7. ஜலப்பிரளயமும் தென்னிந்தியாவும். முதல்முதல் இந்தியாவின் தென்பாகம் ஒருகாலத்தில் ஜலப்பிரளயத்தினால் அழிக்கப்பட்டதென்றும், அதுமிகவும் விசாலமான பூமிபாகமென்றும், அதிலேயே ஆதிமனிதர்கள் குடியேறினார்களென்றும், பின்வரும் வசனங்களில் காணப்படுகிறது. Vol. I of the Manual ofthe administration, Madras Presidency P. 33 Foot-note (2). Hypothesis of the geneology and general migrations of the races of man :- "There are a number of circumstances (especially chronological facts), which suggest that the primaeval home of man was a continent now sunk below the surface of the Indian ocean, which extended along the south of Asia, as it is at present (and probably in direct connection at some points with it); towards the east as far as Further India and the Sunda Islands, towards the west as far as Madagasear and the south-eastern shores of Africa. Many facts in animal and vegetable geography render the former existence of such a South Indian continent very probable. To this continent has been given the name of Lemuria, from the primitive mammals of that name which were characteristic of it. By assuming Lemuria to have been man's primaeval home, the explanation of the geographical distribution of the human species by migration is much facilitated." "மனிதனின் ஆதி இருப்பிடம், இந்துமகா சமுத்திரத்தில் பூர்வம் இருந்து பிறகு முழுகிப்போன ஓர் கண்டம் என்றும், அது ஆசியாவில் இப்போது தென்புறத்திலிருக்கிற அளவவ்வளவாயும், கிழக்கில் இந்துசீனதீப கல்பம் (Further India) சன்டா (Sunda) தீவுகள் வரைக்கும் விசாலித்திருந்தது என்றும், மேற்கே அக்கண்டம் மதகாஸ்கார் தீவுவரைக்கும் ஆப்பிரிக்காவின் தென்கிழக்குக் கரைவரைக்கும் விசாலித்திருந்தது என்றும் நினைக்க அநேக ஏதுக்கள் உண்டு. மிருகங்கள் செடி கொடி மரங்கள் முதலியவற்றின் அமைப்பைக் கவனிக்கையில், அப்பேர்ப்பட்ட தென்னிந்திய கண்டம் ஒன்று இருந்தது என்று ஊகிக்க இடமுண்டு. இந்தக் கண்டத்துக்கு லெமூரியா (Lemuria) என்ற பேர் கொடுக்கப்பட்டிருக்கிறது. அந்தக் கண்டத்தில் வசித்த (Mammals) (அதாவது குட்டிகளுக்குப் பால் கொடுத்து வளர்க்கும் மிருகங்கள்) மூலமாய் அந்தப்பேர் உண்டானது. இந்த லெமூரியாக் கண்டமே ஆதிமனிதர் குடியேறின கண்டம் என்று வைத்துக் கொள்வோமானால், மனிதர் இடம்விட்டு இடம் பேர்ந்து குடியேறின சரித்திரத்தை வெகு எளிதில் தீர்த்துவிடலாம்." Vol. I of the Manual of the administration of the Madras Presidency P. 111, 110. "Investigations in relation to race show it to be by no means impossible that Southern India was once the passage-ground by which the ancient progenitors of Northern and Mediterranean races proceeded to the parts of the globe which they now inhabit. Human remains and traces have been found on the East coast of an age which is indeterminate but quite beyond the ordinary calculations of History." "ஜாதிகள் ஓரிடமிருந்து வேறிடம் பேர்ந்த சரித்திரத்தைக் கவனித்துப் பார்க்கும்போது, இப்போது வடகண்டத்திலும் மத்தியதரைக் கடலையடுத்தும் வசிக்கும் ஜாதியாரின் முன்னோர்கள் தென்னிந்தியா வழியாய்த்தான் தாங்கள் இப்போது இருக்கும் இடத்திற்குச் சென்றிருக்கவேண்டும் என்று நினைக்க இடமுண்டு. இந்தியாவின் கீழ்கரையில் கண்டுபிடிக்கப்பட்ட மனித எலும்புகளின் தன்மையைக் கவனித்தால், சரித்திரம் தொடங்காத காலத்துள்ள மனிதர் இந்தியாவின் கீழ்கரையில் ஒருகாலம் வசித்திருந்தார்களென்று தீர்மானிக்கலாம்." "Antiquatian research is only now beginning to find means of supplementing the deficiency caused by the absence of materials constructed or collected by usual historic methods. These results are specially to be regretted, as without doubt the population who have for many ages occupied this portion of the peninsula are a great people, influencing the world not much perhaps by moral and intellectual attributes, but to a great extent by superior physical qualities."
|