யிருக்கிறது, என் அப்பா ஆணை நான் கொடுக்காட்டேன்' என்றதுபோல இதுவுமாயிற்று. இப்படித் தமிழ்மொழிகள் பலவும் சமஸ்கிருதத்தில் கலந்த பின்பும், அநேக தமிழ் நூல்கள் சமஸ்கிருதத்தில் திருப்பப்பட்டபின்பும் தான், சமஸ்கிருதத்திலிருந்தே தமிழ் மொழிகள் பலவும், நூல்கள் பலவும் வந்தனவென்று சொல்லத் துணிந்தார்களென்பதைப் பின்வரும் வசனங்களில் காணலாம். Dravidian Comparative Grammar by Bishop Caldwell, P. 34. "Professor Wilson observes that the spoken languages of the South were cultivated in imitation and rivalry of the Sanskrit, and but partially aspired to an independent literature; that the principal compositions in Tamil, Telugu, Canarese, and Malayalam are translations or paraphrases from Sanskrit works; and that they largely borrow the phraseology of their originals. This representation is not perfectly correct, in so far as the Tamil is concerned; for the compositions that are universally admitted to be the ablest and finest in the language, viz, the Cural and the Cintamani, are perfectly independent of the Sanskrit, and original in design as well as in execution." "தெற்கே பேசப்படுகிற பாஷைகள் சமஸ்கிருதத்தைப் பார்த்து அதற்கு மாறாக உண்டாக்கப்பட்டவைகளென்றும், அவைகள் சுய கிரந்தங்களை உண்டாக்கப் பிரயத்தனம் பண்ணியும் பலிக்கவில்லையென்றும், தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாள பாஷைகளிலுள்ள முக்கியமான நூல்களெல்லாம் சமஸ்கிருத நூல்களின் மொழி பொர்ப்புகளேயென்றும், அவைகள் சமஸ்கிருத மொழிகளையும் தொடர்மொழிகளையும் வாசகப்போக்கையும் நடையையுமுடையவைகளாயிருக்கின்றன வென்றும், உவில்சன் பண்டிதர் கூறுகிறார். இப்படி அவர் கூறுவது, தமிழ்ப்பாஷையின் விஷயத்தில் முற்றிலும் சரியல்ல. ஏனெனில், அந்தப் பாஷையில் மிகவும் நேர்த்தியானவைகளும் சிறந்தவைகளுமென்று உலகத்திலுள்ள அறிஞர்கள் யாவராலும் ஒப்புக்கொள்ளப்படுகிற திருக்குறளும் சிந்தாமணியும் சமஸ்கிருதக் கலப்பேயின்றி முழுதும் தமிழ்மயமாகவே விளங்குகின்றன." மேற்கண்ட வசனங்களைக் கவனிக்கையில், சமஸ்கிருத பாஷையே முந்தியுண்டானதென்றும் அதற்கு எதிரியடையாகத் தமிழும் தமிழைச்சேர்ந்த பாஷைகளு முண்டாக்கப்பட்டனவென்றும் திராவிட நூல்கள் சமஸ்கிருத பாஷையின் மொழி பெயர்ப்புகளாயிருக்கின்றனவென்றும் அவற்றின் நடை சமஸ்கிருதத்தின் நடையையே ஒத்திருக்கிறதென்றும் உவில்சன் பண்டிதர் சந்தேகிக்கிறார். இதுபோலவே தற்காலத்திலுள்ள சமஸ்கிருத பண்டிதர் ஒவ்வொருவரும் சொல்லிக் கொள்ளுகிறார்கள். ஆரிய பாஷையின் வார்த்தைகள் கலந்த பின்பும் தமிழ் மொழிகளை ஆரியபாஷை வார்த்தைகளாகச் சேர்த்துக்கொண்ட பின்பும் சமஸ்கிருதத்திலிருந்தே தமிழ் வந்ததென்று சொல்லாமல் வேறே என்ன சொல்வார்கள்? சென்ற 800 வருஷங்களுக்குள் பல புராணங்களும் சில வேதாந்த நூல்களும் சமஸ்கிருதத்திலிருந்து தமிழில் மொழி பெயர்க்கப்பட்டிருக்கின்றன என்பது உண்மையே. ஆயினும் அதுகொண்டு அதற்கு முன்னுள்ள தமிழ் நூல்களெல்லாம் சமஸ்கிருதத்திலிருந்தே வந்தன என்று சாதித்தல் எங்ஙனம் பொருந்தும்? சமஸ்கிருத பாஷை கலவாமல் முழுதும் தமிழ் வார்த்தைகளால் அமைந்திருப்பதற்குத் திருக்குறளும் சிந்தாமணியும் இங்கே உதாரணமாகக் காட்டப்படுகின்றன. இவற்றில் வழங்கிவரும் சில தமிழ் வார்த்தைகளைச் சமஸ்கிருத வார்த்தைகளென்று சொல்லும் பேதைகளுமுண்டு. திருக்குறள் தமிழ் நாடும் தமிழ் வேந்தரும் பலவிதத்திலும் சீர்குலைந்து தேய்ந்தகாலம் செய்யப்பட்டதென்று நாம் அறிவோம். இதிலும் மேலானவைகளாக இயல் இசை நாடகமென்னும் முத்தமிழுக்கும் எழுதிய நூல்களும் நீதி நூல்களும் முதற் பிரளயத்தாலும் இரண்டாம் பிரளயத்தாலும் அழிந்துபோய்விட்டன. ஆரியரும் சமணரும் தமிழ்நாட்டில் கலந்தபின்பும் மூன்றாவது தமிழ்ச் சங்கத்தின் இறுதியிலும் திருக்குறள் முதலிய தமிழ் நூல்கள் வெளிவந்தன. அதன் முன்னுள்ள தமிழ் மொழிகள் மிகச்சிறந்தவையென்றும் கலப்பற்றவையென்றும் சிறந்த இலக்
|