அழிக்கப்பட்ட காலத்தில்அங்கிருந்த சத்தியவிரதனென்னும் திராவிட தேசத்தரசன் கப்பலேறித் தென்மதுரைக்கு வடக்கிலுள்ள மலயமலைக்கு வந்து சேர்ந்தானென்று சொல்வதே பொருந்தும். 10. கன்னியா குமரியின் புராதன கோயில்கள். Essays by S. V. Thomas, M. A. Page 84. "The earliest mention of Cape Comorin by European writers is contemporaneous with the time of Alexander the Great. We have reason to believe that so early as the time of the Periplus the Cape was already famous as a sacred shrine of the Hindus. The temple was dedicated to Siva's wife, called Kumari, or young woman as emblematic of eternal youth and beauty. It is impossible to decide the precise site of the ancient temple seen by the Greek sailors. There are at present three temples at Cape Comorin. One is in complete ruins, and the sea is every day swallowing it up. This is probably the ancient of the three. Another is situated on an elevated rock the foot of which is constantly washed by the waves. The temple is antique in appearance and structure, but is dedicated evidently to Siva's son, not wife, as it contains a rude stone image of of Ganesa. The third is the temple which pilgrims now go to visit. This has a comparatively modern look about it. * * It is very probable that the most ancient temple has been buried under the sea, and that when the encroachments of the sea were arrested by the solid rocks that now stand out to chek its progress, another temple was built and dedicated to the same goddess. This view is supported by the report that is current among the fishermen living in the neighbourhood. They say that in 1883, when the green sun perplexed the scientific world, the sea receded all of a sudden some furlongs that there were then seen the ruins of old buildings with brazen gates and other accompaniments, that some of the fishermen ventured out to drag them ashore, but that before they could succeed the sea came back to assert her ancient dominion, and the enterprise was given over. If this be true, we have strong reasons for supposing that the temple which astonished the Greeks is imbedded in sea, and that the present temple afterwards rose to the honour of the tutelary goddess of the Cape." "ஐரோப்பிய சரித்திரக்காரர் கன்னியாகுமரியைப் பற்றி முதல்முதல் சொல்லுங்காலம் மகா அலெக்சாந்தருடைய காலத்துக்குச் சரியாய் இருக்கிறது. பெரிப்ளஸ் என்னும் நூல் எழுதப்பட்ட காலத்திலேயே அந்த முனையானது இந்துக்களுக்கு ஒரு புண்ணிய ஸ்தலமாக இருந்தது என்று நினைக்க ஏதுவுண்டு. அதிலுள்ள கோயில் சிவனுடைய மனைவியாகிய பார்வதிபேரால் பிரதிஷ்டை பண்ணப்பட்டிருந்தது ("குமரி" என்றால் அழகிய இளம்பெண், நித்திய இளமையையும் அழகையும் உடைய பார்வதி.) கிரேக்க மாலுமிகளால் பார்க்கப்பட்ட கோயில் எந்த ஸ்தலத்தில் கட்டப்பட்டிருந்ததென்று இப்போது சொல்ல முடியாது. இப்போது கன்னியாகுமரி முனையில் மூன்று கோயில்கள் இருக்கின்றன. அவைகளில் எல்லாவற்றிலும் பழமையானது என்று லேசில் ஒப்புக்கொள்ளக்கூடியது அழிந்துபோய்க் கடலில் முழுகிக் கொண்டே வருகிறது. மற்றொன்று உயரமான கன்மலையின்மேல் கட்டப்பட்டிருக்கிறது; அதின் அடிவாரத்தில் கடல் அலைகள் எப்போதும் அடித்துக் கொண்டேயிருக்கின்றன. இந்தக் கோயில் வெளித்தோற்றத்திலும் கட்டட அமைப்பிலும் அதிகப் பழமையானதாகத் தோற்றுகிறது. அது பார்வதி பேரால் பிரதிஷ்டை பண்ணப்படாமல், சிவனுடைய குமாரன் பேரால் பிரதிஷ்டையாயிருக்கிறது. ஏனென்றால், கல்லால் கரடுமுரடாய்ச் செய்த கணேசருடைய விக்கிரகம் அதில் இருக்கிறது. மூன்றாவது கோயில்தான் இப்போது சுவாமி தரிசனத்துக்கு வருபவர்கள் வழங்கும் கோயில். அதைப்பார்த்தால் தற்காலம் கட்டப்பட்டதுபோல் தெரிகிறது. ஆனால் நாம் நிதானமாய்ச் சொல்லக்கூடியது என்னவென்றால், அவைகளில் எல்லாவற்றிலும் அதிக பூர்வமான கோயில் கடலுக்குள் முழுகிப்போயிருக்க வேண்டும் என்றும், நாளாவட்டத்தில் கடல் அந்தக் கன்மலையைத் தாக்கமுடியாதென்று கண்டபோது அந்த மலையின்மேல் பார்வதிக்கு வேறொரு கோயில்
|