பக்கம் எண் :

135
கருணாமிர்தசாகரம்-முதல் புஸ்தகம்-முதல் பாகம்-இந்திய சங்கீத சரித்திரச் சுருக்கம்

இவ்வாக்கியங்களைக் கவனிக்கையில் சற்றேறக்குறைய 300 வருஷங்களுக்கு முன்னிருந்த பாரிஜாதக்காரர், அக்காலத்திற்கு சுமார் 400 வருஷங்களுக்கு முன்னிருந்த சங்கீத ரத்னா கரத்தின் சுருதிமுறை தென்னிந்திய கானத்தில் வழங்கிவந்த சுருதிகளுக்கு ஒத்துவரவில்லையென்ற அபிப்பிராயத்தையுடையவராய் இப்போது வீனையில் வழங்கிவரும் 12 சுரங்களை எடுத்துக்கொண்டு மீதியான பத்து சிறு சுரங்களையும் தள்ளி அளவு சொல்லுகிறார். அவர் வாக்கியங்களில் மீதியான பத்தையுந் தள்ளி ராக லட்சணம் சொல்லுகிறேன் என்கிறார். இதைக்கொண்டு அவர் காலத்திலேயே சங்கீத ரத்னாகரர் சுருதிமுறை கர்நாடக சங்கீதத்தின் சுருதிமுறைக்கு ஒத்ததல்லவென்ற விவாதம் இருந்ததாகத் தெரிகிறது. "துவாவிம்சதி சுருதிகள்" என்ற சொல் எப்படி வந்ததென்பதைப்பற்றி இதன் பின் பார்ப்போம். கர்நாடக சங்கீதம் பாரிஜாதக்காரருக்கு பிறகுண்டானதென்று தவறுதலாகச் சொன்னவர்களின் அபிப்பிராயத்தைக்கொண்டு Capt. Day இப்படி எழுதினாரேயொழிய மற்றபடியல்ல. அவருக்கு தென்னிந்திய சங்கீதத்தின் உண்மை தெரிந்தவர்கள் விபரம் சொல்லியிருப்பார்களானால் இந்திய சங்கீதத்தின் ஆதார நியாயங்களை வெகு நுட்பமாக உலகத்துக்குச் சொல்யிருப்பார். இந்தியாவின் பூர்வத்தையும் அதன் கலைகளையும் விசாரிக்க வரும் மேற்றிசை கனவான்களில் அநேகர் சில சிலச சமயங்களில் மிகவும் சொற்ப அறிவுடையவர்களால் வழிகாட்டப்பட்டு அவ்விடத்திலுள்ள காரியங்களை அவர்கள் மூலமாய் அறிந்துகொண்டு போகிறார்கள். ஒரு சிறிய மூக்கணாம் கயிற்றில் கட்டப்பட்ட மாடு அக்கயிற்றின் மூலமாக நடத்தப்படுவதுபோல இதுவும் கல இயல்பாகிறது. இதினால் விவேகிகள் சில சமயங்களில் தப்பான அபிப்பிராயம் கொள்வதை அடிக்கடி நாம் காண்கிறோம். இந்திய சங்கீதத்தைப்பற்றிய நுட்பம் இன்னதென்றறியாமல் சுமார் 2,500 வருஷங்களாக தவறுதலாக அபிப்பிராயமுண்டாகி விவாதங்கள் நடந்து வருகிறதென்பதை நாம் அறிவோமானால் இதைப் பெரிதாக நினைக்கமாட்டோம்.

ஆரியர்கள் இந்தியாவின் தென்பாகத்தில் குடியேறின காலத்திற்குப் பிற்பாடு கர்நாடக சங்கீதமானது பிரத்தியேகமான ஓர் முறையாக ஏற்படுத்தப்பட்ட தென்பதாகத் தெரிகிறதென்கிறார். இது உண்மையே. ஆரியர்கள் கடைச்சங்ககாலத்திலும் அதற்குப் பின்னும் தமிழ் நாட்டில் வந்து தமிழைக்கற்று தமிழ் இலக்கியங்களுக்கு உரையெழுதவும் நூல்கள் இயற்றவும் ஆரம்பித்தார்களென்றும், அதினால் சமஸ்கிருதமொழிகள் அங்கங்கே காணப்படுகின்றனவென்றும், தமிழின் பூர்வீகத்தை சந்தேகிக்கும்படியான வார்த்தைகளும் கலந்திருக்கின்றனவென்றும், அழிந்துபோன தமிழ் நூல்களின் சாரத்தை சமஸ்கிருதத்தில் செய்திருக்கலாமென்றும் இதன்முன் சொன்னோம். அதுபோலவே கர்நாடக சங்கீதமென்ற பிரத்தியேகமான ஒரு முறையும் இந்துஸ்தானி என்று தற்காலத்தில் வழங்கும் வடநாட்டின் சங்கீதமுறையென்று எழுதப்பட்டதாக இங்கே காணப்படுகிறது. இவ்விரண்டும் ஒரே உற்பத்தியிலிருந்து உண்டானதாகவும் அப்படி உண்டானபோதிலும் தனித்தனியே ஒன்றற்கொன்று சம்பந்தமில்லாத பலமாறுதல்களையும் உடைத்தாயிருக்கின்றதென்றும் தெளிவாகச் சொல்லுகிறார். இதனால் வெகு பூர்வமாயுள்ள தென்னிந்திய சங்கீதத்தின் சுருதிமுறையின் ரகசியம்தெரியாமல் துவாவிம்சதி சுருதிகளென்று எழுதிய சமஸ்கிருதமுறையொன்றும் அதன்பின் தென்னிந்தியகானத்தில் பாண்டித்தியமடைந்த வித்வான்கள் தென்னிந்திய சங்கீதத்தை அனுசரித்து எழுதிய பாரிஜாதம்போன்ற சமஸ்கிருதநூல்களும் ஆக இரண்டுமுறை யுண்டானதாகச் சொல்லுகிறார். அதில் தென்னிந்திய சங்கீதமுறை தஞ்சைநகர் ஒன்றில்தான் விசேஷமாயிருந்ததாகவும் அதன்பின் மற்றிடங்களுக்குப் போனதாகவும் சொல்லுகிறார். சுமார் 300 வருஷங்களுக்குமுன் தஞ்சை நகரிலிருந்த வேங்கடமகி எழுதிய "சதுர்தண்டிப்பிரகாசிகை"யும் அதன்பின் அதைப்போன்ற பல சிறு நூல்களும் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டனவென்றும் அவைகள் கர்நாடக சங்கீதத்தின்