பக்கம் எண் :

47
தமிழே தாய்ப்பாஷையாயிருந்தது என்பது.

கணமுடையவை யென்றும் தொல்காப்பியத்தால் அறிவோம். தமிழ் மொழியின் தொன்மையைக் கவனித்தறிந்த எவரும் சமஸ்கிருதத்தினின்று தமிழ் வந்ததென்று சொல்லமாட்டார்.

3. தமிழே தாய்ப்பாஷையாயிருந்தது என்பது.

தமிழ்ப்பாஷையானது வெகுகாலங்களுக்கு முன்னாலேயே மிகச் சீர்திருத்தமடைந்திருந்த தென்பதும் இலக்கணங்களையுடையதா யிருந்ததென்பதும் பின்வரும் வசனங்களில் காண்போம்.

Dravidian Comparative Grammar by Bishop Caldwell, P. 29.

"No person who has any acquaintance with the principles of comparative philology and who has carefully studied the Grammars and vocabularies of the Dravidian Languages, and compared them with those of the Sanskrit, can suppose that the grammatical structure and inflexional forms of those languages and the greater number of their more important roots are capable of being derived from the Sanskrit by any process of corruption whatsoever."

"பாஷாதத்துவ சாஸ்திரவிதிகளைக் கொஞ்சமாவது அறிந்து, திராவிட பாஷைகளின் இலக்கணங்களையும் நிகண்டு திவாகரம் பிங்கலந்தை அகராதி முதலானவைகளையும் கவனமாய்ப்படித்து, அவைகளைச் சமஸ்கிருத பாஷையின் அமரம் முதலிய நிகண்டுகளோடும் அகராதிகளோடும் ஒப்பிட்டுப் பார்த்த எவரும். அந்தப் பாஷைகளின் இலக்கண வடிவங்களும் பதரூப பேதங்களும் வேற்றுமைகளும் அவைகளின் அதிக முக்கியமான பகுதிகளில் மிகுதியானவைகளும், சமஸ்கிருதத்தினின்று மருவியேனும் அல்லது வேறு எவ்விதமாயாகிலும் சிதைந்தேனும் வந்திருக்குமென்று நினைக்கமாட்டார்கள்."

Dravidian Comparative Grammer by Bishop Caldwell, P. 4.

"This language (Tamil) being the earliest cultivated of all the Dravidian idioms, the most copious, and that which contains the largest portion and the richest variety of indubitably ancient forms, it is deservedly placed at the head of the list."

"திராவிட பாஷைகளெல்லாவற்றிலும் தமிழே அதிபூர்வகாலத்திலேயே சீர்ப்படுத்தப்பட்டு விர்த்தியடைந்த பாஷையாயும் விஸ்தாரமான பாஷையாயும் யாதொருசந்தேகமுமின்றிப் பண்டையுருச் சொற்களை ஏராளமாயும் நிறைவாயுமுடைய பாஷையாயுமிருப்பதினாலே, அதை நியாயமாய் முதல் முதல் வைத்திருக்கிறது."

"From the various particulars mentioned above, it appears certain that the Tamil language was of all the Dravidian idioms the earliest cultivated; it also appears highly probable, that in the endeavour to ascertain the characteristics of the primitive Dravidian speech, from which the various existing dialects have been derived, most assistance will be furnished by the Tamil."

"மேலே கூறிய பற்பல விஷயங்களினாலும் திராவிடபாஷைக ளெல்லாவற்றிலும் தமிழ்ப் பாஷையே அதிகப் பூர்வீகமானதென்று நிச்சயமாய்த் தோன்றுகிறது. தற்காலத்திலிருக்கும் பல கிளைப்பாஷைகளுக்கு மூலபாஷையாயிருந்த திராவிடபாஷையின் ஆதிரூபத்தை அறிய முயற்சி செய்தால், தமிழே முன்னின்று அதிக உதவி செய்யுமென்றும் தோன்றுகிறது."

மேற்கண்ட வசனங்களைக் கவனிக்கையில், திராவிட பாஷையென்று ஆரியர் அழைக்கும் பாஷைகளுக்குத் தமிழே தாய்ப் பாஷையென்றும், சிறந்த இலக்கணமுடையதென்றும், பூர்வகாலத்தது என்றும், சமஸ்கிருதத்தினின்று முற்றிலும் வேறான பாஷையென்றும் தெளிவாகத் தெரிகிறது. மேலும், தொல்காப்பியம் மிகப் பழமையானதென்றும், நுட்பமான இலக்கண விதிகளையுடையதென்றும், அவர் மேற்கோள்களைக் கொண்டு அவருக்கு முந்திய காலத்திலேயே தமிழ் வித்வான்களிருந்திருக்க வேண்டுமென்பதை அறியலாமென்றும் பின்வரும் வாக்கியங்களில் காணலாம்.