பக்கம் எண் :

53
சமஸ்கிருதபாஷை யுண்டானதைப்பற்றிய சில குறிப்புகள்.

மேற்கண்ட வசனங்களில் தமிழப்பாஷையானது ஆங்கிலேய ஜெர்மானிய பாஷைகளைப் போலப் பூரணமும் சிறப்பும் பெற்று பேச்சுவழக்குடைய உயிர்ப்பாஷையாய் விளங்குகிற தென்கிறார்.

Preface to Winslow's Dictionary.

"The Tamil is not a vulgar dialect. Before the principal basis of the English had a written character, it was a highly polished language. Its name signifies sweetness, and though not so musical as the Telugu, in its poetic form especially, it is not without its claim to euphonic charms, and 'linked sweetness."

"தமிழ்ப்பாஷை கொச்சையான பாஷையல்ல. ஆங்கிலேய பாஷைக்கு எழுத்து வடிவம் ஏற்படுவதற்கு முன்னமே தமிழ் பளபளப்பும் மழமழப்பும் மிகுந்து தேர்ந்த சிறந்த பாஷையாயிருந்தது. தமிழ் என்பதற்கு மதுரம் என்று அர்த்தமாம். தெலுங்கைப் போல் அவ்வளவு இனிய ஓசையுள்ள தல்லவென்றாலும் கேட்பவர்களுக்கு ஆநந்தத்தை விளைவிப்பதிலும் தொடர்ச்சியான இனிமை பயப்பதிலும் தமிழ்ப்பாஷைக்குச் சக்தியில்லாமற் போகவில்லை."

மேற்கண்ட வரிகளை நாம் கவனிக்கையில், இங்கிலீஷ் பாஷைக்கு எழுத்துக்களுண்டாவதற்கு முன்னாலேயே தமிழ்ப் பாஷை சிறந்து விளங்கினதென்று தெரிகிறது.

7. சமஸ்கிருதபாஷை யுண்டானதைப்பற்றிய சில குறிப்புகள்.

Preface to Winslow's Dictionary.

"In the opinion of the Rev. William Taylor, the able Editor of Dr. Rottler's Dictionary, 'there was originally one simple homogeneous dialect, spoken by rude, simple aborigines from the Himalaya to Cape Comorin' Mr. Taylor thinks that, 'the earliest probable refinement of it was the Pali of the North, and the Tamil of the extreme South,' and that, 'the Sanscrit assumed its own form by engrafting numerous Chaldaic terms of science and others of common use in the old Pali.' It is evident from their names, that the Pali must have been anterior to the Sanscrit, the former signifying root or original, and the latter finished or polished. It is stated by Colonel Sykes that very ancient inscriptions on rocks and coins, are found in Pali and Pracrit four hundred years earlier than in Sanscrit."

"ராட்லர் அகராதியைப் பிரசுரஞ்செய்தவரான வில்லியம் டேய்லர் என்பவர், ஆதியில் இமய பர்வத முதல் கன்னியாகுமரி வரை, நாகரீகமில்லாதவர்களும் பேதமையுள்ளவர்களுமான பூர்வீகக் குடிகளுக்குள் யாதொரு கலப்பில்லாத ஒரே பாஷை பேசப்பட்டு வந்ததென்றும், அதுமுதற் சீர்திருத்தத்தை யடைந்து வடதேசத்தில் பாலியாகவும் தென்கோடியில் தமிழாகவும் வழங்கியதென்றும், பழைய பாலிபாஷையில் ஏராளமான கல்தேய சாஸ்திர சம்பந்தமான பரிபாஷைகளையும் சாதாரண வழக்கத்திலுள்ள அநேக மொழிகளையும் சேர்த்துக்கொண்டு சமஸ்கிருதபாஷையை யுண்டாக்கினார்களென்றும் அபிப்பிராயப்படுகிறார். இந்தப் பாஷைகளின் பேர்களைக் கவனிக்கையில் பாலிபாஷை சமஸ்கிருதத்திற்கு முந்தினதென்று தெளிவாகிறது. 'பாலி' என்றால் மூலம் அல்லது முந்தினது என்றும், 'சமஸ்கிருதம்' என்றால் திருத்தம் பெற்றது அல்லது செம்மையாக்கப்பட்டது என்றும் அர்த்தம். கற்பாறைகளிலும் நாணயங்களிலுமுள்ள அதிபூர்வீகசாஸனங்களில் பாலியிலும் பிராகிருதத்திலும் எழுதப்பட்டவைகள் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டவைகளுக்கு 400 வருஷங்களுக்கு முந்தினவைகளா யிருக்கின்றனவென்று கர்னெல் சைக்ஸ் கூறுகிறார்."

மேற்கண்ட வரிகளை நாம் கவனிக்கையில், இந்தியாவின் பூர்வத்தோர் இமயமலை முதல் கன்னியாகுமரி வரையும் குடியிருந்தார்களென்றும், அவர்களுள் யாதொரு கலப்புமற்ற ஒரே பாஷை பேசப்பட்டு வந்ததென்றும், அப்பாஷை வடபாகத்தில் பாலியென்றும் தென்பாகத்தில் தமிழ் என்றும் சொல்லப்பட்டதென்றும் சொல்லுகிறார். பாலி பாஷையிலிருந்தும் அனேக கல்தேய பதங்களினின்றும் கலந்து எடுக்கப்பட்டு சமஸ்கிருதமென்ற ஒரு பாஷையுண்டானதென்று