பக்கம் எண் :

132
தென்னிந்திய சங்கீதம் வேறு, வடஇந்திய சங்கீதம் வேறு என்பதைப்பற்றி.

The Music and the Musical Instruments of Southern India, by C.R. Day. P. 12.

"Of the two systems practised in Southern India at the present time, the Hindustani is somewhat akin to that of Northern India and Bengal. It is practised mostly by Mussalman musicians while the Karnatic is confined more to those of the Southern races. The latter which may be called the national music of the South, if far more scientific and refined than the Hindustani and its professors are, as a rule, men of much better education, a fact that is not without influence upon their music and seems apparent in all their melodies byt particularly in the renderings they give of them."

"தற்காலம் தென்னிந்தியாவில் வழங்கும் இரண்டு முறைகளில் இந்துஸ்தானி சங்கீதமானது, வடஇந்தியாவிலும் பங்களாத்திலும் வழங்கும் சங்கீதத்திற்குச் சற்று ஒத்திருக்கிறது. அது விசேஷமாய் மகமதிய சங்கீதக் காரராலும் கர்நாடக சங்கீதமானது தென்னிந்திய ஜாதியாராலும் முறையே உபயோகிப்பப்படுகின்றது. தென்னிந்திய ஜாதியாரின் சங்கீதமென்றழைக்கப்படும் கர்நாடக சங்கீதமானது இந்துஸ்தானி சங்கீதத்தை விட அதிகசாஸ்திரோக்தமானதும் அதிக சுத்தமானதுமாயிருப்பது மல்லாமல் அதைப்படிக்கும் வித்வான்களும் இந்துஸ்தானி சங்கீதத்தைப்படிப்பவரைவிடக் கல்வியறிவில் தேர்ந்தவர்களாயிருக்கிறார்கள் என்பது பெரும்பாலும் உண்மையே. இப்படிக் கல்வியில் அபிவிருத்தியில்லை யென்று சொல்லுவதானது இந்துஸ்தானி சங்கீதத்தில் வழங்கும் இராகங்களையும் விசேஷமாய் அவைகளை அவர்கள் பிரஸ்தாரம் செய்து காண்பிப்பதையும் கவனித்தால் நன்றாய் விளங்கும்."

மேல் வசனங்களில் தென்னிந்திய ஜாதியரின் சங்கீதமென்றழைக்கப்படும் கர்நாடகமானது இந்துஸ்தானி சங்கீதத்தைவிட சாஸ்திரயுக்தமானதென்றும் கலப்பில்லாமல் சுத்தமாயிருக்கிறதென்றும் கல்வி அறிவில் தேர்ந்தவர்களால் அப்பியாசிக்கப்பட்டு வருகிறதென்றும் சிறந்த ராகப் பிரஸ்தார முடையதாயிருக்கிற தென்றும் சொல்லுகிறார்.

தென்னிந்தியாவில் தென்பாகத்தில் அழிந்துபோன தென்னிந்திய கண்டத்தில் தென் மதுரையிலிருந்த காலத்தையும் அதிலிருந்த சங்கப் புலவர்களையும் அதில் சங்கீதம் மிகவும் தேர்ச்சி பெற்றிருந்த தென்பதையும் நாம் இதன்முன் பார்த்திருக்கிறோம். அவர்களில் சங்கீதத்தைப் பழகியவர்களும் வீணைவாசிக்கத் தேர்ந்தவர்களும் தெய்வ சந்நிதியில் நர்த்தனம் பண்ணி தெய்வத்தைத் தொழுது கொண்டவர்களும் யாரென்று விசாரிப்போமேயானால் அவ்விராஜ்யத்தையாண்ட முடிமன்னர்களும் அவதாரமூர்த்திகளும் இளவரசர்களும் பிரபுக்களுமாயிருந்தார்களென்று நாம் பெருமை பாராட்டிக்கொள்வோம். கிரீடாதிபதிகளாகிய தங்கள் அரசர்கள் சங்கீதத்திலும் பரதத்திலும் மிகுந்த பிரியமுள்ளவர்களாயிருக்கிறார்களென்று அறிந்த மற்றவரும் தென்னிந்தியாவிற்கு வந்த பிறகும் சங்கீதத்தையும் பரதத்தையும் மிகவும் அப்பியாசித்துத் தேர்ந்தவர்களானார்கள். மேலும், ராஜாங்கத்தை விட்டு தபசுசெய்யச் சென்ற ராஜரிஷிகளும் அவர்கள் சிஷ்யர்வர்க்கங்களான தென்னாட்டு அந்தணரும் தங்கள் தபசுக்கு அனுகூலமாக சங்கீதத்தை உபயோகப்படுத்திக்கொண்டு வந்தார்கள். இவ்விதமாக ஜனங்களில் உயர்ந்தவர்களாக மதிக்கப்படும் தபசிகளாலும் கற்றறிந்தவர்களாலும் ஆரியராலும் சங்கீதம் பேனப்பட்டு மிக அருமையுடையதாக எண்ணப்பட்டது. இப்படியாவராலும் அருமையாகக் கொண்டாடப்பட்ட சங்கீதம் கோவில்களிலும் வைதீக கருமங்களிலும் கலியாணங்களிலும் உபயோகிக்கப்பட்டு வந்தது .

தென்னாட்டில் பாண்டிய ராஜ்யம் நாதனற்றுப்போனபின் சங்கீதமும் தேடுவாரற்றுப்போக தமிழ் நாட்டு மூவேந்தர்களிலொருவரான சோழராஜாக்களால் விருத்தியடைந்துவந்தது. தமிழ் நாடுகளில் ஒன்றாகிய சோழநாடும் சோழ அரசர்களை இழந்தபின் வடுக ராஜாக்களாலும் அவர்களுக்குப் பின் மகாராஷ்டிரராஜாக்களாலும் இற்றைக்கு 60 வருஷங்களுக்கு முன் வரையும் ஆளப்