பக்கம் எண் :

140
தென்னிந்திய சங்கீதம் வேறு, வடஇந்திய சங்கீதம் வேறு என்பதைப்பற்றி.

குறிக்கிறோமென்று சொல்பவர்களின் கணக்குகளை சாரங்கதேவர் கணக்கோடு ஒத்துப்பார்க்க வேண்டியது மிகவும் முக்கியமாயிருக்கிறது...

சாரங்கதேவரோ ஒரு ஸ்தாயியில் வரும் சுரங்கள் சமஅளவுடையவை களாயிருக்க வேண்டுமென்றும் இடையில் வேறுசுரங்களுண்டாகாமல் ஒன்றற்கொன்று தீவிரமாய் படிப்படியாய்ப் போகவேண்டுமென்றும் சொல்லுகிறார். ஆனால் வடதேசத்தில் வழங்கும் கானம் இடைவெளிகளின் வித்தியாசமுடையதாய்க் காணப்படுகிறது. அவைகள் சுரங்களை அளந்து தந்தியை 2/3,3/4 என்று போடுவதால் உண்டாகும் பல பேதங்களென்று இதன் பின் பார்ப்போம். தென்னிந்தியாவில் வழங்கும் கர்நாடக சங்கீதமோ இவ்விரண்டிற்கும் வித்தியாசமான வேறொருமுறையென்று தெளிவாய்த் தெரிகிறது. மேலும், தென்னிந்திய சங்கீதத்தில் வழங்கிவரும் சுருதிகளையும் சங்கீத ரத்னாகரத்தில் வழங்கிவந்த சுருதிகளையும் நன்றாய் அறிந்த பைதாகரஸ் (Pythagoras) என்னும் கிரேக்க தத்துவசாஸ்திரியார் தென்னிந்திய சங்கீதத்தில் கண்ட ம, ப என்ற சுரங்களை காதிற்கேட்டு சுருதிகூட்டும் முறையைத் தாம் ஞாபகப் படுத்திக்கொள்ளும் பழக்கமில்லாமையால் 2/3,3/4 என்னும் அளவினால் குறித்துக்கொண்டு மேற்றேசத்தில் சங்கீதத்தை விருத்திசெய்தார். அதுமுதல் தென்னிந்திய சங்கீத சுரங்களின் அளவுக்கும் வித்தியாசம் ஏற்பட்டது. நாள் செல்லச்செல்ல அம்முறை சரியான பொருத்த முடையவையல்ல என்று சிலர் வாதிக்கவும் இதேமாதிரி அளந்துபோடும் முறையைச் சொல்லும் சங்கீத பாரிஜாதம்போன்ற நூல்களைப்பார்த்த இந்திய வித்வசிரோமணிகள் தாங்கள்பாடும் சிலராகங்களுக்கு அது பொருத்தமாயிருப்பதினால் பைதாகரஸ் கண்டுபிடித்த டையடானிக்ஸ்கேல் (Diatonic scale) சரியென்றும் அதற்குப்பின் ஹார்மனி (Harmony) வரும்படி ஆங்கிலேயர் கண்டுபிடித்த சம அளவுள்ளசுரங்கள் (Equal temperament) சரியல்லவென்றும் குறைசொல்ல ஆரம்பித்தார்கள். இப்படி பலபேர் சொல்லும் அபிப்பிராயங்களைக் கவனித்தவர்கள் சங்கீதரத்னாகர முறைப்படி 22-சுருதிகளையும் அத்தோடுகலக்க வெகு பிரயாசைப்பட்டார்கள். சமஸ்கிருத சுலோகங்களிலுள்ளவை உண்மையென்று ஸ்தாபிக்க முயன்றவர்கள் தென்னிந்திய சங்கீதத்தில் வழங்கிவரும் சுருதிகளையும் அவற்றை உள்ளதை உள்ளபடி காட்ட உதவியாயிருந்த வீணையையும் தவறுதல் உடையதென்று சொன்னாலொழிய தங்கள் வார்த்தை செல்லாதென்று அறிந்து நூதன அபிப்பிராயங்களையும் சொல்லுகிறார்கள். துவாவிம்சதி சுருதி என்னும் இடறுகல் இன்னதென்றறிவார்களானால் இப்படிச் சொல்லமாட்டார்கள். அறியாததினாலே சுருதியைப்பற்றிச் சொல்லும் இடமெல்லாம் சந்தேகமும் குதர்க்கமும், ஒழுங்கீனமும் உண்டாகின்றன. நுட்பமான சுருதிகளையுடைய தென்னிந்தியகானத்தில் வழங்கிவரும் சில ராகங்கள் துவா விம்சதி சுருதிகணக்கின்படியும் குறிக்கக்கூடியதா யிருக்கிறதினால் இது சரியென்று சொல்லவும் சொற்ப ஏதுவிருக்கிறது. ஆனால் 10, 15 ராகங்களுக்காக ஆயிரம் பதினாயிரமான ராகங்களை விட்டுவிடுகிறதா? ஒருஸ்தாயியில் 12 சுரங்கள் வருகிறதென்பதையும் அவைகள் இந்திய சங்கீதத்தில் வரும் சுரங்களுக்கும் வீணையில் வரும் சுரங்களுக்கும் சரியாயிருக்கிற தென்பதையும் பின்வரும் வாக்கியங்களில் காணலாம்.

The Music and the Musical Instruments of Southern India. by. C.R.Day, P.20

"The Hindu octave, like the European, is divided into twelve semitones-(The view is supported by both Sir W. Jones and Mr. Fowke. "Asiatic researches.") Sir W. Jones remarks "I tried in vain to discover in practice any difference between the Indian scale and that of our own but knowing my ear to be very insufficiently exercised, I requested a German professor of music of accompany on his violin a Hindu lutenist who sang by note some popular airs on the loves of Krishna and Radha and he assured me that the scales were the same; and Mr. Shore