தமிழில் வழங்கும் அனேக வார்த்தைகளைத் தங்கள் பாஷையில் முதல் முதல் இருந்ததாக மற்றவர் நினைக்கும்படி காலாகாலங்களில் மாற்றி, மாற்றியதற் கிணங்க நூல்களும் புராணங்களும் கட்டுக்கதைகளுஞ் செய்து பரப்பிவந்தார்கள். நீர் என்ற பதம் நீரம் என்ற சமஸ்கிருத பதத்திலிருந்து வந்ததென்றும் தமிழர் பேசும் வார்த்தைகளில் நூற்றுக்குத் தொண்ணூறு சமஸ்கிருதமென்றும் வாய் கூசாமல் சொல்லுவார்களானால் வேறு என்ன சொல்ல மாட்டார்கள்! முதல் ஊழிக்கு முன் 4,400 வருஷங்களாகச் சங்கம் வைத்து நடத்திய வித்வ சிரோமணிகளும் அக்காலத்தும் அதற்கு முன்னுமிருந்த ஏராளமான தமிழ் மக்களும் தண்ணீர் குடிக்கவில்லையோ? அல்லது அதற்கு ஏற்ற பெயர் வைக்கத் தெரியாதிருந்தார்களோ? ஆரியர் வந்தபின்தானோ அவர்கள் குளிர்ந்த நீருக்கு தண்ணீரென்றும் சூடுள்ள நீருக்கு வெந்நீரென்றும் இப்படியே ஆற்றுநீர் ஊற்றுநீர் சேற்றுநீர் செந்நீர் செயநீர் கடல்நீர் குடிநீர் இளநீர் கண்ணீர் உமிழ்நீர் என்றும் சொல்ல ஆரம்பித்தார்கள்? இப்படியே சிறந்த ஏராளமான தமிழ் மொழிகளைத் தங்கள் பாஷையிலிருந்தே வந்ததென்று சொல்வதற்கு ஏற்றதாகச் சில எழுத்துக்களைக் கூட்டியும் சில எழுத்துக்களைக் குறைத்தும் நெடில் குறிலாகவும் குறில் நெடிலாகவும் மாற்றியும் சம்பந்தமில்லாத எழுத்துக்களாகத் திரித்தும் வழங்கினார்கள். தமிழ் நாட்டிலுள்ள சில முக்கியமான மலைகளுக்கும் ஆறுகளுக்கும் பட்டணங்களுக்கும் மனுஷர்களுக்கும் சமஸ்கிருதப் பெயர்கள் வைத்துப் புராணங்களும் கதைகளும் கட்டினார்கள். தாங்கள் செய்த புராணங்களையும் கவிகளையும் பிறர் அறியப் பிரசங்கித்து ராஜாக்களையும் ஜனங்களையும் உண்மையென்று நம்பும்படி நீர் என்ற வார்த்தையை நீர, நீரம், நாரம் என்று மாற்றி அவைகளிலிருந்து நாரதம், நாராயணன் என்று தொடுத்து கொண்டு பின் நாரத்திலிருந்தும் நீரத்திலிருந்தும் நீர் வந்ததென்று சொன்னதை நம்புகிறவர்கள், அவர்கள் கட்டிய கதைகளையும் நம்பினார்கள். அவர்கள் சொன்னதையெல்லாம் நம்புகிறவர்கள் ஏற்பட்டபின் சமஸ்கிருத பாஷையின் அனேக வார்த்தைகள் தமிழில் வந்து வழங்கத் தலைப்பட்டன. இதை விவேகிகள் அறிவார்கள். அதிகம் சொல்ல இங்கு அவசியமில்லை. இயல் இசை நாடகமென்னும் முத்தமிழிலுள்ள இசைத் தமிழாகிய சங்கீதத்தைத் தென்னாட்டிலிருந்தே மற்றவர்கள் கொண்டுபோனார்களென்பது பற்றியும் வடபாஷைக்காரரும் தமிழ் நாட்டினின்றே இசைத் தமிழைக் கொண்டுபோயிருக்க வேண்டுமென்பது பற்றியும் இங்கு எழுத நேரிட்டது. அதன் விபரம் இதன்பின் பார்ப்போம். தமிழ்மொழியோடு வடமொழி கலந்தவிதம் பின் வரும் வசனங்களில் காணலாம். 2. தமிழில் சமஸ்கிருதம் கலந்த வரலாறு. Manual of the Administration of the Madras Presidency, Vol. I, P. (4). "It is to be observed that though the long list of names mentioned in the Pooranas are all Sanskrit, these are only book names. The names of the country reported or ascertained by Aryan travellers and settlers were invariably translated into Sanskrit by the literary caste of the Aryans. It is a very common error to suppose that because none but Sanskrit names are found in the ancient literature of the country, it was therefore a country occupied by an Aryan people, and that all the places mentioned were founded by the Aryans. But in fact as the Aryan visitors to India had the monopoly of literature, the indigenous names could only appear in Sanskrit form; and no argument is to be thence deduced in one direction or another as to the extent of the Aryan colonizations. In later times Aryan influence has undoubtedly given current names to geographical places even in Southern India. * * It will be seen from the next note that Greek literature is analogous to Sanskrit in presenting indigenous Indian names in such a Greek dress that they are not easily recognisable; but the Greeks did not at all to the same extent actually translate Indian names."
|