"கல்விமான்கள் இதுவிஷயத்தில் செய்யும் முயற்சிகளினால், இப்போது தான் ஆதிகாலத்து மனிதரைப் பற்றிய அநேக சங்கதிகள் வெளியாகின்றன. இவைகள் முன்னாலேயே வெளிக்குவராமற் போயினவே என்று வருத்தப்பட வேண்டியிருக்கிறது. ஏனென்றால், இந்தியாவின் கீழ்கரையில் ஆதியில் வசித்த ஜனங்கள் ஒரு பெரிய ஜாதியாரென்பதற்கும் ஒழுக்கவிஷயத்திலாவது கல்வி விஷயத்திலாவது அவர்கள் அதிகமாய்த் தேர்ச்சி அடைந்திராவிட்டாலும் தேக அமைப்பில் மற்றும் அனேக ஜாதியாரைவிட விசேஷித்திருந்தார்கள் என்பதற்கும் சந்தேகமில்லை." இதில் கண்டபடியே, இந்தியாவின் தென்பாகத்திலே பூர்வீகத்தில் இருந்த ஜனங்கள் மிகுந்த பராக்கிரமமுள்ளவர்களாய், தேக அமைப்பில் ஜலப்பிரளயத்துக்குமுன் 900, 1000 வருஷம் ஜீவித்திருந்த மனிதர்களின் தேக அமைப்பிற்கு ஒத்திருந்ததாகக் காண்கிறோம். அவர்கள் காலத்திலிருந்த வழக்க ஒழுக்கங்கள் நாகரீகம் வித்தை முதலியவைகளைப்பற்றி அதிகம் சொல்லுவதற்குத் தகுதியான ஆதாரம் இதை எழுதியவருக்குக் கிடைக்கவில்லை யென்று தோன்றுகிறது. Manual of the administration of the Madras Presidency Vol. I Chapter. IPage (4). "The Sanskrit authors of the Pooranas, writing in the north described Ceylon as much more extensive than it now is, ans as stretching especially towards the west and south; thereby not representing, no doubt, the fact in Pooranic times, but embodying nevertheless traditions current among Indian Nations. * * * The Sanskrit astronomers placed their Meridian in Lunka, but it was a line to the west of the present Ceylon. These remarks bear on the theory, that in the most ancient times there was a connection between Southern India and Madagasear. * * * It also accords with the local tradition recorded by the Buddhists which state that Ceylon was gradually contracted by submergence. * * * The date assigned to the Noachian deluge of Scripture in 2348 B. C. That of the severance in detail a great submergence on the west, and a tradition exists that the great and little Basseo rocks on the east are left by an eastern submergence." "வடதேசத்தில் புராணங்களை சமஸ்கிருதத்தில் எழுதின நூலாசிரியர்கள் இலங்கை தேசம் இப்பொழுது இருப்பதைவிட அதிக பெரியதாயிருந்ததாயும், விசேஷமாக மேற்கேயும் தெற்கேயும் அதிகமாய் விசாலித்து இருந்ததாயும் சொல்லுகிறார்கள். இப்படி அவர்கள் சொல்லுவதானது சரித்திர விஷயமாய் நிச்சயத்தைக் காண்பிக்காவிட்டாலும் அக்காலத்தில் இந்திய தேசத்தவருக்குள் பாரம்பரையாய் நிசம் என்று ஒப்புக் கொள்ளப்பட்ட ஒரு சங்கதியை நிச்சயப்படுத்துகிறதாயிருக்கிறது. * * * * * * * சமஸ்கிருத வானசாஸ்திரிகள் தங்கள் யாமியோத்தர ரேகையைக் கணிப்பது லங்கையை மத்தியாய் வைத்துக் கொண்டுதான். ஆனால் அந்த ரேகை இப்போது இருக்கிற இலங்கைக்குச் சற்று மேற்கிலிருந்தது. அதிபூர்வ காலங்களில் தென்னிந்தியாவுக்கும் மதகாஸ்கர் தீவுக்கும் சம்பந்தம் இருந்தது என்ற கொள்கையை இது நிச்சயப்படுத்துகிறது.* * * * * இலங்கையானது கொஞ்சங்கொஞ்சமாய் கடலால் சூழப்பட்டுச் சிறியதாய்ப் போனது என்று அங்குள்ள புத்த மதஸ்தரால் எழுதிவைக்கப்பட்ட பாரம்பரியச் சங்கதிக்கும் இது ஒத்திருக்கிறது. * * * * * நோவாவின் காலத்தில் உண்டான ஜலப்பிரளயம் சத்தியவேதத்தில் கி. மு. 2348-ம் த்தில் உண்டானதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. மேற்கே அநேக தேசங்கள் கடலுக்குள் முழுகிப்போனதாயும் கிழக்கில் உண்டான ஜலப்பிரளயத்தினால் (Basseo rocks) என்ற பெரிதும் சிறிதுமான கன்மலைகள் பூமி மட்டத்துக்கு மேல் தெரிந்ததாயும் பாரம்பரியமாய்ச் சொல்லிக் கொள்ளப்படுகிறது."
|