பக்கம் எண் :

31
அழிந்துபோன உவரிப்பட்டினம்.

இடத்திலிருக்கிறதென்று நான் எண்ணுகிறேன். அதற்குப் பல முகாந்தரங்கள் உள. முதலாவது, அது முக்கியமற்ற செம்படவருடைய கிராமமானபோதிலும், அதைப்போலொத்த மற்ற கிராமங்களுக்கு வித்தியாசமாக, ஒரு ஸ்திரமான கல்லாலமைந்த கோயில் அதற்கு உண்டு. அந்தக் கோயில் இந்தியாவிலுள்ள மற்றக் கோயில்களைப் போலவே அதிகப்பழமையானதாயும் தேசத்தின் நானாதிசைகளிலுமிருந்து ஜனங்கள் அங்கே சுவாமி தரிசனத்துக்கு வரும்படியான அவ்வளவு மகிமையுள்ளதாயும் இருக்கிறது. இதனாலே அது ஒருகாலத்தில் அதிகப் பேர் பிரஸ்தாப மகிமையுடையதாயிருந்ததென்று தோன்றுகிறது. இரண்டாவது, உவரி என்றால் தமிழில் கடற்றுறைமுகம் என்று அர்த்தம். அதாவது உப்பு என்று பொருள்படும் உவர் என்ற மொழியுடன் சம்பந்தப்பட்டது. இந்தக் குறிப்புகளினின்று உவரியானது வர்த்தகத்துக்குப் பேர்போன இடமாயிருந்திருக்க வேண்டும் என்றும், முக்கிய வியாபார ஸ்தலமானதினால் அதை உவரி அல்லது விசேஷித்த துறைமுகம் என்றழைத்தார்கள் என்றும், தீருநகரின் வர்த்தகர் உவரியே அதற்குப் பேர் என்று தப்பாய் நினைத்தார்கள் என்றும் சந்தேகமறச் சொல்லலாம். இப்பேர்ப்பட்ட தப்பான எண்ணங்கள் தென்னிந்தியாவில் வழக்கமாய் உண்டாகிறதுதான். (உதாரணமாக, நூற்றில் 95 பேர் மதராசைப் 'பட்டணம்' என்றுதானே அழைக்கிறார்கள்.) மூன்றாவது, அந்த உவரி என்னும் கிராமத்தின் பொதுவான வெளித்தோற்றத்தைக் கவனித்தால், அங்குள்ள மணல் மேடுகள் தரையில் இருந்து வெட்டப்பட்டுக் குவிக்கப்பட்ட மேடுகள்போல் காணப்படுகின்றன. நான்காவது, பெருமழை பெய்து இந்த மணல்மேடுகள் கரையும்போது ஜனங்கள் அம்மேடுகளிலிருந்து பொன்நாணயங்களை எடுத்திருக்கிறார்கள். அக்கிராமவாசிகள் இந்தச் சங்கதியைச் சொல்லும்போது தங்கள் கிராமம் பூர்வகாலத்தில் மகிமை பெற்றிருந்த "ஓப்பீர்" என்னும் நகரம்தான் என்ற பெருமையான காரியத்தை ஸ்தாபிக்க வராமல், தங்கள் கிராமம் முற்காலத்தில் தனவான்கள் வசித்த இடமென்றும் அவர்கள் மரிக்குங்கால் தங்கள் பொன்னையும் திரயத்தையும் அவ்விடத்தில் விட்டு மரித்தார்கள் என்றும் அர்த்தப்படும்படியாகவே அப்படிச் சொல்லுகிறார்கள்."

கன்னியாகுமரிக்குச் சுமார் ஆறுமைல் தூரத்திலுள்ள உவரியென்னும் கடற்றுறைமுகத்தில் பூர்வ காலத்தில் கட்டப்பட்ட பழமையான கோயில்களிருந்ததாகவும், அவை இப்போது பிரதானமற்றுப் போனதாகவும், அங்குள்ள மேடான இடங்களில் பொன்நாணயங்கள் மழைபெய்கிற காலங்களில் கண்டெடுக்கப்படுகிறதாகவும் தோன்றுகிறது. அவ்விடத்தில் வழங்கிவந்த பொன் நாணயங்கள் மிக மாற்றுயர்ந்ததாயிருந்ததின் நிமித்தம் சாலொமோன் என்னும் யூதேயாதேசத்து ராஜன் நான் மிகுந்த மகிமையுடையதாய்க் கட்டிய தேவாலயத்தின் கதவுகளைப் பசும்பொன் தகட்டினால் மூடினான் என்பதைக் கொண்டும், ஒப்பீரீன் தங்கத்தை ஈராமின் கப்பல்கள் வருஷந்தோறும் காணிக்கையாக் கொண்டு வந்து சாலொமோனுக்குக் கொடுத்தனவென்றும் 1. ராஜாக்கள் 10, 11, 22-ல் மூன்று வருஷத்துக்கு ஒருதரம் தர்ஷீஸின் கப்பல்கள் பொன்னையும் வெள்ளியையும் யானைத்தந்தங்களையும் குரங்குகளையும் மயில்களையும் கொண்டுவரும் என்றும் சொல்லியிருப்பதைக் கொண்டும், சுமார் 3,000 வருஷங்களுக்கு முன்னாலேயே உவரியென்னும் கிராமம் கடற்றுறைப் பட்டணமாயிருந்ததென்றும், அங்குள்ள பொன் மிகவும் நேர்த்தியானதென்றும், அதை மேற்றிசை வியாபாரிகள் வாங்கிக்கொண்டு போனார்களென்றும் தெளிவாகத் தெரிகிறது. இற்றைக்குச் சுமார் 3,000 வருஷங்களுக்குமுன் பசும்பொன்னையும் ரத்தினங்களையும் வாசனைத்திரவியங்களையும் சந்தனக்கட்டைகளையும் யானைத்தந்தங்களையும் தங்கள் வியாபாரப் பொருளாக மற்றத் தேசங்களுக்கு ஏற்றுமதி செய்த அவ்விடம் இப்போது அழிந்து அடையாளம் தெரியாமல் நிற்கிறது. பூர்வகாலத்தில் அங்குள்ளோர் செய்த வியாபாரத்தைக் கவனிக்கும்போது அவர்கள் மிகுந்த நாகரீகமுடையவர்களாயும் செல்வப்பெருக்குடையவர்களாயு மிருந்தார்களென்று சொல்லாமலே விளங்குகிறது.

இதன்முன் சரித்திர ஆராய்ச்சிக்காரர் சொல்லிய சிலவரிகளைக் கவனித்த நாம் தென்னிந்தியாவிற்குத் தெற்கே இந்து மகா சமுத்திரத்தில் விசாவித்திருந்து ஜலப்பிரளயத்தினால் அழிந்து போன பூபாகம் லெமூரியாவென்றும், இந்து மகாசமுத்திரத்தில் அது இருந்த இடம் தெரியாமல்