தமிழ் மொழிகள் பலவாறாகத் திரிந்து மற்ற பாஷைகளில் வழங்கி வருவதைக் காட்டும் சில உதாரணங்கள். இயற்கையின் அமைப்பில் ஜீவப்பிராணிகளினிடம் விளங்கி நிற்கும் சில ஓசைகள் தமிழ்ப் பாஷையின் சில எழுத்துக்களின் ஓசையையும் சில வார்த்தைகளின் ஓசையையும் ஒத்ததாயிருக்கின்றன. அம்மா என்ற பசுங்கன்றின் ஓசையை யறியாத இந்துக்கள் ஒருவருமில்லை. அப்படியே அக்கா, அக்கோ என்ற குயிலின் அல்லது அக்காபட்சியின் ஓசையுமிருக்கிறது. கா, கி, கு, கூ, சு, ஈ, ஊ, மா, மே, ஞா, முதலிய எழுத்துக்களை முதற்கொண்டு தொனிக்கும் ஜீவப்பிராணிகளின் சத்தத்தையும் நாம் கேட்டிருப்போம். இவ்வோசையின் எழுத்துக்களுக்கு இணங்க வழங்கி வரும் வார்த்தைகளை நாம் கவனித்தால் மனுட தோற்றத்தின் ஆதிகாலம் இவ்வார்த்தைகளையும் ஓசைகளையு முடையதாகவே யிருந்ததென்று தோன்றுகிறது. எந்தப் பாஷையிலும், கேட்கவும் கற்றுக்கொள்ளவுங்கூடாத சிறு பிராயத்தில் பசுங்கன்றின் ஓசையை ஒத்த மா, ம்மா, அம்மா என்ற வார்த்தைகளைச் சொல்வதை நாம் காணலாம். இவ்வார்த்தை நாவினாலும் உதட்டினாலும் உச்சரிப்பதற்கு வெகு சுலபமான முந்திய வார்த்தையாயிருக்கிறது. இதன் பின் உதடுகளினாலும் நாவினாலும் வெகு சுலபமாய் உச்சரிக்கக்கூடிய அப்பா, அக்கா, அத்தை, மாமா, தாத்தா, பாப்பா முதலிய வார்த்தைகள் படிப்படியாய் பழக்கத்திற்கு வருகின்றன. இவ்வார்த்தைகளை நாம் கூர்ந்து கவனிப்போமானால் அகாரம் என்ற முதல் எழுத்தும் அம்மா என்ற பசுங்கன்றின் ஓசையும் அக்கா என்ற பட்சியின் ஓசையும் முதல் முதல் வழங்கிவந்திருக்க வேண்டுமென்று நினைக்க இடமிருக்கிறது. 1.அம்மா என்ற தமிழ்மொழி, சமஸ்கிருதத்தில் அம்பா, அம்மா என்றும், ஹை ஜெர்மன் பாஷையில் அம்மா என்றும், ஆஸ்கன் பாஷையில் அம்மா என்றும், ஐஸ்லாண்டு பாஷையில் அம்மா = பாட்டி என்றும், ஜெர்மன் பாஷையில் அம்மே = Nurse என்றும், சாமாய்டி பாஷையில் அம்மா என்றும், ஜெனிசை பாஷையில் அம், அம்மா என்றும், எஸ்ரியன் பாஷையில் எம்மா என்றும், பினீசிய பாஷையில் எமா என்றும், சிந்து பாஷையில் அமா என்றும், மலைய பாஷையில் அம என்றும், தூலு பாஷையில் அம்மே = father அப்பே = mother என்றும், மங்கோலிய பாஷையில் அமா = father என்றும், திபேத்து பாஷையில் மா, மோ ஸ்திரீ என்றும், எபிரேய பாஷையில் ஏம், இம் என்றும், சிரியாக் பாஷையில் ஆமோ என்றும் வழங்கி வருகிறது. 2.அப்பா என்று சொல்லுகிற தமிழ் வார்த்தையை கவனிப்போமானால் தெலுங்கு கன்னடங்களில் அப்பா என்றும், பூத்தான் பாஷையில் அப்பா என்றும், போத்தியா பாஷையில் அபா என்றும், எபிரேயு பாஷையில் ஆப் என்றும், கல்தேய பாஷையில் அப்பா 3 என்றும், சீரியா பாஷையில் ஆயோ என்றும், ஆரமேக் பாஷையில் அப்பா 3 என்றும், சிங்கள பாஷையில் அப்பா என்றும் சொல்லப்படுகிறது. 3.அக்காள் என்ற தமிழ் வார்த்தை சமஸ்கிருதத்தில் அக்கா = தாய் என்றும், கன்னடம் தெலுங்கில் அக்கா = மூத்த சகோதரி என்றும், மகராஷ்டரத்தில் அகா என்றும், தன் கூசியன் பாஷையில் அக்கின் என்றும், மங்கோலிய பாஷையில் அக்கான் என்றும், தீபேத்து பாஷையில் அக்கே என்றும், துருக்கி பாஷையில் எகே என்றும், மார்டுவின் பாஷையில் அகி என்றும், உக்கிரியன் பாஷையில் இக்கியன் என்றும், லேப்பிஸ் பாஷையில் அக்கே = சம்சாரம் அல்லது பாட்டி என்றும், மாங்கல் பாஷையில் அகா = மூத்த சகோதரன் என்றும், ஐகர்
|