மேற்கண்ட வசனங்களைக் கவனிக்கையில், நோவாவின் காலத்திலுண்டான ஜலப்பிரளயம்போல் ஒரு பிரளயமுண்டாகி இந்துமகா சமுத்திரத்தில் மிகவும் விசாலித்திருந்த இலங்கைத் தீவின் பெரும்பாகத்தை அழித்துவிட்டதென்று தெளிவாகத் தெரிகிறது. காலத்தின் வரையறையை மேற்றிசையாரும் கீழ்த்திசையாரும் தனித்தனியே குறித்து வைத்திருக்கிறார்கள். ஆகையினால் நிச்சயமாகவே ஒரு பிரளயமுண்டாகியிருக்க வேண்டுமென்று சொல்வது தப்பாகமாட்டாது. 8. பௌத்தரின் ஜலப்பிரளய காலகணிதம். Manual of the Administration of the Madras Presidency Vol. I, P. 110, 111. "The most ancient facts regarding Southern India are remarkable. Geology and Natural history alike make it certain that at a time within the bounds of human knowledge, this country did not form part of Asia. A large southern continent, of which this country once formed part has even been assumed as necessary to account for the different circumstances. The Sanskrit Pooranic writers, the Ceylon Booddhists, and the local traditions of the West Coast, all indicate in different manners a great disturbance of the point of the Peninsula and Ceylon within recent times. The date given by English theologians to the Noachian deluge is 2348 B. C; and that given by the Ceylon Booddhists to the latest submergence in the region of Ceylon is 2387 B. C. The two dates cannot have been arrived at with mutual knowledge. Investigations in relation to race show it to be by no means impossible that Southern India was once the passage ground by which the ancient progenitors of Northern and Mediterranian races proceeded to the parts of the globe which they now inhabit." "தென்னிந்தியாவைப் பற்றிய பூர்வகாலத்துச் சங்கதிகள் மிகவும் கவனிக்கப்படத்தக்கவை. தென்னிந்தியாவானது, ஜனங்கள் நாகரீகமடைந்து சரித்திரங்களை எழுதிய காலத்துக்குள், ஆசியாகண்டத்தின் ஓர் பாகமாயிருக்கவில்லையென்று, பூகர்ப்ப சாஸ்திரமும் இயற்கை சாஸ்திரமும் நிச்சயமாய்க் கூறுகின்றன. இந்தச் சாஸ்திரங்களில் ஏற்பதும் சங்கதிகளுக்கு முகாந்தரம் கூறவதற்காக, ஒரு பெரிய தென்கண்டம் இருந்ததாகவும் இந்தத் தென்னிந்தியா அதில் ஓர் பாகமாயிருந்ததாகவும் வைத்துக்கொள்வது வெகு அவசியமாயிருக்கிறது. சொற்ப வருஷங்களுக்கு முன் இந்திய தீபகல்பத்தின் தென் முனைப்பாகமும் இலங்கைத் தீவும் வெகு மாறுதல்களடைந்தனவென்று, புராணங்களை எழுதிய சமஸ்கிருத நூலாசிரியராலும், இலங்கையிலுள்ள புத்த மதத்தாராலும், இந்திய மேற்குக்கரையிலுள்ள பாரம்பரியங்களினாலும் தெரிய வருகிறது. நோவாவின் காலத்திலுண்டான ஜலப்பிரளயம் கி. மு. 2348-ம் த்தில் உண்டானதாக ஆங்கிலேய வேதசாஸ்திரிகள் கூறுகிறார்கள். இலங்கையில் கடைசியாய் உண்டான பிரளயம் கி. மு. 2387-ம் த்தில் உண்டானதாக இலங்கையிலுள்ள புத்த மதக்குருக்கள் கூறுகிறார்கள். இரண்டு காலங்களும், ஒருவருக்கொருவர் முன்னே சொல்லி வைத்துக் கொண்டு எழுதினவையல்ல. ஆதியில் ஜாதிகள் உற்பத்தியானதைப் பற்றிச் சொல்லும் சாஸ்திரங்களை ஆராய்ந்து பார்க்கையில் என்ன தெரிகிறதென்றால், வடக்குக் கண்டத்திலும் மத்திய தரைக்கடலையடுத்த நாடுகளிலும் இப்போது வசிக்கும் ஜாதியாரின் முன்னோர்கள் தாங்கள் நாடிச்சென்ற தேசங்களுக்குப் போகும் வழியில் தென்னிந்தியா வழியாய்த் தான் போனார்கள் என்று நினைக்க அநேக காரியங்கள் ஏற்பட்டிருக்கிறது." மேலே காட்டிய வசனங்களைக் கவனிக்கையில், புத்த சமயக் குருக்களால் ஜலப்பிரளயம் உண்டானதாகச் சொல்லப்படும் கி. மு. 2387-ம் அதாவது இற்றைக்குச் சுமார் 4,300 வருஷங்களுக்கு முன் இலங்கையின் பெரும்பாகம் கடலால் அழிக்கப்பட்டிருக்கிறதென்று தெளிவாகத் தெரிகிறது. மேலும் தென்னிந்தியாவின் தென்பக்கமாயுள்ள பூமியின் பெரும்பாகம் கடலால் அழிக்கப்பட்ட காலத்தில் அங்குள்ளோர் தென்னிந்தியாவின் வழியாகவே மற்ற இடங்களுக்குக் குடியேறிச் சென்றார்கள் என்று காணப்படுகிறது.
|