பக்கம் எண் :

50
கருணாமிர்தசாகரம்-முதல் புஸ்தகம்-முதல் பாகம்-இந்திய சங்கீத சரித்திரச் சுருக்கம்

முறையில் திராவிடருடைய எழுத்து முறை உற்பத்தியைப் பற்றி யாதொன்றும் சொல்லவில்லை. திராவிட பாஷைகள் எப்படி ஒன்றோடும் சேராமல் தனிமையாய் நிற்கின்றனவோ அப்படியே திராவிட எழுத்துக்களும் நிற்கின்றன."

மேற்கண்ட வசனங்களில், ஆசியாத்துருக்கியில் மத்திய தரைக்கடலையடுத்த பினீசிய நாட்டிலேயே முதல்முதல் எழுத்துக்கள் உண்டாயினவென்று சொல்லப்படுகிறது. அசோகனுடைய சிலை எழுத்து, தென் அரேபியாவின் சித்திர எழுத்துக்களாலும் இந்திய எழுத்துக்களாலுமுண்டானதென்று சொல்லுகிறார். ஆனால் திராவிட பாஷையின் எழுத்துக்கள் அவைகளோடு சேராமல் தனித்து நிற்கின்றனவென்று சொல்வதை நாம் கவனிக்க வேண்டும்.

5. திராவிடபாஷையின் எழுத்துக்கள் பினீசிய பாஷையிலிருந்தும்
சமஸ்கிருத பாஷையிலிருந்தும் உண்டாகவில்லையென்பது.

இந்தியபாஷையின் அட்சரங்கள் பினீசிய பாஷையிலிருந்து உண்டாயிருக்கமாட்டாவென்று அடியில் வரும் வசனங்களில் காணலாம்.

Sanskrit-English Dictionary by Monier Williams, M.A., Preface, P. XVI.

"According to Mr. Edward Thomas (Prinsep's Indian Antiquities, Vol. II. Page 42.) the theory by which Professor Weber has sought to establish a Phoenician origin for the Indian alphabets is untenable. There are, however, two sets of Buddhist inscriptions, and that of Kapurdigiri is decidedly traceable to a Phonician source. Those on the rock of Girnar (Giri-nagara) in Kashywar, Gujarat, which are said to be most important in their relation to the present Indian alphabets, are not so clearly traceable. Mr. Thomas appears to have good ground for thinking that many of the Nagari letters were derived from the Dravidians of the south."

"எட்வர்ட் தாமஸ் என்பவர் (இந்திய புராதனங்கள் 2-ம் பாகம், பக்கம் 42.) சொல்லுகிறதாவது இந்திய பாஷையின் அட்சரம் பினீசிய பாஷையெழுத்திலிருந்து வந்ததென்று உவெபர் பண்டிதர் சொல்லுகிறது நிற்கக்கூடிய ஆதாரமுடையதல்ல. என்றாலும், இருவிதமான புத்தசிலாசாசனங்கள் இருக்கின்றன. அவற்றுள் கப்புர்டிகிரியிலுள்ள சிலையெழுத்துக்கள் பினீசிய அக்ஷரத்திலிருந்து உண்டாயிருப்பதாகத் தெரிய வருகிறது. குஜராத்திலுள்ள கத்தியவாரில் கிரிநகரா என்னும் பாறையில் காணப்படும் மிக முக்கியமானவையும் தற்கால இந்திய பாஷைகளின் அக்ஷரங்களுக்குச் சம்பந்தமுடையவையுமான எழுத்துக்கள் என்று சொல்லப்படுபவை அவ்வளவு தெளிவான ஒற்றுமையில்லாதவைகளாயிருக்கின்றன. நாகரி எழுத்துக்களில் அநேகம் தென்னிந்தியாவிலுள்ள திராவிட பாஷைகளிலிருந்து வந்ததென்று தாமஸ் துரை ஊகிக்கிறதற்கு ஏற்ற முகாந்தரங்களிருக்கின்றனவெனக் கூறுகிறார்."

மேற்கண்ட வசனங்களில் சிலாசாசனங்களைக் கொண்ட இந்தியபாஷை பினீசியபாஷைக்கு அவ்வளவு ஒத்திருக்கவில்லையென்று சொல்லுகிறதாகக் காண்கிறோம். ஆகையினால் இந்திய பாஷை பினீசிய பாஷையிலிருந்துண்டான தல்லவென்பது தெரிகிறது. தமிழப்பாஷை சமஸ்கிருத பாஷையிலிருந்துண்டான பாஷையல்ல. அதன் இலக்கணம் சமஸ்கிருத பாஷையின் இலக்கணத்திற்கு வித்தியாசமுடையதா யிருக்கிறதென்று அடியில்வரும் வசனங்களில் பார்ப்போம்.

Preface to Winslow's Dictionary.

"Unlike several of the vernaculars of India, it is not, as some have supposed, a daughter of the Sanskrit. Its Alphabet differs not only in character, but in sound; and is more limited. Its grammar, though conformed to the Sanskrit, as far as the genius of the Language would allow, is still very different. It has no article, no relative pronoun, no dual number, no optative mood.