புதிதாக தங்கள் பரம்பரைக்கென்று சமஸ்கிருதம் தெலுங்குபோன்ற பாஷைகளில் உருப்படிகள் செய்து அவற்றையே வழங்கினார்கள். அவைகள் முற்றிலும் பூர்வதமிழ்நடையையே அனுசரித்து இருக்கிறதேயொழிய வேறில்லை. இதினால் காலக்கிரமத்தில் தென்னிந்தியாவினின்றுண்டான சங்கீதம் வடநாட்டின் சமஸ்கிருதத்திலிருந்துண்டானதாக எண்ணும்படியாயிற்று. மேலும் கர்நாடக சங்கீதமும் இந்துஸ்தான் சங்கீதமும் வெவ்வேறு என்பதையும் இந்துஸ்தானி சங்கீதத்தைவிட கடவுளிடமிருந்துண்டானதாக எண்ணப்படும் கர்நாடக சங்கீதத்தில் கடவுளுக்கிருக்கும் தேஜசும் பிரகாசமும் சூழ்ந்துகொண்டிருக்கின்றனவென்றும் பக்திக்குரிய நூல்கள் யாவும் இச்சங்கீதத்தில் சம்பந்தப்பட்டேயிருக்கிறதாகவும் பின்வரும் வாக்கியங்களில் காணலாம்.. The Music and the Musical Instruments of Southern India. by. C.R.Day. P. 2, 3 and 4. "Since the Sangita parijala which is believed to be one of the latest of these Sanskrit works, had been written by Ahobila, two separate schools or systems of music have arisen and are now known by the names of Hindustani and Karnatic. The Karnatic appears to have been elaborated as a distinct system subsequent to the advent of the Aryans to the south-of India. The two systems although sprung from the same origin have since undergone independantly considerable changes and are now totally distinct from each other. Of Hindu music in Southern India, since the fall of Hindu Empire of Vijayanagar Tanjore has been the only school and from it those of Travancore and other places have doubtless been founded. Mahomedan music taken as a whole,. has little to recommend itself even at the present day. The ideas professed by Hindus offer a curious contrast for music from a Hindu standpoint. It is associated with all that is bring and sweet in life; its origin ascribed directly to divine providence causes it to be regarded as surrounded by a halo of sanctity. Almost all the religious literature of the Hindus breathes music." "ஸமஸ்கிருத நூல்களில் சொற்பகாலத்துக்கு முன்தான் எழுதப்பட்டது என்று ஒப்புக்கொள்ளப்பட்டவைகளில் ஒன்றாகிய சங்கீத பாரிஜாதம் (Sangita Parijatam) அகோபிலர் என்பவரால் எழுதப்பட்ட காலமுதல் இரண்டு வித்தியாசமான சங்கீத முறைகள் அதாவது இந்துஸ்தானி, கர்நாடகம் என்பவை உண்டாயிருக்கின்றன. ஆரியர்கள் இந்தியாவின் தென்பாகத்தில் குடியேறின காலத்திற்குப் பிற்பாடு கர்நாடக சங்கீதமானது பிரத்தியேகமான ஓர் முறையாய் ஏற்படுத்தப்பட்டதாகத் தெரிகிறது. இரண்டு முறைகளும் ஒரே உற்பத்தியிலிருந்து உண்டானபோதிலும் தனித்தனியே ஒன்றற்கொன்று சம்பந்தமில்லாமலேயே பல மாறுதல்களை யடைந்து ஒன்றற்கொன்று முற்றும் பேதமானவைகளாய்க் காணப்படுகின்றன. விஜயநகர ராஜ்யம் விழுந்த காலமுதல் தென்னிந்தியாவில் சங்கீத முறைகளில் தஞ்சைகள் முறை ஒன்றுதான் விசேஷமானதாகத் தெரிகிறது. இந்த நகரிலிருந்துதான் திருவனந்தபுரத்துக்கும் மற்ற இடங்களுக்கும் சங்கீத முறைகள் பரவின. மகம்மதிய சங்கீதத்தைத் தொகையாய் எடுத்துக்கொள்ளும் பட்சத்தில், தற்காலம் யாவராலும் பிரியப்பட்டு ஒப்புக்கொள்ளக்கூடிய அம்சங்கள் அதில் அதிகம் கிடையாது. ஆனால் இந்து சங்கீதத்தைப் பார்த்தாலோ, இந்துக்களுடைய சங்கீத அம்சங்களுக்கும் யாவரும் ஆச்சரியப்படக்கூடிய சில வித்தியாசங்கள் ஏற்படுத்துகின்றன. இந்துக்களுடைய சங்கீதமானது ஏதேது மகிமையாயும் நமது ஜீவியத்தில் இன்பமாயும் உள்ளது என்று நினைப்போமோ அவைகளோடெல்லாம் சம்பந்தப்பட்டேயிருக்கிறது. சங்கீதமானது கடவுளிடமிருந்து உண்டானது என்கிற எண்ணம் பூர்வமாயிருக்கிறபடியால் கடவுளுக்கிருக்கும் ஒருவிதமான தேஜசும் பிரகாசமும் அதை எப்போதும் சூழ்ந்து நிற்கிறதாகக் கொண்டாடப்படுகிறது. இந்துக்களுடைய பக்திக்குரிய நூல்களெல்லாம் சங்கீதவாசனையுள்ளதாகவேயிருக்கின்றன."
|