பக்கம் எண் :

39
தென்னாட்டிலுள்ளோர் வழங்கிவந்த தமிழ்ப் பாஷையின் பூர்வீகமும் சிறப்பும்.

பார்த்தவர்கள் நன்றாய் அறிவார்கள். சரிதை கிரியையோகம் ஞானம் என்னும் நாலு படிகளையுமுடையவர்கள் தங்கள் தங்கள் அறிவுக்கேற்ற விதமாய் ஆராதித்து வரக்கூடியதாக ஆலயங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

ஜலப்பிரளயத்திற்குத் தப்பின சிலர், தென்னிந்தியாவிற்கு வந்து குடியேறித் தங்கள் காலத்திலுள்ள பூர்வமான ஆலயங்களைப்போல ஆலயங்கள் கட்டி, அவ்விடத்தில் தாங்கள் வணங்கிய தெய்வத்தையே இங்கே வணங்கினார்களென்றும் தெரியவருகிறது.

எப்படி இந்துமதம் தென்னிந்தியாவின் தெற்கிலுள்ள விஸ்தாரமான நாடுகளில் மிகப் பூர்வீகமாயிருந்ததோ, அப்படியே அப்பெருநாட்டின் பாஷையாகிய தமிழும் எவ்விதமான கலப்புமற்றுத் தனிப்பாஷையாய் ஜலப்பிரளயத்துக்கு முன்னாலேயே யிருந்ததென்று பின்வரும் வசனங்களில் பார்ப்போம்.

IV. தமிழ்ப்பாஷையினது தொன்மை.

1. தென்னாட்டிலுள்ளோர் வழங்கிவந்த தமிழ்ப் பாஷையின்
பூர்வீகமும் சிறப்பும்.

இதை வாசிக்கும் கனவான்களே, தென்னிந்திய சங்கீதத்தின் நுட்பத்தையும் அதன் பூர்வீகத்தையும் நாம் அறியவேண்டுமானால் சங்கீதத் தமிழையும் நாடகத் தமிழையும் தன் அங்கமாகக்கொண்டு முத்தமிழ் என்று பெயர் வழங்கும் தமிழ்ப்பாஷையைப் பற்றி நாம் சற்று விசாரிக்க வேண்டியது அவசியம். தமிழ்ப்பாஷையுண்டான காலமே கர்நாடக சங்கீதமும் உண்டான காலமாம்; தமிழப்பாஷைக்குரிய இனிமையே தென்னிந்திய சங்கீதத்தின் இனிமையாம். தமிழ்ப்பாஷை எப்படி அன்னிய பாஷைகளோடு கலவாத தனித்தபாஷையோ அப்படியே தென்னிந்திய சங்கீதமும் மற்றச் சங்கீதங்களோடு கலவாமல் தனித்த விதிகளுடையதாம். அறிஞர்களால் உயர்ந்ததென்று எண்ணப்படும் தென்னிந்திய சங்கீதத்தையும் அதன் மற்றும் வரலாறுகளையும் நாம் விசாரிக்குமுன் தமிழ்ப்பாஷையின் தொன்மையையும் அதன் சிறப்பையும்பற்றிப் பார்க்க வேண்டும். இங்கே மற்றப் பாஷைகளோடு ஒப்பிட்டும் மற்றத் தேசங்களோடு ஒப்பிட்டும் மற்றவரால் தமிழ்ப் பாஷைக்கு உண்டான நன்மை தீமைகளைக் காட்டியும் அறிஞர்கள் சொல்லும் சில வசனங்களை எழுதினேனே யொழிய மற்ற எந்த விதத்திலும் ஒரு பாஷையையாவது ஒரு ஜாதியாரையாவது குறைசொல்ல வந்ததாக நினையாதிருக்கும்படி மிகவும் கேட்டுக் கொள்ளுகிறேன்.

உலகச் சரித்திரங்கள் எழுதப்படுவதற்கு முன்னும் மற்றத் தேசத்தார் நாகரீகமுடையவர்களாகுவதற்கு முன்னும், அழிந்துபோன லெமூரியாக் கண்டத்திலுள்ளோர் நாகரீகமுடையவர்களாயிருந்திருக்க வேண்டுமென்று சரித்திரக்காரர் சொல்வதற்கிணங்க, அக்கண்டத்திலுள்ள தென்மதுரையும், அதில் அரசாண்டு வந்த பாண்டிய ராஜர்களும் சங்கப்புலவர்களும் பேசி வந்த பாஷையாகிய தமிழும், மிகுந்த தொன்மையும் தனிச் சிறப்பும் வாய்ந்தவைகளாயிருந்தன. தமிழ் என்னும் பதத்தின் முதல் இரண்டு எழுத்துக்கள் சேர்ந்த தமி என்னும் முதனிலையானது ஒப்பின்மை, தனிமை என்றும், தமிழ் என்னும் பதமானது இனிமை, மதுரம் என்றும் அர்த்தப்படுமென்று நாம் அறிவோம். அவ்வர்த்தத்திற்கிணங்கத் தமிழ்ப்பாஷையானது மேன்மை பொருந்தியதாய் மற்றப் பாஷைகள் கலவாததாயிருந்ததென்று சில அறிஞர் சொல்லும் அபிப்பிராயங்களை இங்கே பார்ப்போம்.

Manual of the Administration of the Madras Presidency, Vol. I. P. 42.

"There is little doubt that the Dravidian languages are incomparably older in point of time than the Sanskrit. It is not an unreasonable supposition that they once occupied the whole