பக்கம் எண் :

58
கருணாமிர்தசாகரம்-முதல் புஸ்தகம்-முதல் பாகம்-இந்திய சங்கீத சரித்திரச் சுருக்கம்

V.

சீத்தியபாஷையிலுள்ள தமிழ் வார்த்தைகளுக்கு உதாரணம்.

1.அக்கா20.கத்தி41.செவி62.பழமை
2.அத்தன்21.கடி, கறி42.கேள்63.பல்
3.ஆத்தாள்22.கட்டு34.கொல்64.பால்
4.அன்னை23.கண்ணீர்4.கோ, கோன்65.பிடி
5.அப்பன்24.கப்பல்45.கோழி66.பிறகு
6.அம்மாள், அம்மை, அம்மன்25.கரு46.சாரல்67.பிள்ளை
7.அரு26.கரடி47.சா68.புகை
8.அல், ஏல் (எதிர்மறை விகுதிகள்)27.கழுகு48.சேறு69.பெண்
9.ஒளவை28.கழுத்து49.தலை70.வயிறு
10.அலை29.கல்50.தீ71.வாழ்
11.ஆறு30.கள்ளம்51.தூசி72.மனை
12.ஆம்31.காற்று52.தோல்73.மரம்
13.இரும்பு32.காய்ச்சு53.நக்கு74.மறி
14.நீஞ்சு33.கால்54.நகை75.மலை
15.உயர34.கிழ55.நாய்76.முறுமுறு
16.உள்35.கீழ்56.நெற்றி77.முட்டை
17.எழுது36.குதிரை57.நெய்78.வானம்
18.எலும்பு37.குடில், குடிசை58.நோக்கு79.வாய்
19.ஒக்க38.குளிர்59.ஞாயிறு80.விழி
39.கை60.பசுமை81.வெளிச்சம்
40.கெபி61.பையன், பயல்

மேலேகாட்டிய ஐந்து அட்டவணைகளில் கண்ட வார்த்தைகளைக் கவனிக்கையில், அவைகள் ஒவ்வொன்றும் தமிழ் நாட்டில் சாதாரணமாய் கல்வியறிவில்லாத ஏழை ஜனங்களும் நாளது வரை பேசிக் கொண்டிருக்கிற வார்த்தைகளா யிருக்கிறதேயொழிய உயர்ந்த வார்த்தைகளாயில்லை. இவைகளே பிற நாட்டுக்குக் கொண்டு போகப்பட்டிருக்க வேண்டுமென்றும் அவ்விடத்தில் பல திரிபுகளையும் விகாரங்களையுமடைந்து வித்தியாசப்பட்டிருக்கின்றனவென்றும் நாம் நினைக்க வேண்டும். இங்கே கண்ட வார்த்தைகளை முதலாக வைத்துக்கொண்டு விகுதி, இடைநிலை, சாரியை, சந்தி, விகாரம், வேற்றுமை உருபுகள், அடைமொழி முதலியவை சேர்ந்து எத்தனையோ வார்த்தைகளுண்டாகி நாளது வரையும் வழக்கத்திலிருந்து வருகின்றனவென்று தமிழ் மக்கள் நன்றாய் அறிவார்கள். இதினால் மேற்காட்டிய அட்டவணையில் கண்ட வார்த்தைகள் தமிழ் வார்த்தைகளேயென்று நிச்சயமாகச் சொல்லலாம். மேலும் தமிழ்ப்பாஷைக்கும் சமஸ்கிருத பாஷைக்கும் பொதுவான வேறொரு பாஷையிலிருந்து வழங்கிவரும் வார்த்தைகள் 25 என்று சொல்வதை நாம் கவனிக்கையில் அவ்வார்த்தைகள் பூர்வந்தொடுத்து தமிழ் பாஷையிலே வழங்கி வருகிற வார்த்தைகளென்பதையும் பூர்வ நூலாகிய தொல்காப்பியத்தில் சொல்லப்படும் வார்த்தைகளாகவே காணப்படுகிறதென்பதையும் அறிவாளிகள் அறிவார்கள். மேற்காட்டிய 25 வார்த்தைகளும் தமிழ் வார்த்தைகளென்பதற்குச் சந்தேகமில்லை.

மேற்கண்ட சில தமிழ்மொழிகளும் இன்னும் பல மொழிகளும் பல மாறுதல்களுடன் அநேக பாஷைகளில் கலந்திருக்கிறதென்பதை இன்னும் பூரணமாய் விசாரிப்போமானால், சாதாரணமாய்த் தமிழில் வழங்கும் வார்த்தைகளே மற்றவர்கள் பாஷைக்கு ஆதியாயிருந்திருக்க வேண்டுமென்று நாம் எண்ண இடந்தரும்.