஸ்தாரமான அறைகள் ஏராளமாயிருந்தன. அவைகளின் கீழேயுள்ள முதல் மாளிகையில், ஜனங்கள் யாவரும்கண்டு ஆனந்தப்படக்கூடிய நாடகசாலைகளும், கண்காக்ஷிசாலைகளும், புத்தகசாலைகளும், விளையாடும் இடங்களும், இளைப்பாறும் இடங்களும், கடைகளும், இன்னும் பலவிதமான சந்தோக்ஷங்களுக்குரிய இடங்களும் அமைக்கப்பட்டிருந்தன. அதன்மேலுள்ள மாடிகளில், ராஜ்யநிர்வாகத்துக்குரிய கச்சேரிகள் ஒன்றிலும் நீதிஸ்தலங்கள் மற்றொன்றிலும் ராஜாங்கத்துக்கு உபயோகமும் அநேகவித ஆடம்பரமுமான ஸ்தலங்கள் வேறொன்றிலுமாக அமைக்கப்பட்டிருந்தன. அது, காலா காலங்களில் தோட்டக்கச்சேரி செய்யவும் ஆனந்தம் கொண்டாடவும் கூடிய ஸ்தலமாயிருந்தது. இவ்வுன்னதமான தோட்டத்துக்குத் தண்ணீர் தூக்கிக்கொண்டுபோவது கூடிய காரியமாயில்லாததினால் ஆற்றிலிருந்து தண்ணீர் இறைப்பதற்காக ஒரு பிரமாண்டமான யந்திரம்
|