இதில் தொல்காப்பியர் தமக்கு முன்னுள்ள தமிழ்நூல்களை ஆராய்ச்சி செய்து, தமிழ் கூறும் நல்லுலகத்து வழக்கும் செய்யுளுமாகிய இருவழியிலும் வழங்கும் எழுத்து, சொல், பொருள்களுக்கு இலக்கணம் சொன்னதாகச் சொல்லுகிறார். இதைக்கொண்டு தமிழின் பூர்வமும் அதின் பூரண நிலையும் தெளிவாக அறியலாம். 4. தமிழ்பாஷையின் வார்த்தைகளை வர்த்தக சம்பந்தமுள்ள மற்ற தேசத்தவர் வழங்கிவந்தார்களென்பது. மேலும் தென்னிந்தியாவோடு வர்த்தகஞ் செய்த கிரேக்கரும் பினீசியரும் வியாபாரப் பொருளாகக் கொண்டுபோன வஸ்துக்களின் பெயர்களைத் தங்கள் பாஷையில் அப்படியே வழங்கிவந்தார்களென்று பின்வரும் வாக்கியங்களால் தெரிகிறது. Preface to Winslow's Dictionary. "It is said that the Language of the Mountaineers of Rajah Mahal abounds in terms identified with Tamil and Telugu. What is more singular, the names by which the ivory, apes, and peacocks, conveyed by Solomon's ships of Tarshish were known, are the same with those still used in Tamil; seeming to imply that the traders visited Ceylon, or India, and obtained with these novelties their Tamil names, Danta, Kapi, and Togai, as found in the Hebrew Bible." "ராஜாமஹால் மலைத்தேசவாசிகள் பாஷையில், தமிழ் தெலுங்கு மொழிகள் ஏராளமாயிருக்கின்றனவென்று சொல்லப்படுகிறது. சாலோமோனுடைய தர்ஷீஸின் கப்பல்கள் கொண்டுபோன தந்தம், குரங்கு, மயில் முதலானவைகளின் பெயர்களைக் கவனிக்கையில், அவைகள் தற்காலத்திலும் தமிழ்ப்பாஷையில் வழங்கி வருகிற பெயர்களென்றும், அன்னிய தேசத்திலிருந்து வியாபாரிகள் இலங்கை இந்தியா முதலானவிடங்களுக்கு வந்திருந்தார்களென்றும், அப்பொருள்களோடு எபிரேய பைபிளில் காணப்படும் தந்தம், கபி, தோகை என்னும் அவைகளின் தமிழ்ப் பெயர்களையும் கேட்டறிந்து கொண்டு போனார்களென்றும் தெரியவருகிறது." மேற்காட்டியபடி இந்தியாவில் வியாபாரஞ்செய்த காலம் கிறிஸ்துவுக்குச் சற்றேறக்குறைய 1,000 வருஷங்களுக்கு முற்பட்டது. சுமார் 3,000 வருஷங்களுக்கு முன் தென்னிந்தியாவோடு வியாபார மூலமாய்ச் சம்பந்தப்பட்டவர்கள் இந்தியாவிற்கு மாத்திர முரியதான வியாபாரச் சரக்குகளின் பெயர்களைத் தமிழிலேயே சொல்லி வந்திருக்க வேண்டும். ஆனால் வர்த்தகர்கள் எந்தச் சரக்குகளை இந்தியாவில் இறக்குமதி பண்ணினார்களென்று தெரியவில்லை. இந்தியாவிற்கு நூதனமாகத் தோன்றும் கோலிகள் பீங்கான்கள் விளையாட்டுப் பொருள்கள் முதலியவைகளைத் தவிர வேறு எதை இறக்குமதி செய்திருப்பார்கள்? ஆகையினால் கிரேக்கு, எபிரேயு முதலிய அன்னியபாஷைகளின் மொழிகள், தமிழோடு அதிகமாய்க் கலந்திருக்கமாட்டாவென்று தோன்றுகிறது. Manual of the Administration of the Madras Presidency, Vol. I, P (48.) "The Phoenicians were the first to adopt a purely alphabetic system. The general voice of antiquity gives them this credit and the facts agree with the rumour. The Indo-Arabian alphabet is held to represent the Himyarite of South Arabia and the alphabets of India as shown in the Asoka's inscriptions. It will be seen later that this scheme does not provide for the original alphabet of the Dravidian nations, which remains thus unaffiliated in the same way as are the Dravidian languages themselves." "எழுத்துக்களை முதல்முதல் உபயோகித்தவர்கள் பினீசியர். பூர்வ நூல்களெல்லாம் இதைப் பற்றிச் சாட்சி கொடுக்கின்றன. விஷயங்களும் அவைகளுக்கு ஒத்திருக்கின்றன. அசோகனுடைய சிலை எழுத்துக்களைப் பார்த்தால், இந்திய அரபியருடைய எழுத்துக்களெல்லாம் தென் அரபியாவிலுள்ள ஹிமயாரிடி எழுத்துக்களினின்றும் இந்தியாவின் எழுத்துக்களினின்றும் உண்டானவையென்று தெரிகிறது. இந்த
|