அளவுடையவாயிருக்கவேண்டுமென்ற சாரங்கர் முறைக்கு விரோதமாக வெவ்வேறு இடைவெளிகளுள்ள சுரங்களை நிச்சயம்பண்ணியிருக்கிறார்கள். வடதேசத்தில் உபயோகிக்கும் சுரத்தின் இடைவெளிகளுக்கும் தென்தேசத்தில் உபயோகிக்கும் இடைவெளிகளுக்கும் மிகுந்த பேதமுண்டென்பதை பின்வரும் வாக்கியங்களில் காணலாம். Oriental Music, by Chinnasawmi Moodr. M.A., P. 1, 4, P. 37. "The mathematical ratios of the Indian Gamut likewise vary in the north and south of India. But this extremely complicated question may be left open for the present, because for all practical purposes the system of equal temperament which coincides almost exactly with the adjustment of frets on the Vina is found to meet all existing requirements more or less satisfactorily. It is admitted on all hands that this curious coincidence has been arrived at by the two nations through distinct processes, quite independently of each other; and historical research so far as it has been made, has established the fact that the Indian system has remained in statuquo for ages before the Lux ab oriente dawned upon the West." "வடதேசத்தில் உபயோகப்படும் ஆரோகண அவரோகணங்களில் ஒருசுரத்துக்கும் அதற்கு அடுத்துவரும் சுரத்துக்கும் இடையிலுள்ள இடைவெளியைப்பற்றிய கணக்குக்கும் தென்தேசத்தில் வழங்கும் சுருதி இடைவெளிகளின் கணக்குக்கும் வித்தியாசமுண்டு, ஆகையால் சிக்குமுக்கான இந்தவிஷயத்தைப்பற்றி இப்போது யோசிக்கத்தேவையில்லை. ஒருஸ்தாயியின் சுரங்களைச் சமபாகமாய்ப்பிரித்து அவைகளுக்கு ஸ்தானங்களை ஏற்படுத்தும் முறையானது (Equal temperament) வீணையில்வழங்கும் மெட்டுகளின் சுருதிகளை நிச்சயப்படுத்தும்முறைக்கு ஒத்ததாகவேயிருப்பதால் நமக்குச் சங்கீதவிஷயமாய் அவசியமாய் வேண்டியகாரியங்களையெல்லாம் பூர்த்திபண்ண அதுபோதுமானதாயிருக்கிறது. இப்படி இருஜாதியாரும் ஒருவர்வழியை ஒருவர்நோக்காமல் வெவ்வேறுவிதமான வழிகளின்மூலமாய் ஒரேவிதமான முடிவுக்கு வந்ததானது அதிகவிந்தையான இசைக்குறிப்பாயிருக்கிறது என்று யாவரும் ஒப்புக்கொள்ளுகிறார்கள். ஆகையால், இந்தியமுறையானது ஆதிகாலந்தொடங்கி அதாவது கீழ்த்தேசத்தின் சங்கீதவொளி மேல்தேசத்தில் பிரகாசித்தகாலத்துக்கு முன்னேயேதொடங்கி கையாடப்பட்டுவருகிறதென்று சரித்திர ஆராய்ச்சிகளின் மூலமாய் அறிய இடமிருக்கிறது." மேற்கண்டவசனங்களைக் கவனிக்கும்போது வீணையில் வழங்கும் மெட்டுகளினால் சுருதிகளை நிச்சயப்படுத்தும்முறை ஒருஸ்தாயியின் சுரங்களைச் சமபாகமாய்ப்பிரித்து ஸ்தானங்களை ஏற்படுத்தும்முறைக்கு ஒத்திருப்பதினால் சங்கீதவிஷயமான காரியங்களை பூர்த்திபண்ண இதுவே போதுமானதாயிருக்கிறது. இது விஷயத்தில் மேற்றிசையாரும் தென்னிந்தியரும் ஒரே விதமான அபிப்பிராயங்களை யுடையவர்களாயிருக்கிறார்கள் என்பது மிகவும் ஆச்சரியமாயிருக்கிறதென்றும் எண்ண இடமிருக்கிறதென்றும் சொல்லுகிறார். இற்றைக்கு 8,000-வருஷங்களுக்கு முன்னாலேயே நால்வகையாழும் அவற்றின் இலக்கணமும் தென்மதுரையிலிருந்த தென்று நாம் இதன்முன் பார்த்திருக்கிறோம். அவைகளைப்பற்றிய விபரமும் சுருதிசேர்க்கும் முறையையும் பின்னால் அறிவேவம். சாரங்கதேவரால் சொல்லப்பட்ட துவாவிம்சதி முறைகள் கர்நாடக சங்கீதத்திற்கு உதவியாயிருக்குமோ அல்லவோ என்பதைப்பற்றி நாம் அறிவது மிக அவசியம். கர்நாடகசங்கீதத்தில் வழங்கிவரும் சுருதிகள் இன்னதென்று இன்னும் நிச்சயமாய் சொல்லப்படாதிருப்பதினால் துவாவிம்சதிசுருதிகளுக்கும் இதற்குமுள்ள தாரதம்மியத்தை எடுத்துச்சொல்வது அவ்வளவு தகுதியாயிருக்கமாட்டாது. இருவிதசுருதிகளையும் இனிமேல் ஒத்துப் பார்க்கும்பொழுது, இரண்டிற்குமுள்ள தாரதம்மியத்தை தெளிவாய் அறிந்துகொள்வோம். ஆயினும், சங்கீதரத்னாகரம் என்னும் நூலில் கண்டபடி சுருதி
|