இனத்தையே முற்றிலும் ஒத்திருக்கவேண்டுமென்றும் ஆரோகண அவரோகணத்திலில்லாத சுரங்கள் ராகசஞ்சாரத்தில் முறை பிறழ்ந்து வழங்காமலிருக்க வேண்டுமென்றும் ஒவ்வொரு ராகத்தின் ஜீவசுரங்கள் இன்னதென்றும் இன்னின்னகாலத்தில் இன்னின்னசமயத்தில் இன்னின்னராகங்கள் பொருத்தமாயிருக்கு மென்றும் இன்னின்னபண்களுக்கு இன்னின்னராகம் சொல்லப்பட வேண்டுமென்றும் பரம்பரையாய் போதிக்கப்பட்டு வந்திருக்கிறது. இவ்விதமான முறைகள் தொன்றுதொட்டு ராஜாக்களின் மானியங்களினாலும் கோவில் சம்பள உம்பளங்களினாலும் ஆதரிக்கப்பட்டுவந்தன. மேலும் ராஜசபையிலும் கலியாணகாலங்களிலு பட்டண பிரவேசகாலங்களிலும் காலாகாலத்தில் சங்கீதம் உபயோகிக்கப்பட்டு வந்தது. அரண்மனைகளிலும் கோயில்களிலும் அந்திசந்தி மத்தியானம் என்னும் மூன்றுகாலங்களிலும் சங்கீதம் முழங்க தினக்கட்டளை ஏற்படுத்தி அதற்கு ஏற்றதாக பாடகர்களை நியமித்தார்கள். ஒரு ராஜ்யத்தில் ஆண்டு கொண்டிருக்கும் ராஜன் தன்ராஜ்யய்ததின் பலபாகங்களிலு பலகோயில்கள் கட்டி அதற்குவேண்டியபொருள்தரும் மானியங்கள்விட்டு ஆராதனை காலங்களில் மணி, சங்கு, பேரிகை, மத்தளம், நாகசுரம், புல்லாங்குழல், வீணை முதலிய வாத்திங்கள் வாசிப்பதற்கும் தேவாரம் திருவாசகம் திருவாய்மொழி முதலியதோத்திரங்கள் சொல்வதற்கும் பாடுவதற்கும் ஆடுவதற்கும் தகுதியான பேர்களை நியமித்து அவர்களுக்கு வீடும் சம்பள உம்பளங்களும் ஏற்படுத்திவைப்பது வழக்கம். இப்படியே ஏற்படுத்தப்பட்டிருக்கும் சிவக்ஷேத்திரங்களையும் விஷ்ணுக்ஷேத்திரங்களையும் நாம்மிகுதியாய் அறிவோம். அவைகளில் சங்கீத ஊழியஞ்செய்யும் வகுப்பார் சங்கீதத்தையே முக்கிய தொழிலாகக் கொண்டும் அதையே அப்பியாசித்துக்கொண்டும் அதையே விருத்திசெய்துகொண்டும் நாளதுவரையுமிருக்கிறார்கள் என்பதை நாம்யாவரும் அறிவோம். இம்முறை இன்று நேற்றல்ல, பல ஆயிர வருஷங்களாக நடந்துவருகிறது. இதினாலேயே தென்னிந்தியசங்கீதம் தேசிகம்கலவாமல் கர்நாடகசுத்தமாயிருக்கிறதென்று சொல்லவேண்டும். வாய்ப்பாட்டுப்பாடும் மற்றவர்கனாத்திற்கும் கர்நாடக சுத்தமாய் வாசிக்கும் ஒரு நாகசுரத்திற்குமுள்ள பேதத்தை அறிவாளிகள் காண்பார்கள். கோயில்களில்வாசிக்கும் வீணை, புல்லாங்குழல், மிருதங்கம், நாகசுரம் முதலிய இனியகானத்தில் ஈடுபட்டு சிலபிரபுக்களும் மற்றவரும் அதைப்பாடம்பண்ணி தாங்கள் ஆனந்தித்ததோடு பிறரையும் ஆனந்திக்கச் செய்தார்கள். அப்படிப்பட்டவர்களுள் சிலர் மிகுந்த பாண்டித்திய மடைந்து பிறரால் கொண்டாடப்பட்டு சன்மானிக்கப்பட்டும் வந்தார்கள். வேறுசிலர் பிரதிப் பிரயோஜனத்தை விரும்பாமல் பகவானைத் துதிப்பதிலேயே தங்கள் காலத்தைச் செலவிட்டார்கள். மற்றும்சிலர் சங்கீதசாஸ்திரத்தின் சிலசில பாசங்களை எழுதினார்கள். இப்படித்தோன்றிய வித்வசிரோமணிகளில் முக்கியமானவர்களைப்பற்றியும் சிலகுறிப்புகள் பார்ப்பது சங்கீதத்தைப்பற்றி விசாரிக்கும் நமக்குப் பிரியமாயிருக்குமென்று நம்புகிறேன்.
|