மேற்கண்ட வசனங்களில் பல தமிழ் மொழிகள் சமஸ்கிருத பாஷையில் சேர்ந்திருப்பதாகவும் சமஸ்கிருதத்திற்கும் தமிழுக்கும் பொதுவான வேறு பல வார்த்தைகள் சமஸ்கிருதத்தில் வருவதாகவும் தமிழுக்குரிய ட ண ள ர என்ற எழுத்துக்கள் தமிழிலிருந்து சமஸ்கிருதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டன வென்றும் சொல்லுகிறார். மேலும், ஒரு காலத்தில் ஒரு இடத்திலிருந்தே ஜாதிகள் யாவரும் தனித்தனி பிரிந்து போயிருக்க வேண்டுமென்றும், அவர்கள் பிரிந்து போகுமுன் தமிழ்ப் பாஷையையே பேசி வந்தார்களென்றும், பல காரணங்களைக் கொண்டு ஊகிக்க இடமிருக்கிறது. உலகச் சரித்திரம் உண்டாவதற்கு முன்னாலேயே இப்பேர்ப்பட்ட ஒரு பெரும் பிரிவு உண்டாயிருக்க வேண்டுமென்றும் தோன்றுகிறது. அப்படிப் பிரிந்து போனவர்கள் தாங்கள் பூர்வமாய்ப் பேசிவந்த பாஷையையே அரைகுறையாய்ப் பேசியிருக்க வேண்டும். ஏனென்றால், ஜலப்பிரளயத்தினால் அழிக்கப்படும் ஜனங்களில், அனேக அறிவாளிகளும் செல்வவான்களும் தப்பித்துக் கொள்ளத் திறமையற்றிருக்க, சாதாரண கூலி வேலை செய்கிறவனும் நீந்தத் தெரிந்தவனுமே தப்பிப் பிழைக்க முடியும். சாதாரண மனிதனுக்கு 200, 300 வார்த்தைகள் தெரிந்திருப்பது அவன் ஜீவனத்திற்கும் வழக்கத்திற்கும் போதுமானது. அதுவும் வழக்கத்திலிருக்க வேண்டுமானால் மற்றொருவன் கூட்டுறவும் வேண்டும். இல்லையானால் மறந்துபோம். மறந்தபின் தங்களுக்குப் பிரியமானதும் லேசானதுமான நூதன வார்த்தைகளைக் கொண்டே உலகக்காரியங்கள் பேச்சுப் பழக்கத்திற்கு வரவேண்டும். இப்படி வெகுகாலம் சென்றுவிட்டால், தங்கள் பூர்வ வார்த்தைகள் வெகுதூரம் மாறி, முதல் எழுத்து நீண்டும் குறுகியும் இன எழுத்து வந்தும் வழங்கும். அப்படியே கடை எழுத்துக்கெட்டும் நீண்டும் குறுகியும் வேறொரு எழுத்து வந்து விரவியும் வழங்கும். இப்படிப் பல பாஷைகளிலும் வழங்கும் வார்த்தைகளை ஒருங்கு சேர்த்துப் பார்ப்போமானால், 8,000 வருஷங்களுக்கு முன்னிருந்த தொல்காப்பியர் காலத்தில் 4,400 வருஷங்களாக இருந்த முதற்சங்கத்தார் ஆதரித்து வந்த தமிழ்ப் பாஷையே பூர்வமான பாஷையென்றும், அவர்களிருந்த லெமூரியா அழிந்தபின் தங்களுக்கு எதிர்ப்பட்ட கரைகளுக்குத் தமிழர் குடியேறினார்களென்றும், திட்டமாகச் சொல்லலாம். அவர்கள் சிதறிப்போன பின் தேச சீதோஷ்ண நிலைக்குத் தகுந்தபடியும் ஆகாராதிகளுக்குத் தகுந்தபடியும் கைத்தொழிலுக்கும் கல்விக்கும் தகுந்தபடியும் வெவ்வேறு பாஷைக்காரராகவும் தேசத்தாராகவும் அழைக்கப்பட்டார்கள் என்று தோன்றுகிறது. மேற்படி ஜாதியார் பேசும் பாஷைகளில் தமிழ் வார்த்தைகள் காணப்படுவதே அதற்குப் போதுமான அத்தாட்சி. சமஸ்கிருத பாஷையில் அநேக வார்த்தைகளும் சில எழுத்துக்களும் தமிழிலிருந்து எடுக்கப்பட்டு வழக்கத்திலிருக்கின்றன. Preface to Winslow's Disctionary. "But from affinities traced out by him, in addition to those hereafter given, it would seem that we may go farther back for many roots and forms in these tongues, to some common fountain both for them and for the languages of the Indo,-European family, including Sanscrit; nearer to the time when 'the whole earth was of one language.' He specifies 85 words in the Dravidian, as having Seythian affinities, 31 as Semitic, and 106 connected with the west Indo - European family, distinct from those in Sanscrit." "அவரால் காட்டப்பட்டிருக்கிற ஒற்றுமைகளிலிருந்தும் இனிக் கூறப்படுபவைகளிலிருந்தும் இந்தப் பாஷைகளிலுள்ள அநேக முதனிலைகளுக்காகவும் பதரூபங்களுக்காகவும் அவைகளுக்கும் சமஸ்கிருதமுள்பட்ட இந்து ஐரோப்பிய பாஷையினங்களுக்கும் பொதுவான ஊற்றுவரைக்கும் வெகுதூரம் போகலாமென்று தோன்றுகிறது. அதாவது, பூமியெங்கும் ஒரே பாஷையிருந்த காலம் வரைக்கும் எட்டிப்பார்க்கலாம் என்று
|