அழிந்துபோக,அதிலுள்ளோர் தங்களுக்குச் சமீபத்திலுள்ள தென்னிந்தியாவிலும் இந்து சீன தீபகற்பத்திலும் சந்தா சுமாத்திரா ஜாவா முதலிய தீவுகளிலும் மதகாஸ்கர் தீவிலும் ஆப்பிரிக்கா அமெரிக்காவின் தென்பாகங்களிலும் போய்க் குடியேறினார்களென்றும் தெரிகிறது. இப்படி அழிந்துபோன லெமூரியாக் கண்டத்திலுள்ளோர் உலகத்தின் சரித்திரம் எழுத ஆரம்பிக்கும் முன்னாலேயே மிகுந்த நாகரீகமும் கல்வியுமுடையவர்களாயிருந்தார்க ளென்று பல கல்விமான்கள் சொல்லியிருக்கிறார்கள். அதோடு அழிந்துபோன அக்கண்டத்திலிருந்தவர்கள் தமிழ்ப் பாஷையையே பேசிவந்தார்களென்றும் லெமூரியா அழிந்தபின்பே மற்றப்பாஷைகள் தமிழில் கலக்க ஆரம்பித்ததென்றும் நாம் அறிவோம். மேலும், உலக சரித்திரத்தை எழுத ஆரம்பித்த அநேகர், தங்கள் தங்கள் தேசத்தில் நாகரீகம் கல்வி கைத்தொழில் சரித்திரம் உண்டான காலத்தையே பிரதானமாக வைத்துக் கொண்டு, அதற்குச் சற்று முன்பின்னாகவே மற்றத் தேசத்துச் சரித்திரமிருக்குமென்று உத்தேசங் கட்டினார்கள். இதினால் ஒரு தேசத்தினுடைய பூர்வீகம் மாறி, உண்மை கண்டு அறிவதற்கு ஏதுவில்லாமற் போகிறது. மற்றுஞ் சிலர் தமக்கு முன் எழுதியவர்களுடைய அபிப்பிராயத்தையே சாதித்துச் சொல்லுகிறார்கள். உலகத்தின் இயற்கை அமைப்பைக் கவனித்துச் சரியான காலம் சொல்லுகிறவர்கள் பைத்தியக்காரராக நினைக்கப்படுகிறார்கள். வேறு சிலர், தாங்கள் சொல்லும் காரியங்கள் எல்லாராலும் நம்பப்பட வேண்டுமென்பதை உத்தேசித்துத் தாங்கள் எழுதிவைத்தவைகளை அநாதியாயுள்ளதென்றும், வெகுபூர்வந்தொட்டு இருக்கிறதென்றும், இது ரிஷிகளால் எழுதப்பட்டதென்றும், இதை நம்பாதவர்கள் இன்னின்ன சாபத்துக்குள்ளாவார்களென்றும் சொல்லுகிறார்கள். வேறு சிலர், பூர்வமாயுள்ள கிரந்தங்களில் நூதனமாய்த் தங்கள் சுயபிரயோஜனத்தை விரும்பிச்செய்த சில சூத்திரங்களை அங்கங்கே நுழைத்துவிடுகிறார்கள். இதனால் இந்தியாவின் பூர்வ சரித்திரங்கள் காலவரையறை சொல்ல ஏதுவில்லாமல் சந்தேகிக்கும் நிலையில் வந்துவிட்டது. நூற்றைக் கெடுத்தது குறுணி என்பதுபோல தற்காலத்தவர் செய்யும் சொற்பப் புரட்டுகள் பூர்வமாயுள்ள நல்லதையும் கெடுத்துவிடுகிறது. அப்படியிருந்தாலும் தென்னிந்தியாவில் பூர்வமாய்ப் பேசப்பட்டுவந்த தமிழ்ப்பாஷையின் இலக்கணமாகிய தொல்காப்பியம் நாளது வரையும் எவ்விதக் கலப்புமற்றுத் தன் பூர்வத்தை விளக்கிக் காட்டிக்கொண்டு நிற்பதை நாம் காண்கிறோம். அந்நூல் முதல் ஊழியின் இறுதியிலிருந்த அதாவது இற்றைக்குச் சுமார் 8,000 வருஷங்களுக்கு முன்னிருந்த முதற்சங்கத்தின் கடைசியில் கடலால் விழுங்கப்பட்ட தென்மதுரையில் ஆண்டுகொண்டிருந்த நிலந்தருதிருவிற் பாண்டியன் காலத்தில் அரங்கேற்றப்ட்டதென்றும் அந்நூலே இடைச் சங்கத்தாருக்கு ஆதார நூலாயிருந்ததென்றும் இதன் பின் காண்போம். தொல்காப்பியர் தமது குருவாகிய அகத்தியரால் இயல் இசை நாடகமென்னும் முத்தமிழைப்பற்றியும் எழுதிய 80,000 சூத்திரங்களைக் குறுக்கி 8,000 சூத்திரமாகச் செய்தார் என்று சொல்லப்படுகிறது. Manual of the Administration of the Madras Presidency, Vol. III, Page 907. 'Tol (தொல்-tol. Tam.) old - Tolgauppyam (தொல்காப்பியம்-tolgappiyam). From (above and kavya, san, Poem). Tamil grammar [lacshanam] by Tolgauppyan of Madura, pupil of Agastyan whose grammer, consisting of 80,000 rules, he abridged, reducing the number to 8,000. The Tolgauppyam complete shoud consist of three parts; on letters, words and prosody, or rather versification as an art. Of these the last part cannot be found complete. Tolgauppyam has had three commentaries written upon it by Natchinarkiny, Yilampooran, and Shenauvareiyan [Nunnool]. தொல்காப்பியம் என்பது அகஸ்தியருடைய மாணாக்கனான மதுரைத் தொல்காப்பியரால் எழுதப்பட்ட தமிழ் இலக்கணம். 80,000 சூத்திரங்களடங்கிய பேரகத்தியம் என்னும் அகஸ்தியருடைய இலக்கணத்தைச்
|