பக்கம் எண் :

137
கருணாமிர்தசாகரம்-முதல் புஸ்தகம்-முதல் பாகம்-இந்திய சங்கீத சரித்திரச் சுருக்கம்

சொல்வோம்? மேற்றிசையிலுள்ள ஒரு உத்தமருக்கு இவ்வுன்னத எண்ணங்கள் உண்டாகுமானால், தென்னிந்திய சங்கீதத்தை தம்ஜீவனாகக்கொண்ட வித்வான்களுக்கு இவ்வெண்ணங்கள் உண்டாகவேண்டாமா? உண்டானால் மார்க்கம்தவறி வழங்கும் கானங்களில் பிரியப்படுவார்களா? மேலும், சங்கீதபாரிஜாதகாரருக்கும் (கி.பி. 1,600) சங்கீத ரத்னாகரம் எழுதிய சாரங்கதேவருக்கும் (கி. பி. 1,200) அவர்காலத்துக்கு முந்திய பரதருக்கும் (கி. பி. 500) அனேக ஆயிரவருஷங்களுக்கு முன்னே முதல் ஊழியில் கர்நாடகசங்கீதம் ஏற்பட்டதென்று நாம் அறியவேண்டும். மேலும், பாண்டிய ராஜ்யம் அழிந்தபின் தென்னிந்தியாவிலிருந்த விஜயநகரம், தஞ்சை நகரம், திருவனந்தபுரம், மைசூர் முதலிய இடங்களில் தென்னிந்தியசங்கீதம் அரசர்களின் அடைக்கலம்பெற்று ஆதரிக்கப்பட்டுவந்தது.

வடஇந்தியா கலகங்களினாலும் குழப்பத்தினாலும் நிறைந்தகாலத்தில் தென்னிந்தியா சமாதானமாயிருந்ததென்றும் சங்கீதம் விருத்தியானதென்றும் பின்வரும் வாக்கியங்களில் காணலாம்.

The Music and the Musical Instruments of Southern India. by C.R. Day. P. 13.

"The theory, modes and notation in present use throughout the whole of India are derived from that taught originally by the earlier Sanskrit musicians; but owing to the south of India having been less disturbed by internal commotions and having been more subject to Hindu rule than either Deccan or Northern Provinces, the science of music world seem to have been maintained and cultivated long after the original art had been lost in the north.

Hence Southern India music or as it is more usually called Karnatic, bears as far as we can judge, a very close resemblance to what the Sanskrit must have been, and in many cases we can clearly trace the development and refinements introduced from time to time upon the original Ragas."

"தற்காலம் இந்தியாமுழுதும் உபயோகப்படும் சங்கீத சாஸ்திர விதிகளும் ஆரோகணங்களும் சுரக் குறிப்புகளும் ஆதியில் சமஸ்கிருத சங்கீத வித்வான்களுடைய முறையிலிருந்தே உண்டாயின. ஆனால் தென்னிந்தியாவில் குழப்பங்களும் கலகங்களும் அதிகமாயில்லாமல் இந்து ராஜாங்கத்தின் நிழலில் இந்தியர் அமைதலாய்க் காலந்தள்ளி வந்தபடியால், தக்ஷணம் வட இந்தியா முதலிய நாடுகளைவிட இந்நாட்டில் சங்கீதமானது நிலையாய் இருந்துவந்ததுமல்லாமல் வடநாட்டில் சுத்தசங்கீதம் அழிந்துபோன பிறகுங்கூட தென்னிந்தியாவில் சங்கீதம் அபிவிர்த்தியடைந்தே வந்தது.

ஆகையால் கர்நாடக சங்கீதமானது ஆதி ராகங்களில் கால வித்தியாசத்துக்குத் தக்கபடி இடைக்கிடையே உண்டான சுத்தமாயும் அழகாயுமுள்ள அம்சங்களை நன்றே விளக்கிக்காட்டுகிறது.."

தமிழ் இசை நூல்களாகிய அகத்தியம் பஞ்சபாரதீயம் பெருநாரை பெருங்குருகு முதலிய இசைநூல்கள் ஜலப்பிரளயத்தால் அழிந்துபோயின வென்று முன் பார்த்தோம். அதன் பின்னுள்ள சில நூல்களும் கபாடபுரம் கடல்கொண்டகாலத்தில் அழிந்துபோயின. அரைகுறையான சில சிறுநூல்கள் கடைச்சங்காலத்தில் பேணுவாரற்றுப்போயின. அதன்பின் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட சில நூல்களே வழங்கிவருகின்றன. ஆகிலும், அந்நூல்களில் சொல்லப்படுகிறவைகளுக்கும் தென்னிந்தியசங்கீதத்திற்கும் மிகப்பேதமிருக்கிறதென்று அறிவாளிகள் உணர்வார்கள். இதன்முன், தென்னிந்தியசங்கீதம் வேறு, வடஇந்தியசங்கீதம் வேறு என்று பலகனவான்களின் அபிப்பிராயமும் இருக்கிறது. இவ்விரண்டுமுறைகளுக்கும் எவ்வித பேதமிருக்கிறதென்று பின்வரும் சிவாக்கியங்களில் சொல்லப்படுகிறது:-