தோன்றுகிறது. சீத்திய சம்பந்தமுள்ள 85 சொற்களையும் சேம் வமிசத்தாரின் பாஷைக்குச் சம்பந்தமுள்ள 31 சொற்களையும் சமஸ்கிருதத்துக்கு வேறாகிய மேலை இந்து ஐரோப்பிய இனத்தைச் சேர்ந்த 106 சொற்களையும் எடுத்துக் காட்டுகிறார்." Comparative Grammar By Bishop Caldwell P. 453. "Some of the words which are contained in the following list, have Sanskrit as well as Classical or West Aryan analogies; but they have been place in this, rather than in the precending, list, because the West Aryan affinities are clearer, more direct, and more certain than the Sanskrit ones. The greater number, however, of the words that follow, though indubitably connected with the western tongues, and especially with the Greek and Latin, exhibit no analogy whatever to any words contained in the Sanskrit. If the existence of this class of analogies can be clearly established, it must be concluded either than the Dravidians were at an early period near neighbours of the West Aryan tribes, subsequently to the separation of their tribes from the Sanskrit speaking people, or that both races were descended from a common source. The majority of the Dravidian words which exhibit West Aryan analogies, do not belong to that primary, rudimental class to which the words that the Dravidian languages have in common with the Seythian are to be referred. Nevertheless, they are so numerous, many of them are so remarkable, and when all are viewed together, the analogy which they bring to light is so distinct, that an ultimate relation of some kind between the Dravidian and the Indo-European families, may be regarded as conclusively established." "பின் சொல்லப்படும் அட்டவணையில் உள்ள சில வார்த்தைகள் சமஸ்கிருதத்தோடும் மேற்றிசை ஆரிய அல்லது சிறந்தவிலக்கிய பாஷைகளோடும் சம்பந்தப்பட்டவைகளாயிருக்கின்றன. ஆனால் அவைகளைச் சமஸ்கிருத அட்டவணையில் சேர்க்காமல் மேற்கு ஆரிய பாஷையோடு வைத்ததற்குக் காரணம் என்னவென்றால், அந்தப் பாஷைகளோடு சேர்ந்த சம்பந்தங்கள் சமஸ்கிருத பாஷைச் சம்பந்தங்களைவிட அதிக தெளிவானவையாயும் அதிக நெருங்கினவையாயும் அதிக நிச்சயமானவையாயும் இருக்கின்றன. பின்வரும் வார்த்தைகளிலனேகம் முக்கியமான ஆரிய பாஷையாகிய கிரேக்கு லத்தீன் பாஷைகளோடு சந்தேகமின்றிச் சம்பந்தப் பட்டவைகளாயிருந்தும் சமஸ்கிருத பாஷையோடு எந்தவிதத்திலும் சம்பந்தப்பட்டிருப்பதாகத் தெரியவில்லை. இவ்வித வகுப்பான சம்பந்தங்கள் இருப்பதின் நிச்சயத்தை நாம் ஸ்தாபிக்கக்கூடுமானால், திராவிடர் ஆதியில் மேற்கு ஆரிய ஜாதியாரோடு நெருங்கி வாசம் செய்தார்களென்றாவது அதாவது சமஸ்கிருதம் பேசும் ஜாதியாரைவிட்டுப் பிரிந்த பிறகு அப்படி வசித்தார்களென்றாவது அல்லது இரு ஜாதியாரும் ஒரே பொதுவான ஜாதியிலிருந்து உற்பத்தியானார்களென்றாவது நிச்சயமாய்ச் சொல்ல ஏதுவுண்டு. மேலை யாரிய சம்பந்தத்தைக் காண்பிக்கும் திராவிட வார்த்தைகள் பெரும்பாலும் திராவிட பாஷைகளுக்கும் சீத்திய பாஷைகளுக்கும் பொவாயுள்ள ஆதி பூர்வ பாஷைக்குச் சொந்தமானவையல்ல வென்றாலும், அவைகள் எல்லாவற்றையும் ஒன்று சேர்த்துக் கவனிக்கையில் அவைகளுக்குள்ள சம்பந்தம் வெகு தெளிவாய்த் தெரிவதாலும், திராவிட பாஷைகளுக்கும் அல்லது இந்து ஐரோப்பிய பாஷைகளுக்கும் ஏதோ ஒருவிதமான சம்பந்தம் இருந்திருக்க வேண்டுமென்று நிச்சயமாய் ஸ்தாபிக்கலாம்." மேற்கண்ட வசனத்தினால் பாஷை சம்பந்தமான ஒற்றுமையைக் கவனித்தால் மனிதர் ஆதியில் ஒரே பொதுவான ஜாதியிலிருந்து உற்பத்தியானார்களென்றும் தமிழ்ப் பாஷையோடு மற்றெல்லாப் பாஷைகளுக்கும் சம்பந்தமிருப்பதினால் அவர்கள் ஆதியில் ஒரு பாஷை பேசியிருக்க வேண்டுமென்றும் நிச்சயிக்க ஏதுவிருக்கிறதென்பதை பின்வரும் வசனத்தில் காணலாம்.
|