பக்கம் எண் :

143
கருணாமிர்தசாகரம்-முதல் புஸ்தகம்-முதல் பாகம்-இந்திய சங்கீத சரித்திரச் சுருக்கம்

முறைக்கு ஒத்ததாயிருக்கிறதென்றும் வீணையின் சுரங்கள் இந்திய சங்கீத வித்வான்களால் தங்கள் சொந்த அபிப்பிராயத்தினாலேயே ஐரோப்பியர் கண்டுபிடிக்குமுன்னே கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றனவென்றும் சொல்லுகிறார்.

இவ்வளவுதூரம் முயற்சி எடுத்து விசாரித்து வீணையில் காணும் சுரங்கள் Equal temperament முறைக்குச் சரியாயிருக்கிறதென்றும் இது ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டிருந்த முறையென்றும் உள்ளதை உள்ளபடி வெளியிட்ட Capt. Day என்னும் கனவானுடைய பெருமையை இதன் முன்னும் சொல்லியிருக்கிறோம். இப்பேர்ப்பட்ட ஒருவர் இன்னும் சற்று நுட்பமாக விசாரித்தால் இம்முறை இற்றைக்குச் சுமார் 1,800 வருஷங்களுக்கு முன், இளங்கோவடிகள் எழுதிய சிலப்பதிகாரத்திலும் அதற்கு அநேக ஆயிரவருஷங்களுக்கு முன் எழுதிய தொல்காப்பியத்திலுமுள்ள சில வரிகளைககொண்டு அதிபூர்வமாயுள்ள தமிழ் நாட்டில் வழங்கி வந்த கீதமுறைமையில் சொல்லப்பட்டிருக்கிறதென்றும் அம்முறைப்படியே நாளதுவரையும் தமிழ் மக்கள் கானம் செய்கிறார்களென்றும் அறியாமற்போகார். சமஓசையுள்ள 12 சுரகானத்தோடு நுட்பமான சுருதிகள் சேர்ந்து வழங்கும் மற்றொரு பெருமுறையும் தென்னிந்தியாவில் நாளதுவரையும் வழங்கி வருகிறது. அவைகளில் வழங்கிவரும் சிறு சுரங்கள் இன்னதென்று பாடுகிறவர்களால் சொல்ல முடியாமலும் கேட்கிறவர்களால் கண்டுபிடிக்கமுடியாமலும் இருப்பதினால் அல்லவோ தென்னிந்திய சங்கீதத்தின் ரகசியத்தை அறிந்துகொள்ளாமல் போனார்கள். வீணையென்னும் சிறந்த வாத்தியத்தின் ரகசியத்தை அமைப்பும் அதன் ரகசியமும் அதன் பூர்வமும் அறியாத சிலர் மெட்டுகளோடு வழங்கும் வீணைகள் தற்காலம் ஐரோப்பாவில் வழங்கிவரும் சமஓசையுள்ள சுரங்களுக்கு (Equal temperament) ஏற்றவிதமாக சமீபகாலத்தில் தஞ்சாவூரில் அரசாண்டு கொண்டிருந்த சேவப்ப நாயக்கருக்காக அமைக்கப்பட்டதென்றும் சொல்லுகிறார்கள். உண்மையறிந்தால் அப்படிச் சொல்லமாட்டார். வீணையில் காணப்படும் மெட்டுகளின்படி உண்டாகும் சுரங்களே நமது ராகங்களில் பிரதானமாயிருக்கிறவையென்றும் அதில் இரண்டொரு சுரங்கள் ஒரு சுரத்திற்கு கூடிய அல்லது குறைந்த இம்முறையே பூர்வதமிழ் நூல்களில் எழுதப்பட்டிருந்ததென்றும் பூர்வ தமிழ்நாட்டில் வழங்கி வந்ததென்றும் தெளிவாக இதன்பின் தென்னிந்திய சங்கீத சுருதிமுறையில் அறிவோம்.

ஒரு காலத்தில் சகலகலைகளிலும் சிறப்புற்றோங்கிய தமிழ்நாடு பூர்வபூமியாயிருந்ததென்றும் அதிலேயே ஜாதிகள் உற்பத்தியானார்களென்றும் அவர்கள் பாஷையே பல பாஷைகளில் கலந்திருக்கிறதென்றும் தமிழ்நாட்டில் மூன்று சங்கங்களிலிருந்ததென்றும் அதில் இயல் இசை நாடகமென்னும் முத்தமிழ் ஆராய்ச்சி செய்யப்பட்டதென்றும் இசைத்தமிழாகிய சங்கீதத்திற்குரிய பல நூல்கள் எழுதப்பட்டிருந்ததென்றும் எழுதப்பட்ட சங்கீத நூல்கள் இருமுறை கடலால் அழிந்துபோயினவென்றும் பின்வந்தவர்களால் சங்கீதம் விருத்தியாகாமல் குறைந்ததென்றும் சுருக்கமாகப் பார்த்தோம். இப்படி குறைந்த நிலையிலுள்ள சங்கீதத்தைப்பற்றி தற்காலத்திலுள்ள சில கனவான்கள் சொல்லும் அபிப்பிராயத்தையும் கவனித்தோம். அதில் வடதேச கானம் இந்துஸ்தான் கானம் தென்னிந்தியகானம் என்னும் மூன்றிலும் தென்னிந்திய கானமே மார்க்க விதியுடைய தென்றும் சாஸ்திரயுக்தமானதென்றும் பலபல ராகங்களையுயைடயதென்றும் பிறர்சொல்லும் அபிப்பிராயத்தைத் தெளிவாகக் கண்டோம். தென்னிந்தியகானம் மாறாத அமைப்புடையதாய் அழகுடையதாய் தோன்றுவதற்கு ஒவ்வொரு ராகத்தில் வரும் சுரங்கள் ஆரோகண அவரோகணத்தில் இன்னின்ன சுருதியுடையசுரங்கள் வரவேண்டுமென்றும் சாடவ ஒளடவ ராகங்களில் விடப்பட்டசுரங்கள் அவ்விராகத்தின் சஞ்சாரம்முற்றிலும் விலக்கப்பட வேண்டுமென்றும் முன்பின்னாக வரும்சுரங்கள் (வக்கிரசுரங்கள்) ராகசஞ்சார முழுவதிலும் தன்