பட்டு வந்தது. அதில் சோழராஜாக்களாலும் நாயக்க ராஜாக்கள் சிலராலும், மகாராஷ்டிர ராஜாக்கள் சிலராலும் ஒருவாறு சங்கீதமும் பரதமும் பேணப்பட்டு வந்தன. ஆதிகாலந்தொட்டுத் தொடர்ச்சியாய்த் தென்னிந்தியாவிலேயே சங்கீதம் வளர்ந்து வந்திருக்கிறதென்பதை பின்வரும் வாக்கியங்களில் காணலாம். The Music and the Musical Instruments of Southern India, by C.R. Day, P. 5 "Music has almost without interruption flourished there (in Southern India) from very remote ages. The higher branches of musical profession were formely confined to either Brahmins (Bhagavatars) or to men of very high caste. Music being of divine origin was regarded as sacred, and it was considered impious for any but men of the caste to wish to acquire any knowledge of its principles. It was and still is called the fifth Veda. Hence the ancient Brahmins of the country would have excommunicated any of their number who would have so far presumed as to betray the sacred writings to any but the elect, whose mouths only were esteemed sufficiently holy to utter words so sacred. Indeed it was the knowledge of which they were prossessed that was chief cause of the reverence and adoration paid to the Brahmins of old and which gave them power and influence they prized so much. It was thus that the ancient musicians sang their own composition." "சங்கீதமானது தென்னிந்தியாவில் ஆதிகாலந்தொட்டு தொடர்ச்சியாய் வளர்ந்து வந்திருக்கிறது. முற்காலத்தில் சங்கீதத்தை உயர்ந்ததொழிலாகக்கொண்டவர்கள் பிராமணபாகவதர்களாயாவது உயர்குலத்தைச் சேர்ந்தவர்களாயாவது இருந்தார்கள். சங்கீதமானது கடவுளிடமிருந்து ஜனித்தபடியால் அது வைதீக முறையைச்சேர்ந்ததாக எண்ணப்பட்டதுமாத்திரமல்ல, அதின்முறைகளை உயர்குலத்தார் மாத்திரம் படிக்கலாம் மற்றவர்படித்தால் அது பக்திக்குவிரோதமென்றும் எண்ணப்பட்டது. சங்கீதமானது ஆதிமுதல் ஐந்தாம் வேதமாயிருந்ததுமாத்திரமல்ல, எல்லாராலும் அப்படியே ஒப்புக்கொள்ளப்பட்டு அந்தப் பேரால் அழைக்கப்படுகிறதாயிமிருக்கிறது. ஆகையால் இந்தியாவின் ஆதிபிராமணரல்லாத மற்றவருக்கு யாராவது சொல்லிக்கொடுக்கத் துணியும்பட்சத்தில் அவர்களை ஜாதியிலிருந்து விலக்கிப்போட்டதுமல்லாமல், வேதவிஷயங்களை எடுத்துச்சொல்வதற்கு தங்கள் வாய்கள்மாத்திரமே பரிசுத்தமானவையென்று எண்ணியும் வந்தார்கள். ஆதிபிராமணருக்குச் செலுத்தப்பட்ட வணக்கமும் மரியாதையும் அந்தஸ்தும் அதிகாரமும் வெகு மேன்மையாக எண்ணிவந்த அவர்கள் செல்வாக்கும் இந்தக்காரணத்தினாலேயே. ஆகையால் ஆதி சங்கீதவித்வான்கள் தங்களுடைய சொந்தசாஹித்தியங்களையே பாடிவந்தார்கள்." இவ்வாக்கியங்களைக் கவனிக்கையில் சங்கீதமானது கடவுளிடத்திலிருந்துண்டான தென்றும் அதை மிகுந்த மேன்மையாய் அதன் ரகசியங்களை மற்றவர் அறியாவண்ணம் வைத்திருந்தார்களென்றும் சொல்லுகிறார். ஆரியர் தென்னிந்தியாவிற்கு வரும் முன்னதாகவே சங்கீதமும் அதைச்சேர்ந்ததான பரதம், தாளம் முதலிய அங்கங்களும் மிக விஸ்தாரமடைந்து வீணை, புல்லாங்குழல், மிருதங்கம் முதலிய வாத்தியக் கருவிகளுடன் அப்பியாசிக்கப்பட்டுவந்ததென்றும், அவைகள் கோயில்களிலும் ராஜ அரண்மனைகளிலும் முக்கியமாய் உபயோகிக்கப்பட்டு வந்ததென்றும் இதன் முன் பார்த்திருக்கிறோம். ஆரியர் தென்னாட்டிற்கு வந்தபின் தென்னிந்திய சங்கீதத்தைக் கற்றுக்கொண்டு அதில் தேர்ந்தவர்களானார்கள். வேத சுலோகங்களை எப்படி நாளது வரையும் பிறருக்குச் சொல்லிக் கொடுக்கக்கூடாது என்ற எண்ணமுடையவர்களாயிருக்கிறார்களோ அதுபோலவே மற்றவரிடத்திலிருந்து கற்றுக்கொண்ட தென்னிந்திய சங்கீதத்தையும் பிறருக்குச் சொல்லிக் கொடுக்க மனமற்றவர்களானார்கள். அன்றியும் பூர்வமாய்ச்செய்த தமிழ் உருப்படிகளை நீக்கி
|