ஒரு மனிதன் தப்பிப் பாதுகாக்கப்பட்டானென்றும், அவன் மனித ஜாதிகளுக்கு இரண்டாவது தந்தையானான் அதாவது, இரண்டாந்தரம் மனிதர் அவனிலிருந்து உற்பத்தியாகிப் பெருகினார்களென்றும் சொல்லப்பட்டு வருகிறது." மேற்கண்ட வசனங்களில் சீனா இந்தியா கல்தேயா சின்னஆசியா அமெரிக்கா முதலிய தேசங்கள் ஜலப்பிரளயத்தினால் அழிந்துபோனதாகவும், அப்படி அழிந்த காலத்தில் நோவாவின் குடும்பத்தைப்போன்ற ஒரு உத்தமமான குடும்பம் காப்பாற்றப்பட்டதாகவும் சொல்லிக்கொள்ளப்டுகிறது. ஆகவே, ஜலப்பிரளயம் ஒரு காலத்தில் உண்டாயிருக்கவேண்டுமென்பது தெளிவாகத் தெரிகிறது. ஒருவேளை அந்தத்தத் தேசங்களில் ஜலப்பிரளயமுண்டாயிருக்குமா என்று நாம் சந்தேகிக்கலாம். ஆகிலும் உற்று நோக்குவோமானால், அவைகள் யாவும் உண்மையே என்று காண்போம். லெமூரியா என்னும் பெருங்கண்டம் தண்ணீருக்குள் அமிழ்ந்து போகையில், அதன் சுற்றுக்கரையிலுள்ளோர் தங்களுக்கு எதிர்ப்பட்ட மற்ற இடங்களுக்கு என் போயிருக்கக் கூடாது? ஆபத்தான காலங்களில் அனேகர் அழிந்துபோயிருக்க, சிலர் மாத்திரம் தப்பக்கூடாதா? தப்பியவர்கள் தங்களுக்குப் பக்கத்திலுள்ள இடங்களில் தாபரித்து விருத்தியாகக் கூடாதா? விருத்தியான பின்னடியார் எங்கள் முற்பிதாவாகிய இன்னார் காலத்தில் நாங்கள் இங்கு வந்தோமென்று மேன்மையாய்ச் சொல்லிக் கொள்வது இயல்புதானே. லெமூரியாக் கண்டம் அழிந்த காலத்தில் சின்ன ஆசியாவில் நோவாவும் இந்தியாவில் சத்தியவிரதனும் சீனாவில் போகியும் அமெரிக்காவில் ஒரு பக்தனும் ஆப்பிரிக்காவில் ஒரு புண்ணியவானும் தப்பிப் பிழைத்தார்களென்று சொல்வது அசம்பாவிதமல்லவே. இத்தேசங்களின் ஓரங்கள் லெமூரியாவிற்கு சமீபித்திருந்ததென்று நாம் அறிய வேண்டும். இவர்களைப் போல இன்னும் எத்தனையோ பேர் தப்பியிருக்கலாம். 13. அழிந்துபோன உவரிப்பட்டினம். Essays by S. V. Thomas, M. A. Page 85. "About six miles from Cape Comorin stands a small fishing village called Uvari, or Ovari. This village, I am inclined to think, occupies the site of the Ophir of the Bible. In the first place, although Ovari is at present only a small fishing village, yet unlike other villages of a similar kind, it possesses a solid stone temple, which is as old as any other temple in India, and is to-day visited by pilgrims from the remotest corners of the country, thus showing that it once had a glory, and a name that have long ago departed. Again, the word Uvari or Ovari means in Tamil nothing more or less than a seaport, being connected with Uvar, salt or salt sea. We may, therefore, reasonably conclude that Ovari was a great emporium of trade and that it was by pre-eminence called the seaport, which the merchants of Tyre might have mistaken for its proper name, a thing which often happens in South India. To more than 95 percent of the Tamil people Madras is known only by the name 'the city.' Further with regard to the general appearance of Ovari the sand banks that are found there have the character of earth piled by artificial means, that is, they look as if they have been dug out of the earth and thrown up as mounds. Add to this circumstance the fact that when heavy rains have washed down the earth from these heaps of sand, people have now and then picked up pieces of gold. The inhabitants mention this fact not because they know anything about Ophir and its gold, so as to be ambitious of connecting their village with that name, but as an instance to show that once their village was inhabited by very rich people, who left their gold in their place when they themselves went the way of all mankind." "கன்னியாகுமரி முனைக்குச் சற்றேறக்குறைய ஆறுமைல் தூரத்தில் உவரி அல்லது ஓவரி என்ற செம்படவர் வசிக்கும் ஒரு கிராமம் இருக்கிறது. அந்தக் கிராமம் சத்திய வேதத்திற் கூறியுள்ள ஒப்பீர் நகரிருந்த
|