9. சத்திய விரதனது கப்பலும் மலயமலையும் The Tamilian Antiquary by Pandit D. Savariroyan, M.R.A.S. "Before this diluvial catastrophe, the western Ghats were known as the Northern mountains. in relation to the southern Land which was submerged by the ocean. The Satapata Brahmana relates that the ark of Manu rested in the Northern mountains and the Puranas mention that he, the 'Lord of the Dravida', underwent austere penance in the Malaya. The Mahabharata and the Puranas give an account of seven other Rishis who accompanied Manu and settled in the new colony. This indicates the advent of other clans led by other Rishis who followed the footsteps of the "Lord of the Dravida". Thus it appears that the Tamilian race that settled in the Pandu land belonged to these eight Rishis or Prajapatis, one of whom was the famous Rishi Pulastya of the extreme south, from whom were descended Agastya, the Tamil Muni and Ravana, the king of South. The Satapata Brahmana, in which the story of Manu first occurs, does not mention the name of the Northern Mountains. However, there is ample evidence in the Puranic accounts to identify the 'Northern Mountains' with the Western Ghats, and the particular spot on which the ark rested with Malaya." "ஜலப்பிரளயத்தினால் நேரிட்ட இந்த விபத்துக்குமுன் கடலால் மூடப்பட்டு அழிந்த தென் தேசத்தைப் பற்றிச் சொல்லுமிடத்தில், மேற்குக் கணவாய் மலைகளை வடக்கேயுள்ள மலைகள் என்று சொல்லியிருக்கிறது. 'சத பத பிராமணம்' என்ற நூலில், மனுவின் பேழையானது வடக்கு மலைகளில் தங்கினதாயும், புராணங்களில் 'திராவிட அதிபதி' மலையமலையில் கொடுந்தவம் புரிந்ததாயும் சொல்லப்பட்டிருக்கிறது. வேறு ஏழு ரிஷிகள் மனுவுடன் அவர் புதிதாய்க் குடியேறின இடங்களில் அவருடன் கூடச் சென்றிருந்ததாக மகாபாரதமும் புராண நூல்களும் கூறுகின்றன. இதினால் என்ன வெளியாகிறதென்றால் 'திராவிட அதிபதி' செய்ததுபோல் மற்ற ரிஷிகளால் வழி நடத்தப்பட்டு மற்ற ஜாதிகளும் புதுக்குடியேறினார்கள் என்பதுதான். இவ்விதமாய், பாண்டிதேசத்தில் குடியேறின தமிழர்கள் மேற்சொன்ன எட்டு ரிஷிகள் அல்லது பிரஜாபதிகளைச் சேர்ந்தவர்களாயிருக்க வேண்டுமென்றும் அவர்களில் ஒருவர் தென் கோடியில் வசித்த பேர்போன புலஸ்திய ரிஷி என்றும் தெளிவாகிறது. இந்தப் புலஸ்திய ரிஷி வழியில்தான் தமிழ் முனியாகிய அகஸ்திய ரிஷியும் தென்தேசத்தரசனாகிய இராவணனும் தோன்றினார்கள். மனுவின் சரித்திரம் முதல்முதல் சொல்லப்பட்டிருக்கிற நூலாகிய சதாபத பிராமணத்தில் வடக்கு மலைகளைப்பற்றி ஒன்றும் சொல்லப்படவில்லை. என்றாலும், வடக்கு மலைகள் மேற்குக் கணவாய் மலைகள்தான் என்பதற்கும் பேழை தங்கின இடம் 'மலயம்' என்பதற்கும் புராணங்களில் போதுமான ஆதாரங்களுண்டு." மேற்கண்ட சிலவரிகளில் திராவிட தேசத்தரசனாகிய சத்தியவிரதன் ஜலப்பிரளயத்துக்குத் தப்பும்படியாக ஏறிச்சென்ற கப்பல் அதற்கு வடதிசையிலுள்ள மலயமலையில் ரிஷிகளுடன் வந்து தங்கினதாகக் காண்கிறது. மலயம் என்பது பொதிகை மலைக்குப்பெயர்; கிருதமாலா நதியென்பது இக்காலத்தில் இல்லாத நதியென்று சரித்திரக்காரர் சொல்லுகிறார்கள். மதுரைக்கருகிலுள்ள வைகைநதிக் கரையில் திராவிட தேசத்தரசனாகிய சத்தியவிரதன் தவசு செய்து கொண்டிருந்தான் என்பது பொருந்தாது. மேலும், மலயமலை என்பது உத்தர மதுரைக்குத் தெற்கிலுள்ள மலையாகுமே யொழிய வடக்கிலுள்ள மலையாக மாட்டாது. ஆனால் மேற்றிசைமலைகளில் உற்பத்தியான குமரியாறு தென்பாண்டி நாட்டிற்கு வடவெல்லையாய் நின்று அழிந்து போனது போல, கிருதமாலாநதியம் பொதியமலையிலுற்பத்தியாகித் தென் மதுரைக்கருகில் ஓடிக்கொண்டிருந்து சத்தியவிரதன் தவஞ்செய்வதற்கேற்ற இடமாயிருந்து பின்பு அழிந்து போயிருக்க வேண்டும். அப்படியானால், தென்னிந்தியாவிற்கு வெகுதூரம் தெற்கேயிருந்த தென்மதுரை கடலால்
|