of Hindustan and have been driven to their present position to the south and along the coast by the encroachment of other languages coming from the North-west." "திராவிட பாஷைகள் சமஸ்கிருத பாஷைக்கு வெகு காலத்துக்கு முன்னுள்ளவை யென்பதற்குச் சந்தேகமேயில்லை. ஆதியில் அவைகள் இந்துஸ்தானம் முழுவதும் வழங்கிவந்ததென்றும், பிறகு வடமேற்கிலிருந்து உற்பத்தியான மற்றப் பாஷைகள் வரவர, அவை தற்காலம் இருக்கிற கீழ்கரை, தென்கோடி முதலிய இடங்களுக்கு துரத்தப்பட்டன என்றும் நினைக்க இடமுண்டு." மேற்கண்ட வசனங்களைக் கவனிக்கையில், ஆரியர் இந்தியாவிற்கு வருவதற்குமுன் இந்து தேசம் முழுவதிலும் பேசப்பட்ட பாஷை தமிழ் என்று தோன்றுகிறது. மேலும் தமிழானது காலசம்பவங்களினால் மாறுதலையடைந்தாலும் அதின் இலக்கணம் மாறாமல் ஒரே மாதிரியாயிருக்கக்கூடிய அவ்வளவு தேர்ச்சியை அநேகமாயிரம் வருஷங்களுக்கு முன்னாலேயே அடைந்திருந்ததென்று பின்வரும் வசனங்களில் காணலாம். Manual of the Administration of the Madras Presidency, Vol. I, P. (112). "As far as present evidence goes, however, they are indigenous to India, and perhaps specially indigenous to Southern India, ......................As to their language, no other is known to which it can be affiliated. It stands alone, without any immediate predecessor. In origin, it must be long anterior to the Sanskrit, which has subsequently played so important a political part with regard to it. Its original strength is shown by the great persistence of its grammatical formations through all the vicissitudes of history." "தற்காலத்தில் ஏற்படும் குறிப்புகளைக் கவனித்தால், அவர்கள் இந்தியாவிலே, முக்கியமாய்த் தென்னிந்தியாவிலே உற்பத்தியானவர்களென்று தெரிகிறது. அவர்கள் பாஷையோவென்றால், மற்ற எந்தப் பாஷைக்கும் சொந்தமானதாகச் சொல்லக்கூடியதாக இல்லை. அதற்கு முன்னுள்ள மற்றெந்தப் பாஷையோடும் அது சேராமல் தனியே நிற்கிறது. உற்பத்தியைப் பார்த்தால், அது சமஸ்கிருதத்துக்கு வெகு காலத்துக்கு முன்னுள்ளது. ராஜாங்க விஷயமாய் சமஸ்கிருதம் பிற்காலத்தில் வெகு முக்கியத்துக்கு வந்தபோதிலும் உற்பத்தியில் அது பிந்தினது தான். தமிழ்ப்பாஷையினுடைய ஆதிபலத்தை யறியவேண்டுமானால், சரித்திர சம்பந்தமான மாறுதல்கள் எத்தனையோ உண்டாகியும் அதன் இலக்கண உறுப்புகள் மாறாமல் எக்காலும் அதே விதமாய் இருப்பதைக் கவனித்தால் விளங்கும்." மேற்கண்ட வசனங்களை நாம் கவனிக்கையில், எபிரேய பாஷையின் எழுத்துக்களிலிருந்து சில கிரேக்க எழுத்துக்களும் கிரேக்க பாஷையின் எழுத்துக்களிலிருந்து பாலிபாஷையின் எழுத்துக்களும், பாலிபாஷையின் எழுத்துக்களிலிருந்து சமஸ்கிருத பாஷையின் எழுத்துக்களும், அவைகளிலிருந்து அனேக பிராகிருத பாஷையின் எழுத்துக்களும் வந்ததென்றும், அப்பாஷைகளின் வார்த்தைகள் ஒன்றுக்கொன்று சம்பந்தமுடையவைகளாயிருக்கின்றனவென்றும் சொல்வதுபோல, தமிழ்ப் பாஷையும் இன்ன பாஷையிலிருந்து உண்டானதென்று சொல்ல ஏதுவில்லாமல் தனித்த பாஷையாயிருக்கிறதென்று சொல்லுகிறார். மேலும் எத்தனையோ சரித்திர சம்பந்தமான மாறுதல்கள் உண்டானபோதிலும் அவைகளினால் மாற்றப்படாத இலக்கண விதிகளைப் பூர்வமாய் அடைந்திருக்கிறதென்றும் சொல்லுகிறார். மிகப்பூர்வமாயுள்ள இத்தமிழ்மொழி, அதன் பின்வந்த வேறு எந்தப் பாஷையாலும் யாதொரு மாறுதலையுமுண்டாக்க முடியாமல் தனிப்பாஷையாயிருந்து வருகிறதென்பதைப் பின்வரும் வசனங்களில் காணலாம். Manual of the Administration of the Madras Presidency Vol. I, P.. (49). "North Indian Civilization, when it came as far south as the Tamul country, found the people already in possession of the art of writing and of cultivated language. In consequence of this, Sanskrit did not regulate the Tamul phonetic system, and merely held the place of a foreign learned language."
|