afterwards informed me that when the voice of a native singer was in tune with his Harpsichord he found the Hindu series of seven notes to ascend like ours by a sharp third. From many experiments I am led to believe that a wrong idea as to the temperament of the Indian scale as practically employed has hitherto been held. I played over all the various scales shown later upon a pianoforte tuned to Equal temperament in the presence of several well known Hindustani and Karnatic musicians, all of whom assured me that they corresponded exactly to those of the Vina. Upon comparing the two instruments this was found to be the case as far as could be judged by the car alone, in every instance. Maula Bux, a man of considerable attainments, took pains to explain to me that the tempering of the modern Indian scales differed in no whit from the European." "இந்திய ஸ்தாயியானது ஐரோப்பிய ஸ்தாயியைப்போலவே 12 அரை சுரங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. (இந்தக் கொள்கையானது Sir W. Jones என்பவராலும் Mr. Fowke என்பவராலும் ஒப்புக்கொள்ளப்படுகிறது என்று Asiatic researches என்ற புத்தகத்தில் சொல்லியிருக்கிறது.) Sir w. Jones சொல்வதென்னவென்றால் அனுபோகத்தில் இந்திய scaleகும் நம்முடைய scaleகும் உள்ள வித்தியாசத்தைக் கண்டுபிடிக்கும்படிஎவ்வளவோ பிரயாசப்பட்டும் பயன்படவில்லை. மேலும் என்னுடைய சங்கீதஞானம் அதிக அப்பியாசிக்கப்படாதிருந்ததால் சங்கீதத்தில் தேர்ந்த ஒரு ஜர்மன் வித்வானை கிருஷ்ணன், இராதா இவர்களுடைய நேசத்தைப்பற்றிய சில சோகரசமுள்ள கீதங்களை ஒரு இந்து வித்வான் பாடுகையில் அவர்கூட பிடிலில் அவரை வாசிக்கச்சொல்லிக் கேட்டபோது அந்த ஜர்மன் வித்வான் இரண்டு scaleகும் யாதொரு வித்தியாசமில்லை என்று எனக்கு எதிர்மொழி பகர்ந்தார். Mr. Shore என்பவரும் ஒரு இந்தியவித்வான் தன்னுடைய Harpsiobord or Piano வக்கு இசைந்து பாடுகையில் இந்து scale ஆரோகணத்தில் சரியாய் நம்முடைய ஏழுநோட்டுக்கும் ஒத்திருந்ததென்றும் மூன்றாவது நோட்டாகிய காந்தாரம் நம்முடைய E. நோட்டைப்போலவே சற்று கூடத(sharp)லாய் இருந்ததாகவும் என்னிடம் சொன்னார். நான் சோதனைசெய்துபார்த்த அநேக காரியங்கள்மூலமாய் நான் என்ன அறிந்துகொள்ளுகிறேன் என்றால், அப்பியாசத்தில் இந்து scale உடைய temperamentஐப் பற்றி ஒரு தப்பான அபிப்பிராயம் இதுவரைக்கும் யாவருடைய மனதிலும் இருந்தது என்பதே. Equal temperament முறையாய் உண்டாக்கப்பட்டிருந்த ஒரு Piano வில் பேர்போன இந்துஸ்தானி கர்நாடக சங்கீதவித்வான்கள் முன்னிலையில் நான் பல scale ஐயும் வாசித்துக் காண்பித்தபோது அவர்களெல்லாரும் ஏகோபித்து பியானா Piano விலுள்ள சுரங்கள் வீணையின் சுரங்களுக்குச்சரியாய் ஒத்திருந்தது என்று உறுதியாய்ச் சொன்னார்கள். இரண்டு வாத்தியங்களையும் ஒத்திட்டுப்பார்க்கையில் செவியாறலாய்க் கேட்கும்போது இரண்டு வாத்தியயங்களிலுமுள்ள சுரங்களுக்கும் யாதொரு வித்தியாசமில்லையென்று தெரிந்தது. சங்கீதவித்தைகளிலும் மற்ற வித்தைகளிலும் பேர்போன Maula Bux என்பவர் தற்கால இந்திய scales முறைக்கும் ஐரோப்பிய முறைக்கும் கிஞ்சித்தேனும் வித்தியாச மில்லையென்று எனக்கு எடுத்துக்காட்ட அதிகப் பிரயாசப்பட்டார்." மேற்கண்ட வசனங்களைக் கவனிக்கையில் கர்நாடகசங்கீதத்தில் வழங்கிவரும் அநேக விஷயங்களை அறிந்துகொள்ள உதவியாயிருக்கும் தென்னிந்திய சங்கீதம் என்னும் புத்தகத்தை யெழுதிய Capt. Day என்பவர் ஆங்கிலேயர் தற்காலம் வழங்கிவரும் 12-சுரங்களும் தென்னிந்தியசங்கீதத்தில் வழங்கிவரும் 12-சுரங்களும் எவ்விதத்திலும் சரியாயிருப்பதாக பலபரிட்சைகள் பார்த்ததாகச் சொல்லுகிறார். அதோடு Equal temperament முறையான இச் சுரங்களைப்பற்றி ஒரு தப்பான அபிப்பிராயம் இதுவரைக்கும் யாவருடைய மனதிலும் இருந்தது என்கிறார். இந்த சம அளவுள்ள சுரவரிசை நால்வகையாழ்களின் விபரந்தெரிந்த அறிவாளிகள் இவை பூர்வம் தென்மதுரையில் தமிழ்நாட்டில் இருந்ததென்றும் அதிலும் நுட்பமான சுருதிமுறை அக்காலத்திலேயே வழங்கிவந்ததென்றும் அறிவார்கள். பூர்வமாயுள்ள அம்முறை அதன்பின் அளவினால் மேற்றிசைக்கும் போனதினால் அதன் நுட்பம் இழந்து சில விகாரங்களையடைந்து, அதுபோலவே அந்தப் பன்னிரண்டு சுரங்களுக்கு பூர்வ நூல்களில்
|