பக்கம் எண் :

33
மிகப்பூர்வ காலத்தைக்காட்டும் சில முக்கிய குறிப்புகள்.

சுருக்கி இவர் 8,000 சூத்திரங்களால் தமது இலக்கண நூலை எழுதினார். தொல்காப்பியம் முழு நூலும் எழுத்து சொல் யாப்பு என்னும் மூன்று பிரிவுகளையுடையதா யிருக்கவேண்டும். இவைகளில் கடைசிப்பிரிவு பூரணமாய்க் கிடைக்கவில்லை. நச்சினார்க்கினியர் இளம்பூரணர் சேனாவரையர் என்ற மூவர் தொல்காப்பியத்துக்கு உரை யெழுதியிருக்கிறார்கள்."

இவர் எழுதிய சூத்திரங்கள் தமிழ் மக்களால் பசும்பொன்னிலும் சிறந்தவைகளாக நாளதுவரையும் போற்றப்பட்டு வருகின்றன. இருந்தாலும், அவர் கருத்துக்கள் யாவும் தெரிந்து கொண்டு அனுபோகத்துக்குக் கொண்டு வந்தவர்கள் மிகச் சிலர் என்றே சொல்ல வேண்டும். மேலும், தொல்காப்பியம் 8,000 சூத்திரங்களுடையதென்று மக்லீன் பண்டிதர் சொல்லும் வசனங்களைக் கவனிக்கையில், தற்காலத்தில் வழங்கும் 1612 சூத்திரங்கள் மிகச் சொற்பமென்றே சொல்லவேண்டும்; மீதியான 6,388 சூத்திரங்கள் அந்தின் வாய்ப்பட்டு அழிந்துபோயினவென்று நினைக்க இடமிருக்கிறது. உவின்ஸ்லோ பண்டிதர் சொல்லுகிற 12,000 சூத்திரங்கள் சிற்றகத்தியமாயிருக்கலாமென்று எண்ண இடமிருக்கிறது. இப்படி அழிந்துபோன தொல்காப்பியம், பூர்வ தமிழரின் வழக்க ஒழுக்கங்கள் ராஜமுறைமைகள் நிலத்தின் பாகுபாடுகள் வீணையின் வகைகள் முதலியவைகளைப் பற்றி மிகத் தெளிவாகச் சொல்லுகிறது. தற்காலத்தில் காணப்படும் பாஷையின் தேர்ச்சி அனைத்திற்கும் மேலான இலக்கணமுடையதாய் விளங்குகிறது. தமிழின் பெருமை இன்னதென்று அறிந்து கொள்வதற்கு அது போதுமானதென்றே நினைக்க வேண்டும்.

14. மிகப்பூர்வ காலத்தைக்காட்டும் சில முக்கிய குறிப்புகள்.

தொல்காப்பியம் உண்டாவதற்கு முன் 4,400 வருஷங்களாகிவிருந்த முதல் சங்கத்தையும் அதில் தலைமை வகித்த புலவர்களையும் பற்றி நாம் கேட்கையில், இது உள்ளதாயிருக்குமோ, உலகமுண்டாகி இன்னும் 6,000 வருஷமாகவில்லையே 9,000 10,000 வருஷங்களுக்குக் கணக்குச் சொல்லுகிறாரேயென்று நாம் நினைப்போம். 3,400 வருஷங்களுக்கு முன் மோசே முனிவரால் எழுதப்பட்ட ஆதியாகமத்தில் உலகசிருஷ்டி கிரமவரலாற்றில் சொல்லப்படும் ஒவ்வொரு தினமும் ஒவ்வொரு ஊழிகாலமா யிருக்கவேண்டுமென்பது சரித்திரக்காரர்களுடைய கொள்கை. ஏனென்றால், மோசேயின் பேழைக்குள் வந்தடைந்த மிருகங்களைப் பார்க்கிலும் எத்தனையோ மடங்கு பெரிதான மிருகங்களின் எலும்புகள் மண்ணில் புதைந்திருப்பதாகக் கண்டுபிடித்திருக்கிறார்கள். மிகப் பெரிதான மனித எலும்புகளும் வரவரக் காணப்படுகிறது. கடலால் அழியாத சில மேட்டுப்பாங்கான இடங்களில் 20,000 வருஷங்களுக்கு மேற்பட்டவைகளான மரங்கள் இருக்கிறதாகக் கண்டுபிடித்திருக்கிறார்கள். மரத்தின் வளர்ச்சியைக் காட்டும் ரேகைகளைக் கொண்டு கணிக்கும் வருஷங்கள் தவறுதலுடையவையாகாவென்று துணிந்து சொல்லலாமென்பதைப் பின் வரும் வாக்கியங்களால் கண்டுகொள்வோம்.

Doubts of Infidels, Page 26.

"The bones of man, of the type of the North American Indian, have been exhumed from the delta of the Mississippi at New Orleans, which were found lying below the fourth forest level, and making large allowance, must have lain there for more than fifty-thousand years. The exhumed relies of ancient civilization in the valley of the Nile antedate the History of the Jewish theocracy and the foot prints of the Creator are found in the granite pages of the primary and fossiliferous rocks, long anterior to the fabulous era of this Genesaical history of creation. Humboldt describes a tree now growing in the famous gardens of Montezuma, as more than six-thousand years old, and another in Central America as but little less than twenty-thousand years old."

"வடஅமெரிக்க இந்தியர்களின் தேக அமைப்பையொத்த மனித எலும்புகள், மிசிசிப்பிநதியின் சங்கம பூமியில் நியு ஆர்லியன்ஸ் என்னும் இடத்தில் வெட்டியெடுக்கப்பட்டிருக்கின்றன. வனமட்டத்தின் நாலாவது