பாஷையில் அகா = மூத்த சகோதரன் என்றும், தன்கூசியன் பாஷையில் அகி = மூத்த சகோதரனென்றும், ஓஸ்டியாக் பாஷையில் இக்கி = மூத்தவன் என்றும், பினிசிய பாஷையில் உக்கோ = மூத்தவன் என்றும், அங்கேரிய பாஷையில் அக் என்றும், வழங்கி வருகிறது. மேல்கண்ட வார்த்தைகளைக் கவனிக்கையில் கலப்பில்லாத 10 சேர் பாலில் முதல்வன் ஒரு சேர் பால் எடுத்துக்கொண்டு ஒருசேர் தண்ணீர் விட்டு வைத்துப்போனான். இரண்டாவதாக வந்த ஒருவன் ஒருசேர் பால் எடுத்துக்கொண்டு ஒரு சேர் தண்ணீர் விட்டு வைத்துப்போனான். இப்படி பலர் எடுத்தபின் போகப்போக பால் நிறமும் மணமும் குறைந்து பச்சைத் தண்ணீர் ஆவது போல பாஷையின் வார்த்தைகளும் அடையாளம் தெரியாமல் ஆகின்றன. அம்மா என்ற தமிழ் வார்த்தை அம்மே, அம்மை, அமா, அம, அம், எமா, எம்மா, ஏம், இம், அம்பா, அப்பே என்றும் ஆமோ என்றும் மா, மோ என்றும் மாறி வருகிறது. அக்காள் என்ற தமிழ் வார்த்தை அக்கா, அக்காம், அக்கின், அக்கே, அகி, அக்கி, அகா, இக்கி, எகே, இக்கியன், உக்கோ, ஆக் என்றும் மாறி வருகிறது. அப்பா என்ற தமிழ் வார்த்தை அப்பா, அபா, ஆபோ, ஆப் என்றும் மாறி வருகிறது. 4. மேலும் கோ, கோன் என்ற தமிழ்மொழி திராவிட பாஷைகளில் வழங்குகிறது. அதுபோலவே துருக்கி பாஷையிலும் மங்கோலிய பாஷையிலும் கான், காகான் என்றும், ஒஸ்டியாக் பாஷையில் கோன் என்றும் சீத்திய பாஷையில் கோ என்றும், வழங்குகிறது. 5.கொல் என்ற தமிழ்ப்பதம் ரஷியன் பாஷையில் கொல்யு என்றும், இங்கிலீஷில் கில், குவேல் என்றும், பினீசிய பாஷையில் கியோல் என்றும், முரமிஸ் பாஷையில் கோனம் என்றும், சிர்ஸானியன் பாஷையில் குலா என்றும், அங்கேரி பாஷையில் அல் என்றும், நார்வே பாஷையில் கில்லா என்றும், டச் பாஷையில் கொல்லன் என்றும், ஐஸ்லேண்ட் பாஷையில் கொல்லா என்றும், மாறி வருகிறது. கொல் என்ற தமிழ்ப்பதம் கொல்யு, கொல்லன் கொல்லா, கில், கில்லா, குலா, குவேல், கோலம், கியோல், அல் என்றும் மாறி வருவது மிகவும் விந்தையாயிருக்கிறது. 6. இப்படியே குடி என்ற தமிழ்ப்பதமானது வீடு என்று அர்த்தப் படுகையில் சமஸ்கிருதத்தில் குடி, படகுடிறம் = கீத்துக்குடிசை என்றும், குடும்பா என்றும், தெலுங்கு கன்னடங்களில் குடி = கோவில் என்றும், குடிசை = சிறு வீடு என்றும் பினீசிய பாஷையில் கோட்டா என்றும், சரமிஸ் பாஷையில் குடா என்றும், மார்டுவின் பாஷையில் குடோ என்றும், ஒஸ்டியாக் பாஷையிலும் சாக்சன் பாஷையிலும் காட் என்றும் வழங்கிவருகிறது. 7.நீர் என்ற தமிழ்மொழ சமஸ்கிருதத்தில் நீர, நீரம் என்றும், தெலுங்கில் நீரமு, நீரு, நீள்ளு என்றும், காண்டு பாஷையில் நீர் என்றும், பிராகு பாஷையில் ஈர் என்றும், கிரேக்க பாஷையில் நீரோ என்றும் வழங்கிவருகிறது. 8.மின் என்னும் வார்த்தையை ஆதாரமாக்கொண்டு, பிறந்த மீன் என்னும் தமிழ் மொழி சமஸ்கிருதத்தில் மீனம், மீன் என்று வழங்குகிறது. 9.பட்டணம், பட்டி என்ற தமிழ்ப்பதம் கன்னடத்தில் அட்டி என்றும், தெலுங்கில் பட்டி என்றும், சமஸ்கிருதத்தில் பேட்டா, பட்டம், பட்டணம், பத்தனம் என்றும் வழங்குகிறது. 10.கடு, கடிமை, கடி என்ற தமிழ்ப்பதமானது சமஸ்கிருதத்தில் கடு, கடுகா, கடுகு என்று வழங்குகிறது.
|