வழங்கிவரும் 22-அலகுகளும் ராசிமானமும் பொருத்தமும் அறியாமல் தவறுதலாக ஒருஸ்தாயியில் 22-சுருதி வருகிறதென்று பின்னுள்ள நூல்களில் எழுதப்பட்டது. இப்படி எழுதப்பட்ட ஒரு தவறுதலானமுறையும் Pythagoras கொண்டுபோன திட்டமில்லாத ஒரு முறையும் கூடி பல புத்தகங்களாக வெளிவந்திருக்கின்றன. "தான் கெட்டதுமல்லாமல் சந்திரபுஷ்கரணியையும் கூடக் கெடுத்தான்" என்பதுபோல தவறுதலாய்வழங்கும் இந்த இரண்டும் தங்களைப்போல தென்னிந்தியசங்கீதத்தையும் மூக்கறை பண்ணப்பார்க்கிறது. தென்னிந்தியசங்கீதம் தன்னை ஆதரித்துவந்த பாண்டியராஜர்கள் காலத்திற்குப்பின் விசேஷமாய் சோழ நாட்டில் ஆதரவு பெற்றுவந்தது. சோழநாட்டில் மிகுந்து வழங்கிவந்த தென்னிந்தியசங்கீதம் நீர்வற்றிய குளத்தின் பட்சிகளைப்போல பல இடங்களுக்கும் பறந்துகொண்டிருந்தது. எப்படியிருந்தாலும் தென்னிந்தியாவில் விசேஷமாயிருக்கும் சில க்ஷேத்திரங்களும் விஷ்ணு ஸ்தலங்களுமுள்ள வரையில் கர்நாடக சங்கீதம் இல்லாமல் போகாதென்பது நிச்சயம். ஏனென்றால் சங்கீதத்திற்கு மிகவும் முக்கிய வாத்தியமான வீணையும், குழலும் பூர்வகாலத்தில் வழங்கி வந்ததுபோலவே தற்காலத்திலும் வழங்கிவருகிறது. இவ்விரண்டும் முழுச் சுரங்களையும் அரைச்சுரங்களையும் அதன் பின்வரும் நுட்பச்சுரங்களையும் இன்னதென்று காட்டக்கூடிய விதமாக அமைந்திருக்கிறது. இப்படி மேன்மையும் மாறாததுமான ஒரு முறை கர்நாடக சங்கீதத்தில் ஏற்கனவே அமைக்கப்பட்டிருக்கிறதென்று பின்வரும் வாக்கியங்களில் காண்போம். The Music and the Musical Instruments of Southern India, by C. R. Day. P.29. "The following table kindly sent me by Mr.Ellis shows the results obtained from a most minute and careful examination made by him and by Mr. A.J.Hipkins of a beautiful old Vina, in perfect condition now in my possession. This instrument is between two or three hundred years old and is from the collection in the Tanjore palace. The results as will be seen tend to prove that the frets were purposely arranged for something like equal temperament. We see therefore that in India much the same results have been independently arrived at by the native musicians as have been attained by subsequent science in Europe." "அடியில் சொல்லும் அட்டவணையானது Mr. Ellis உம் Mr. A. J. Hipkins உம் சேர்ந்து ஒரு சிறந்த பழைய வீணையிலிருந்தும் அதி நுட்பமும் ஜாக்கிரதையுமான ஆராய்ச்சியினால் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த வீணை இப்போதும் என் வசமிருக்கிறது. இந்த வாத்தியம் 200, 300 வருஷங்களுக்கு முன் உள்ளது. தஞ்சை அரண்மனையில் சேகரம் செய்து வைக்கப்பட்டிருந்தவைகளில் ஒன்று, மெட்டுகள் வைக்கப்பட்டிருக்கும் ஒழுங்கைப்பார்த்தால் Equal temperament முறைக்கிணங்க சுருதிகளை உண்டாக்குவதற்காக செய்யப்பட்டதுபோலிருக்கிறது. அதிலிருந்து நாம் அறிவதென்னவென்றால் ஐரோப்பாவில் பிற்கால சாஸ்திர விஷயமாய் கண்டுபிடிக்கப்பட்ட சங்கதிகள் இந்தியாவில் சங்கீத வித்வான்களால் தங்கள் தங்கள் சொந்த அப்பியாசத்தினாலேயே இதற்கு முன்னே கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன என்பதே." மேற்கண்ட வரிகளைக் கவனிக்கையில் தஞ்சாவூரிலிருந்து இங்கிலாந்துக்குக் கொண்டுபோன வீணையைப்பற்றிய சில முக்கிய விஷயங்கள் சொல்லுகிறார். அவ்வீணை தஞ்சாவூர் அரண்மனையில் சேர்த்து வைக்கப்பட்டிருந்தவை களில் ஒன்றென்றும், அதில் பதிப்பிக்கப்பட்டிருந்த மெட்டுகள் Equal temperament முறைக்கிணங்க சுருதிகளை உண்டாக்குவதற்கு இசைந்தவைகளாகயிருந்ததாகவும் காண்கிறது. அதை Mr. Ellis உம் Mr. A.J. Hipkins உம் சேர்ந்து பரிட்சை பார்த்ததாகவும் அதில் ஐரோப்பாவில் 2,000 வருஷமாக வழங்கிவந்த Diatonic scale சுரங்களைப்போலில்லாமல் harmony பாடுவதற்கு அனுகூலமாக சுமார் 100, 200 வருஷங்களுக்கு முன் ஆங்கிலேய சங்கீத வித்வான்கள் கண்டுபிடித்திருக்கும் Equal temperament
|