பக்கம் எண் :

84
தமிழ்நாட்டின் செல்வமும் அதன் நாகரீகமும்.

நிலையும் கதவும் இப்படியிருக்குமானால் மற்றவைகளைச் சொல்ல வேண்டியதில்லையென்றே குறுக்கிச் சொன்னார். வாயிற்கதவைக் காண்பீர் என்று சொல்வதைக் கவனிக்கையில் அவ்வாயிற் கதவு மிகவும் உன்னதமானதாகவும் விசாலமுடையதாகவு மிருக்கவேண்டும். பென்னம் பெரிய மிருகங்களும் ஜீவஜெந்துக்களும் அக்காலத்தில் இருந்தனவென்பதை நாம் அறிவோம். பிரமாண்டமான யானைகளின்மேல் நவரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்ட அம்பாரி வைத்து அதின் மேல் ராஜாக்கள் போகுங்காலத்தில் அதில் நிற்கிறவனுக்கும் அவன் பிடித்திருக்கிற முத்துக் குடைக்கும் மேல் மிகவும் உயரமாக கோட்டை வாசலிருக்கக் கட்டுவது வழக்கம். கதவுகள் பொன்னாயிருந்ததினால் அவைகளின் பிரகாசத்தால் வெகு தூரத்திலிருந்தே அதைக் காணலாம் என்பதே கருத்து. மேலும் ராவணனுடைய கோட்டையைப் பிடித்தபின் ராவணன் முகம், கை, கால் சுத்தம் செய்யுமிடத்தில் போட்டிருந்த பெரிதும் விலைமதிக்கக்கூடாததுமான மரகதப் பச்சைக் கற்களைக் கண்டு இராமர் ஆச்சரியத்துடன் பார்த்ததாகச் சொல்லப்படுகிறது. இதைக் கொண்டு ராவணனுடைய கோட்டையும் அவன் ஐசுவரியமும் தென்பாண்டி நாட்டின் வளப்பத்திற்கு ஒத்ததாகவேயிருந்ததென்று சொல்ல ஏதுவிருக்கிறது. ராவணனுடைய நாட்டில் இலங்கை ஒருபாகமாகச் சொல்ல வேண்டுமேயொழிய அவன் பிரதான இருப்பிடம் இந்துமகா சமுத்திரத்தில் வெகுதூரம் தெற்கேயிருந்திருக்க வேண்டுமென்று தோன்றுகிறது.

பாரத யுத்தம் நடந்த காலத்தில் பஞ்சபாண்டவருக்கு உதவியாக யுத்தம் முடியும் வரை சேரநாட்டரசனாகிய உதியன் சேரலாதன் என்னும் சேரன் அவர்களுக்கு உணவு அளித்து சேனைகளுக்கு மிகவும் உதவினான் என்று சொல்லப்படுகிறது.

ராவணன் மிகுந்த பலசாலியாகவும் பத்துத் தலைகளுடன் நீண்டகாலம் அரசாட்சி செய்து கொண்டு வந்தவனாகவும் அவனுடைய ராஜ்யம் இந்தியாவில் விந்தியமலை வரையும் விசாலித்திருந்ததாகவும் விந்தியமலைக்குத் தென்பக்கத்திலிருந்த அவனுடைய பிரதானிகளாகிய கான், தூஷணன் என்றவர்கள் 14,000 வெங்கல ரதங்களுடன், சிசேரா 900 இருப்பு ரதங்களுடன் இஸ்ரவேலரோடு சண்டைக்கு வந்ததுபோல, ராமருடன் யுத்தத்துக்கு வந்தார்கள் என்பதாகவும் நாம் அறிவோம். அப்படியே இவன் மிகுந்த கலைவல்லோனாக இருந்தானென்றும் சங்கீதத்திலும் நாம் அறிவோம். அப்படியே இவன் மிகுந்த கலைவல்லோனாக இருந்தானென்றும் சங்கீதத்திலும் முக்கிய தேர்ச்சி பெற்றிருந்தானென்றும் நாம் பார்க்கலாம். கைலாச மலையை வேரோடு பிடுங்கி எடுக்கையில், அதன் கீழ் பரமசிவனால் நசுக்கப்பட்டானென்றும் அப்போது பாரம் பொறுக்காமல் பரமசிவனைச் சாமவேதத்தினால் கானம் பண்ணினானென்றும் சொல்லப்படுகிறது. அவன் காலத்திலிருந்த ரிக்குவேதம் உதாத்த அநுதாத்தமாகிய ரி, த, க, நி என்னும் சுரங்களோடு மாத்திரம் கானம் செய்யப்பட்டதாகவும் அதன் பின் சாமவேதத்தை ச, ம, ப என்னும் சுவரித ஓசைகளையும் சேர்த்து கானம் பண்ணினானென்றும் தோன்றுகிறது. சாமவேதம் சங்கீதத்தில் வழங்கும் சுவரங்களை சம்பூர்ணமாயுடைய தாயிற்று. தெய்வ தோத்திரங்களடங்கிய சாம வேதத்தை சங்கீதத்தின் பூர்ணசுரங்களோடு முதல் முதல் பாடினவன் ராவணனே. வேதத்திற்கு முன் இல்லாத சில சுரங்களை அவன் சேர்த்துக் கானம் பண்ணினதும் இதைக் கொண்டே பரமசிவன் மனது இறங்கி சாப விமோசனம் செய்ததும் நாளது வரையும் சொல்லப்படுகிறது. தென்தேசத்துக்குரிய பண்முறைப்படி ஆரோகண அவரோகணங்களை பூர்த்தி செய்து சாமகானம் பண்ணினான் என்று காண்கிறோம்.

இயல் இசை நாடகம் என்னும் முத்தமிழ் இலக்கணமாகிய அகத்தியத்தை அகஸ்தியர் சொல்வதற்கு முன்பே சங்கீதம், பரதம் முதலிய அரியவித்தைகள் இந்நாட்டில் மிகவும் விஸ்தாரமாயிருந்தனவென்று அவர் சொல்லும் சில சூத்திரங்களைக் கொண்டு புலப்படுகிறது.