வாகிய இந்துமலாயாத் தீபகணம், போர்ணியோ ஜாவா சுமாத்திரா என்னும் பெரிய தீவுகளடங்கியது. அது முற்காலத்தில் ஆசியாக்கண்டத்தோடும் அநேகமாய் இங்கே சொல்லியிருக்கப்பட்ட லெமூரியாக் கண்டத்தோடும் மலாக்காவினால் இணைக்கப்பட்டிருந்தது. இதற்குமாறாகக் கீழ்ப்பிரிவாகிய ஆஸ்திரோமலாயாத் தீபகணம், செலிபிஸ் மொலுக்காஸ் நியுகினியா சாலொமோன் தீவுகள் முதலானவைகள் அடங்கியதாய்ப் பழைய காலத்தில் ஆஸ்திரேலியாவோடு இணைக்கப்பட்டிருந்தது என்று ஹெக்கேல் என்பவர் கூறுகிறார்." மேற்கண்ட வசனங்களைக் கவனிக்கையில், இந்து மகாசமுத்திரத்தில் தென்னிந்தியாவுக்குத் தென் பக்கத்திலிருந்த இந்திய கண்டமானது ஆதிமனுஷர்கள் உற்பத்தியாவதற்கு இடமாயிருந்ததென்றும், எல்லா ஜாதிகளும் சுகமாய்த் தங்கியிருந்த தொட்டிலாயிருந்ததென்றும், அது அழிந்தபின் அதிலிருந்து தங்களுக்கு எதிர்ப்பட்ட கரைகளுக்குச் சென்று அங்கு விருத்தியானார்களென்றும் தெரிகிறது. இந்து மகாசமுத்திரத்தைச் சுற்றியுள்ள தீவுகளிலும் தேசங்களிலுமிருக்கும் ஜனங்களையும் பழக்க வழக்கங்களையும் செடிகொடி மரங்களையும் இயற்கையின் அமைப்புத் தெரிந்த சாஸ்திரிகள் லெமூரியா என்று அழைக்கப்படும் இந்திய கண்டத்திலிருந்தே ஜனங்கள் பரவியிருக்க வேண்டுமென்று சொல்லுகிறார்கள். மேலும், ஜலப்பிரளயமானது உண்டான காலத்தில் எல்லாரும் அழிந்துபோக, தெய்வ அனுக்கிரகத்தால் எங்கள் தேசத்தில் இன்னபக்தன் கப்பல் மூலமாய் தப்பிப் பிழைத்தா ரென்றும், அவருடைய சந்ததிதான் நாங்களென்றும், ஒவ்வொரு தேசத்தாரும் சொல்லிக் கொள்ளுகிறார்களென்பதை இதன் பின்வரும் வரிகளில் காணலாம். 12. ஜலப்பிரளயத்தைக் குறித்த பல அபிப்பிராயங்கள். The New Popular Encyclopedia Vol. IV, Page 325. "Many other nations mention, in the mythological part of their history, inundations which in their essential particulars, agree with the scriptural account of Noah's preservation. Hence many persons have inferred the universality of this inundation. To this,. it has been replied that each nation localizes the chief events and actors as connected with itself, necessitating an Ararat, an ark and a Noah in each instance. Fohi in the Chinese mythology, Sottivrata or Satyavrata in the Indian, Xisuthrus in the Chaldaean, Ogyges and Deucalion in the Greek, have each been recognized by many as the Noah of the Sacred scriptures under a different name. Even the American Indians have a tradition of a similar deluge, and a renewal of the human race from the family of one individual. All these individuals are said by their respective nations to have been saved, and to have become a second father of mankind." "வேறு அநேக ஜாதியாரும் தங்கள் புராண கதைகளில் பிரளயங்களைக் குறித்துச் சொல்லுகிறார்கள். அவ்வரலாறுகளெல்லாம், முக்கியமான விஷயங்களில், நோவா காப்பாற்றப்பட்டதாகச் சத்தியவேதத்திற் கூறியுள்ள வரலாற்றுக்கு ஒத்திருக்கிறது. ஆகையால், அநேகர் இந்தப் பிரளயம் உலகமெங்கும் உண்டாயிருக்கலாமென்று யூகிக்கிறார்கள். அதற்கு ஒவ்வொரு தேசத்தாரும் பிரளயத்தின் முக்கிய சங்கதிகளைத் தங்கள் தேசத்திலேயே நடந்ததாகவும் அதில் சம்பந்தப்பட்டவர்கள் தங்கள் தேசத்தார்களேயென்பதாகவும் கூறி, ஆரராத் போன்ற ஒரு மலையையும், பேழையைப் போன்ற ஒரு கப்பலையும், நோவாவைப் போன்ற ஒரு முனியையும் ஏற்படுத்துகிறார்களேயென்று ஆக்ஷேபனை கூறப்படுகிறது. சீனருடைய புராண கதைகளில் சொல்லப்படும் 'போஹி'யும், இந்துபுராணங்களில் சொல்லப்படும் 'சத்தியவிரதனு'ம், கல்தேயருடைய கதைகளிற் சொல்லப்படும் 'சிசுத்துரசு'ம், கிரேக்கருடைய கட்டுக்கதைகளிற் சொல்லப்படும் 'ஒஜீெஐசு'ம், 'டியுகெலியனு'ம், சத்திய வேதத்திற் கூறப்பட்டுள்ள நோவாதானென்றும் நோவாவுக்கே வெவ்வேறு தேசத்தில் வெவ்வேறு பெயர் சொல்லப்படுகிறதென்றும் பலர் அபிப்பிராயப்படுகிறார்கள். அமெரிக்க இந்தியர்களுக்குள்ளேயும், இப்படிப்பட்ட ஒரு பிரளயமுண்டானதாகவும் பின்பு ஒரேயொரு மனிதனுடைய குடும்பத்திலிருந்து திரும்பவும் மனிதர் விருத்தியானதாகவும் பாரம்பரியமாக ஒரு கதை சொல்லப்பட்டு வருகிறது. இப்படியே அவரவர்கள் தேசத்திலும்
|